Sunday, June 30, 2024

Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 12

Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 12




12.   பூமியும்  பூவராஹனும்

स्वायम्भुवो मनुरथो जनसर्गशीलो
दृष्ट्वा महीमसमये सलिले निमग्नाम् ।
स्रष्टारमाप शरणं भवदङ्घ्रिसेवा-
तुष्टाशयं मुनिजनै: सह सत्यलोके ॥१॥

svāyaṁbhuvō manurathō janasargaśīlō
dr̥ṣṭvā mahīmasamayē salilē nimagnām |
sraṣṭāramāpa śaraṇaṁ bhavadaṅghrisēvā-
tuṣṭāśayaṁ munijanaiḥ saha satyalōkē || 12-1 ||

ஸ்வாயம்பு⁴வோ மனுரதோ² ஜனஸர்க³ஶீலோ
த்³ருஷ்ட்வா மஹீமஸமயே ஸலிலே நிமக்³னாம் |
ஸ்ரஷ்டாரமாப ஶரணம் ப⁴வத³ங்க்⁴ரிஸேவா-
துஷ்டாஶயம் முனிஜனை꞉ ஸஹ ஸத்யலோகே || 12-1 ||

குருவாயூரப்பா ,  ஹிரண்யாக்ஷன்  பூமா தேவியைப்  பாய்போல்  சுருட்டி  தூக்கிக்கொண்டு போய் கடலுக்கடியே மறைத்து வைத்தான் என்று  தெரிந்துகொண்டேன்.  அப்போது என்ன நடந்தது? மனிதர்கள்  உலகில்  தோன்ற காரணமாயிருந்த முதல் மனு, ஸ்வயம்பு மனு,  ஏன்  காரணமில்லாமல்  பூமி ஜலத்தில் மூழ்குகிறது  என்று கவலை கொண்டார்.   அகாலத்தில்  இப்படி ஏன்   பூமி ஜலத்தில் மூழ்குவானேன் ?  உடனே, மனு முனிவர்களுடன்,  எப்போதும்  உன்  திருவடி தாமரையில் சேவித்துக்கொண்டிருக்கும்  ப்ரம்மாவைக்  காண ஸத்யலோகம் சென்றார்.

कष्टं प्रजा: सृजति मय्यवनिर्निमग्ना
स्थानं सरोजभव कल्पय तत् प्रजानाम् ।
इत्येवमेष कथितो मनुना स्वयंभू: -
रम्भोरुहाक्ष तव पादयुगं व्यचिन्तीत् ॥ २ ॥

 kaṣṭaṁ prajāḥ sr̥jati mayyavanirnimagnā
sthānaṁ sarōjabhava kalpaya tatprajānām |
ityēvamēṣa kathitō manunā svayaṁbhūḥ
raṁbhōruhākṣa tava pādayugaṁ vyacintīt || 12-2 ||

கஷ்டம் ப்ரஜா꞉ ஸ்ருஜதி மய்யவனிர்னிமக்³னா
ஸ்தா²னம் ஸரோஜப⁴வ கல்பய தத்ப்ரஜானாம் |
இத்யேவமேஷ கதி²தோ மனுனா ஸ்வயம்பூ⁴꞉
ரம்போ⁴ருஹாக்ஷ தவ பாத³யுக³ம் வ்யசிந்தீத் || 12-2 ||

''என்ன இக்கட்டு  இது?  சிருஷ்டியின்   ஆரம்பத்திலேயே பூமி  நீருக்குள்  மூழ்கிவிட்ட தே. பிரும்மதேவா ! மக்களுக்கு வாழ இடம்  வேண்டுமே  .  பூமியை   மீட்கவேண்டும்   என்று  பிரார்த்தித்தார் ஸ்வயம்பு மனு. . பிரும்மாவுக்கு  தெரியும் இது கிருஷ்ணா  உன்னால் தான்  நடக்க முடியும்  என்று.    ஆகவே ப்ரம்மா  உன்னிடம்  பூமியை மீட்டுத்  தர வேண்டிக்கொண்டார்.

हा हा विभो जलमहं न्यपिबं पुरस्ता-
दद्यापि मज्जति मही किमहं करोमि ।
इत्थं त्वदङ्घ्रियुगलं शरणं यतोऽस्य
नासापुटात् समभव: शिशुकोलरूपी ।३॥

hā hā vibhō jalamahaṁ nyapibaṁ purastā-
dadyāpi majjati mahī kimahaṁ karōmi |
itthaṁ tvadaṅghriyugalaṁ śaraṇaṁ yatō:’sya
nāsāpuṭātsamabhavaḥ śiśukōlarūpī || 12-3 ||

 ஹா ஹா விபோ⁴ ஜலமஹம் ந்யபிப³ம் புரஸ்தா-
த³த்³யாபி மஜ்ஜதி மஹீ கிமஹம் கரோமி |
இத்த²ம் த்வத³ங்க்⁴ரியுக³லம் ஶரணம் யதோ(அ)ஸ்ய
நாஸாபுடாத்ஸமப⁴வ꞉ ஶிஶுகோலரூபீ || 12-3 ||

ப்ரம்மா  நாராயணனிடம்  உடனே  சென்று,  ப்ரபோ!   பூமியைக் காணவில்லை.    ஒருவேளை நீரில் மூழ்கி இருக்குமோ என்று  நான் முதலிலேயே நீரை வடிக்க   குடிக்க  ஏற்பாடு செய்தும்  பயனில்லை.  பூமி பாதாளத்தில்   நீரில் எங்கு மூழ்கி விட்டதென்று அறிய  முடியவில்லை.  என்ன  செய்வது?  நீ தான் வழிகாட்ட வேண்டும்  நாராயணா,   என்று  உன்  திருவடித் தாமரையை தஞ்சம் அடைந்தார். அப்போது, உன்னுடைய சங்கல்பத்தால்,  பிரும்மாவினுடைய மூக்கிலிருந்து பன்றிக்  குட்டியின் வடிவில்   நீ  அவதரித்தாய். அது நீ எடுத்த முடிவு. எப்போது என்ன முடிவு எடுக்க  வேண்டும் என்று தெரிந்தவனாயிற்றே நீ.

अङ्गुष्ठमात्रवपुरुत्पतित: पुरस्तात्
भोयोऽथ कुम्भिसदृश: समजृम्भथास्त्वम् ।
अभ्रे तथाविधमुदीक्ष्य भवन्तमुच्चै -
र्विस्मेरतां विधिरगात् सह सूनुभि: स्वै: ॥४॥

aṅguṣṭhamātravapurutpatitaḥ purastāt
bhūyō:’tha kuṁbhisadr̥śaḥ samajr̥ṁbhathāstvam |
abhrē tathāvidhamudīkṣya bhavantamuccai-
rvismēratāṁ vidhiragātsaha sūnubhiḥ svaiḥ || 12-4 ||

அங்கு³ஷ்ட²மாத்ரவபுருத்பதித꞉ புரஸ்தாத்
பூ⁴யோ(அ)த² கும்பி⁴ஸத்³ருஶ꞉ ஸமஜ்ரும்ப⁴தா²ஸ்த்வம் |
அப்⁴ரே ததா²வித⁴முதீ³க்ஷ்ய ப⁴வந்தமுச்சை-
ர்விஸ்மேரதாம் விதி⁴ரகா³த்ஸஹ ஸூனுபி⁴꞉ ஸ்வை꞉ || 12-4 ||

தோன்றிய சமயம்  கிருஷ்ணா  நீ  சிறிய  உருவில் இருந்தாய்.  அதிக பக்ஷம் கட்டை விரல் அளவே இருந்தவன் கண்ணிமைக்கும் நேரத்தில்  யானையின் அளவு வளர்ந்துவிட்டாய்.    வான் உயரத்திற்கு வளர்ந்த உன்னைப்  பார்த்த பிரும்மா,  ஸ்வயம்பு மனு மற்றும்  அனைத்து தேவர்களும்  முனிவர்களும்  திகைப்பிலும்  வியப்பிலும் அதிசயித்தபடி  நின்றனர்.

कोऽसावचिन्त्यमहिमा किटिरुत्थितो मे
नासापुटात् किमु भवेदजितस्य माया ।
इत्थं विचिन्तयति धातरि शैलमात्र:
सद्यो भवन् किल जगर्जिथ घोरघोरम् ॥५॥

kō:’sāvacintyamahimā kiṭirutthitō mē
nāsāpuṭātkimu bhavēdajitasya māyā |
itthaṁ vicintayati dhātari śailamātraḥ
sadyō bhavankila jagarjitha ghōraghōram || 12-5 ||

கோ(அ)ஸாவசிந்த்யமஹிமா கிடிருத்தி²தோ மே
நாஸாபுடாத்கிமு ப⁴வேத³ஜிதஸ்ய மாயா |
இத்த²ம் விசிந்தயதி தா⁴தரி ஶைலமாத்ர꞉
ஸத்³யோ ப⁴வன்கில ஜக³ர்ஜித² கோ⁴ரகோ⁴ரம் || 12-5 ||

பிரம்மனுக்கு  ஆச்சர்யம்.  எப்படி  என் மூக்கிலிருந்து  பன்றிக்  குட்டி ஒன்று  வெளிவந்தது.   ஏன்?  அளவிட முடியாத மகிமை உடைய இந்தப் பன்றிக்  குட்டி,  பின்னர்  வானளாவி நிற்கிறது.  இது சாதாரண விஷயமில்லை.  எல்லாம்  என்  அருமைத்  தந்தையாகிய   நாராயணன் செயல்.  வேறு  யாராகவும் இருக்க வழி இல்லை.  நடப்பதெல்லாம் நாராயணன் செயல் என்று அதனால் தான் நாம் அடிக்கடி சொல்கிறோம்.
இது  பகவானுடைய மாயையாக இருக்கலாம்   எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் உண்டு,  என்று பிரும்மன் யோசித்து  சமாதானம் அடைந்தார்.  அப்போது, மலையைப் போல் தோன்றிய பன்றி ஆக்ரோஷத்தோடு   பயங்கரமாக கர்ஜித்தது .

तं ते निनादमुपकर्ण्य जनस्तप:स्था:
सत्यस्थिताश्च मुनयो नुनुवुर्भवन्तम् ।
तत्स्तोत्रहर्षुलमना: परिणद्य भूय-
स्तोयाशयं विपुलमूर्तिरवातरस्त्वम् ॥६॥

தம் தே நினாத³முபகர்ண்ய ஜனஸ்தப꞉ஸ்தா²꞉
ஸத்யஸ்தி²தாஶ்ச முனயோ நுனுவுர்ப⁴வந்தம் |
தத்ஸ்தோத்ரஹர்ஷுலமனா꞉ பரிணத்³ய பூ⁴ய-
ஸ்தோயாஶயம் விபுலமூர்திரவாதரஸ்த்வம் || 12-6 ||

எங்கும்  எதிரொலித்த  அந்த  வராஹ  கர்ஜனையைக் கேட்ட   ஜனலோகம், தபோலோகம்,ஸத்யலோகம் ஆகியவற்றில் உள்ள முனிவர்கள்  இது பரமாத்மா உன் குரல் என்று  உன்னை ஸ்தோத்ரம் செய்தார்கள். அவர்களுக்கு  ''பயப்படவேண்டாம்  நான் பார்த்துக் கொள்கிறேன்'' என்ற  ஆறுதலைத் தந்தது  அந்த குரல். அடுத்த கணமே   சந்தோஷமாக  நாராயணன்  வராக ரூபத்தில்  சமுத்ரத்திற்குள் பாய்ந்தார்.

ऊर्ध्वप्रसारिपरिधूम्रविधूतरोमा
प्रोत्क्षिप्तवालधिरवाङ्मुखघोरघोण: ।
तूर्णप्रदीर्णजलद: परिघूर्णदक्ष्णा
स्तोतृन् मुनीन् शिशिरयन्नवतेरिथ त्वम् ॥७॥

ஊர்த்⁴வப்ரஸாரிபரிதூ⁴ம்ரவிதூ⁴தரோமா
ப்ரோத்க்ஷிப்தவாலதி⁴ரவாங்முக²கோ⁴ரகோ⁴ண꞉ |
தூர்ணப்ரதீ³ர்ணஜலத³꞉ பரிகூ⁴ர்ணத³க்ஷ்ணா
ஸ்தோத்ரூன்முனீன் ஶிஶிரயன்னவதேரித² த்வம் || 12-7 ||
   
சிலிர்த்த  ரோமங்கள்,    தாமிர வர்ணம்,  முறுக்கிக்கொண்டு  உயரமாக நிமிர்த்தப்பட்ட   வாலுடனும்,  பலம் மிகுந்த உடலுடன்,    முகத்தில்  வாயருகே   ரெண்டு பக்கத்திலும்  கூர்மையான தடித்த  உறுதியான மேல் நோக்கி வளர்ந்த பெரிய  கோரைப்பற்களுடன்  பலமிகுந்த  வாளிப்பான தோளுடனும் , கீழ் நோக்கிய மூக்குடனும், சுழலும் கண்களுடனும்  தோன்றிய  வராகம்  நாராயணன் என்று எவராலும்  அனுமானிக்க முடியாது.  

अन्तर्जलं तदनुसंकुलनक्रचक्रं
भ्राम्यत्तिमिङ्गिलकुलं कलुषोर्मिमालम् ।
आविश्य भीषणरवेण रसातलस्था -
नाकम्पयन् वसुमतीमगवेषयस्त्वम् ॥८॥

அந்தர்ஜலம் தத³னு ஸங்குலனக்ரசக்ரம்
ப்⁴ராம்யத்திமிங்கி³லகுலம் கலுஷோர்மிமாலம் |
ஆவிஶ்ய பீ⁴ஷணரவேண ரஸாதலஸ்தா²-
நாகம்பயன்வஸுமதீமக³வேஷயஸ்த்வம் || 12-8 ||

பெருத்த சப்தத்துடன்   வராஹன்  கடலில் குதிக்க,  பெருமளவு நீர்  வெளியே  தெறித்து விழ  நாராயணா, நீ  சமுத்திர பிரவேசம் செய்தபோது, கடல் அலைகள் உயர எழும்பி கலங்கின.   நீரில்  உள்ள  பெரிய  உயிர்வாழ்  மிருகங்களும், ஜந்துக்களும், தூக்கி எறியப்பட்டன.  சுறாக்கள்,  திமிங்கலங்கள்  நிலை குலைந்தன.    ரஸாதலம் எனும்  பாதாள லோகத்திலுள்ளவர்கள்,  நாக லோகத்திலுள்ளவர்கள் எல்லாம்  என்ன நடக்குமோ என்று கதி கலங்கி  ஸ்தம்பித்துப் போனார்கள். 8
 
दृष्ट्वाऽथ दैत्यहतकेन रसातलान्ते
संवेशितां झटिति कूटकिटिर्विभो त्वम् ।
आपातुकानविगणय्य सुरारिखेटान्
दंष्ट्राङ्कुरेण वसुधामदधा: सलीलम् ॥९॥

த்³ருஷ்ட்வா(அ)த² தை³த்யஹதகேன ரஸாதலாந்தே
ஸம்வேஶிதாம் ஜ²டிதி கூடகிடிர்விபோ⁴ த்வம் |
ஆபாதுகானவிக³ணய்ய ஸுராரிகே²டான்
த³ம்ஷ்ட்ராங்குரேண வஸுதா⁴மத³தா⁴꞉ ஸலீலம் || 12-9 ||

''ப்ரபோ!  குருவாயூரப்பா,  நாராயணா,  நீ  வராஹ  ரூபனாக   ரஸாதல  (பாதாள )லோகத்தின் நடுவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பூமியைக்  கண்டுபிடித்துவிட்டாய்.   பூமியை மீட்க வந்த உன்னை  எதிர்ப்பார்த்து  காத்திருந்து  எதிர்த்த  ராக்ஷதர்களை எமனுலகுக்கு அனுப்பி,  பூமியை ஜாக்கிரதையாக உனது  இரு பெரிய  கோரைப்பற்களின் இடையே அசையாமல் நிறுத்தி   மேலே  தூக்கினாய் .  பூமி  கடல் நடுவே  இன்றும் நம்மை தாங்கி  நிற்கிறதே.

अभ्युद्धरन्नथ धरां दशनाग्रलग्न
मुस्ताङ्कुराङ्कित इवाधिकपीवरात्मा ।
उद्धूतघोरसलिलाज्जलधेरुदञ्चन्
क्रीडावराहवपुरीश्वर पाहि रोगात् ॥१०॥

அப்⁴யுத்³த⁴ரன்னத² த⁴ராம் த³ஶனாக்³ரலக்³ன
முஸ்தாங்குராங்கித இவாதி⁴கபீவராத்மா |
உத்³தூ⁴தகோ⁴ரஸலிலாஜ்ஜலதே⁴ருத³ஞ்சன்
க்ரீடா³வராஹவபுரீஶ்வர பாஹி ரோகா³த் || 12-10 ||      

எண்டே  குருவாயூரப்பா!   நீ  அலகிலா விளையாட்டுடையவன்.   பூமியைக் காத்து  ரக்ஷிக்க  வராக அவதாரம் எடுத்த  பூவராக பெருமாளே!   நீ  பூமியை  கோரைப்பற்களின் இடையே   அசையாமல் நிறுத்தி தூக்கி வந்த காட்சியை மனதில் காண்கிறேன்.  முளை வந்த கோரைக் கிழங்கைப்போல்  பூமி  அப்போது தோன்றியது . மிகப் பெரிய சரீரத்தோடு,  கலங்கிய சமுத்திரத்திலிருந்து மேலே  எழும்பியவனே,  பூமியைக் காப்பாற்றிய உனக்கு என் ரோகத்திலிருந்து என்னைக் காப்பாற்றுவது  கஷ்டமான காரியமா?   என்னை ரக்ஷிப்பாயாக என்று நமஸ்கரிக்கிறார்  மேல்பத்தூர்  நாராயண நம்பூதிரி.

Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 11

 Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 11

 


11 மூன்று அசுர பிறவிகள்

क्रमेण सर्गे परिवर्धमाने
कदापि दिव्या: सनकादयस्ते ।
भवद्विलोकाय विकुण्ठलोकं
प्रपेदिरे मारुतमन्दिरेश ॥१॥

krameNa sarge parivardhamaane
kadaapi divyaaH sanakaadayaste |
bhavadvilOkaaya vikuNThalOkaM
prapedire maarutamandiresha ||

க்ரமேண ஸர்கே₃ பரிவர்த₄மாநே
கதா₃பி தி₃வ்யா: ஸநகாத₃யஸ்தே |
ப₄வத்₃விலோகாய விகுண்ட₂லோகம்
ப்ரபேதி₃ரே மாருதமந்தி₃ரேஶ || 1||

நாராயண நம்பூதிரி  குருவாயூரப்பன்  சந்நிதியில் அவன் எதிரில் அமர்ந்திருந்தாலும் எண்ணத்தில்  அவர்  பிரம்மன் படைப்பை ஆரம்பிக்கும் காலத்துக்கு போய் விட்டார்.  ''ஹே குருவாயூரப்பா!   சிருஷ்டி கார்யம்  படு வேகமாக  பெருகிக் கொண்டு வரும்போது  ப்ரம்மாவின் புத்ரர்கள்  உன்னை  தரிசிக்க வைகுண்டத்துக்கு வந்தார்களாமே   அப்படியா?''''ஆமாம்  என்று தலையாட்டினான் உண்ணிகிருஷ்ணன் .

मनोज्ञनैश्रेयसकाननाद्यै-
रनेकवापीमणिमन्दिरैश्च ।
अनोपमं तं भवतो निकेतं
मुनीश्वरा: प्रापुरतीतकक्ष्या: ॥२॥

manOj~nanaishreyasakaananaadyai
ranekavaapiimaNimandiraishcha
anOpamaM taM bhavatO niketa
muniishvaraaH praapuratiitakakshyaaH ||

மநோஜ்ஞநைஶ்ரேயஸகாநநாத்₃யை-
ரநேகவாபீமணிமந்தி₃ரைஶ்ச |
அநோபமம் தம் ப₄வதோ நிகேதம்
முநீஶ்வரா: ப்ராபுரதீதகக்ஷ்யா: || 2||

வைகுண்டம் அற்புதமாக இருக்குமாமே . எங்கும் கொட்டைகள்,  ஆறு வாசல்கள். உள்ளே  அழகிய நந்தவனங்கள்.  நைஸ்ரேயஸ்  என்று அதற்கு பெயராமே ?  பூத்துக் குலுங்கும்  புஷ்பங்கள்,கனிவர்க்கங்கள்.  தடாகங்கள், ஜிலுஜிலு என  தென்றல் காற்று.புத்தம் புதிய நவரத்னமயமாக இழைத்துக் கட்டிய  கட்டிடங்கள்.   கேட்டாலேயே  மதியை மயக்குகிறதே. இதெல்லாம் பார்த்த்து ரசித்துக்கொண்டே  அந்தமுனிவர்கள் உன்னை அடைந்தார்களா?
''ஆமாம்''  என்று புன்னகைத்தான்  குருவாயூரப்பன்

भवद्दिद्दृक्षून्भवनं विविक्षून्
द्वा:स्थौ जयस्तान् विजयोऽप्यरुन्धाम् ।
तेषां च चित्ते पदमाप कोप:
सर्वं भवत्प्रेरणयैव भूमन् ॥३॥

bhavaddidR^ikshuunbhavanaM vivikshuun
dvaaHsthau jayastaan vijayO(a)pyarundhaam |
teShaaM cha chitte padamaapa kOpaH
sarvaM bhavatpreraNayaiva bhuuman ||

ப₄வத்₃தி₃த்₃த்₃ருக்ஷூந்ப₄வநம் விவிக்ஷூந்
த்₃வா:ஸ்தௌ₂ ஜயஸ்தாந் விஜயோ(அ)ப்யருந்தா₄ம் |
தேஷாம் ச சித்தே பத₃மாப கோப:
ஸர்வம் ப₄வத்ப்ரேரணயைவ பூ₄மந் || 3||

வைகுண்டத்திற்குள் நுழைய  அனுமதி கிடைத்தாலும் உன்னை அங்கே காண்பது  எளிதில் முடியாதே?  உன் வாசல் காப்போர்கள் இருக்கவே இருக்கிறார்களே.  ஜெய விஜயர்கள். எவர் வந்தாலும் உன் அனுமதி இன்றி உள்ளே உன்னை தரிசிக்க விடுவார்களா?.  ஸனகாதி  முனிவர்கள்  தடுத்து நிறுத்தப்பட்டனர் . என்ன  எங்களையா தடுத்து நிறுத்துகிறீர்கள்?  என்று கோபம் கொண்டார்கள் ரிஷிகள்.  கிருஷ்ணா, என்ன அப்படிப் பார்க்கி றாய்? உனக்கு தெரியாமலா இது நடக்கும்?  இதுவும் உன் கபடநாடகமா?

वैकुण्ठलोकानुचितप्रचेष्टौ
कष्टौ युवां दैत्यगतिं भजेतम् ।
इति प्रशप्तौ भवदाश्रयौ तौ
हरिस्मृतिर्नोऽस्त्विति नेमतुस्तान् ॥४॥

vaikuNThalOkaanuchitapracheShTau
kaShTau yuvaaM daityagatiM bhajetam |
iti prashaptau bhavadaashritau tau
harismR^itirnO(a)sitvati nematustaan ||

வைகுண்ட₂லோகாநுசிதப்ரசேஷ்டௌ
கஷ்டௌ யுவாம் தை₃த்யக₃திம் ப₄ஜேதம் |
இதி ப்ரஶப்தௌ ப₄வதா₃ஶ்ரயௌ தௌ
ஹரிஸ்ம்ருதிர்நோ(அ)ஸ்த்விதி நேமதுஸ்தாந் || 4||

வைகுண்டத்தில்  விஷ்ணுவான நாராயணனைத் தரிசிக்க தடையா.?.. அக்கிரமம். இது.  த்வாரபாலகர்களே , தகாத காரியம் செய்த உங்களைச்  சபிக்கிறோம்.   நீங்கள் அசுரப்பிறவி எடுக்கக்  கடவது.    ஜெயவிஜயர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்.  கடமையைச் செய்வது தப்பா?  விதியின் கொடுமை.  என்ன செய்யமுடியும்?  முனிவர்களை வணங்கினார்கள். உங்கள் சாபம் பலித்தால்  அப்போதும் எங்களுக்கு ஸ்ரீமன் நாராயண னனின் நினைவு மனதில் இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்று அனுக்ரஹம் புரியுங்கள்''  என்று வேண்டினார்கள்.
तदेतदाज्ञाय भवानवाप्त:
सहैव लक्ष्म्या बहिरम्बुजाक्ष ।
खगेश्वरांसार्पितचारुबाहु-
रानन्दयंस्तानभिराममूर्त्या ॥५॥

tadetadaaj~naaya bhavaanavaaptaH
sahaiva lakshmyaa bahirambujaaksha |
khageshvaraamsaarpitachaarubaahu
raanandayamstaanabhiraamamuurtyaa||

நம்பூதிரி மேலும்  அங்கே நடந்ததை வர்ணிக்கிறார்.  ''நாராயணா,  ஜெயவிஜயர்களை நோக்கி  ரிஷிகள் குரலை உயர்த்தி பேசுவது  உனக்கு   கேட்டுவிட்டது .  தாமரைக்கண்ணா , லக்ஷ்மி தேவி சமேதனாக  ஒரு கையால்  கருடனின்  தோளை  அணைத்தவாறு  வாசலுக்கு வந்துவிட்டாய் .  சனகாதி முனிவர்களை பார்த்து வணங்கினாய்.   போதுமே  வேறு என்ன வேண்டும். முனிவர்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தார்கள். இல்லையா?ஆமாம் என்று தலைசாய்த்தான் உண்ணி  கிருஷ்ணன்.

ததே₃ததா₃ஜ்ஞாய ப₄வாநவாப்த:
ஸஹைவ லக்ஷ்ம்யா ப₃ஹிரம்பு₃ஜாக்ஷ |
க₂கே₃ஶ்வராம்ஸார்பிதசாருபா₃ஹு-
ராநந்த₃யம்ஸ்தாநபி₄ராமமூர்த்யா || 5||

प्रसाद्य गीर्भि: स्तुवतो मुनीन्द्रा-
ननन्यनाथावथ पार्षदौ तौ ।
संरम्भयोगेन भवैस्त्रिभिर्मा-
मुपेतमित्यात्तकृपं न्यगादी: ॥६॥

prasaadya giirbhiH stuvatO muniindraanananyanaathaavatha
paarShadau tau |
sanrambhayOgena bhavaisitrabhirmaamupetamityaattakR^
ipaM nyagaadiiH ||

ப்ரஸாத்₃ய கீ₃ர்பி₄: ஸ்துவதோ முநீந்த்₃ரா-
நநந்யநாதா₂வத₂ பார்ஷதௌ₃ தௌ |
ஸம்ரம்ப₄யோகே₃ந ப₄வைஸ்த்ரிபி₄ர்மா-
முபேதமித்யாத்தக்ருபம் ந்யகா₃தீ₃: || 6||

அவ்வளவு  தான்,  ரிஷிகள் தங்களை மறந்தார்கள்,உலகமே  அவர்களுக்கு   மறந்தது,  எங்கும்  நீயே தெரிந்தாய். உள்ளும் புறமும் உன்னையே  தரிசித்து,  சனகாதி முனிவர்கள்  ஆற்று வெள்ளம்போல்   உன் மேல் ஸ்தோத்திரங்கள் பாட ஆரம்பித்து விட்டா ர்கள்.  பகவானே,    நீ  அவர்களை  ஆசிர்வதித்து   தரிசனம் தந்து அவர்கள் விருப்பத்தை பூர்த்தி செய்தாய்.  முகம் வாடி நின்ற  ஜய விஜயர்களைப் பார்த்து, “என்னைத் தவிர வேறு கதியற்ற நீங்கள் மூன்று ராக்ஷஸ பிறவி எடுத்து  எதிரிகளாக கோபத்தோடு  என்னை எதிர்த்து முடிவில் என்னை வந்து அடையுங்கள்” என்று சொன்னாயாமே. ''குருவாயூ ரப்பன்  ஆம் என்று தலையசைத்தான்.

त्वदीयभृत्यावथ काश्यपात्तौ
सुरारिवीरावुदितौ दितौ द्वौ ।
सन्ध्यासमुत्पादनकष्टचेष्टौ
यमौ च लोकस्य यमाविवान्यौ ॥७॥

tvadiiyabhR^ityaavatha kashyapaattau
suraariviiraavuditau ditau dvau |
sandhyaasamutpaadanakaShTacheShTau
yamau cha lOkasya yamaavivaanyau ||

த்வதீ₃யப்₄ருத்யாவத₂ காஶ்யபாத்தௌ
ஸுராரிவீராவுதி₃தௌ தி₃தௌ த்₃வௌ |
ஸந்த்₄யாஸமுத்பாத₃நகஷ்டசேஷ்டௌ
யமௌ ச லோகஸ்ய யமாவிவாந்யௌ || 7||

அப்புறம் நடந்ததை புராணங்கள் நிறைய  சொல்கிறதே.  ஜெய விஜயர்கள்  பூமியில் அவதரித்தார்கள்.  கச்யபருக்கும், திதிக்கும் பிள்ளைகளாக, பிறந்ததால்  தாய் வழியாக  அடையாளம் காணப்படுவது அப்போது வழக்கம். திதியின் புத்திரர்கள்  தைத்ரியர்கள் எனப்பட்டனர்.   ராதையின் பிள்ளை ராதேயன், குந்தியின் பிள்ளை  கௌந்தேயன் மாதிரி.   மிகவும்  கொடிய குணங்கள் கொண்டவர்க ளாக இருந்தார்கள்.  பலசாலிகள் தவம் பெற்றவர்கள் என்பதால்  மூவுலகும் நடுங்கும் வகையில்   தேவர்களைத் துன்புறுத்தினார்கள்.

हिरण्यपूर्व: कशिपु: किलैक:
परो हिरण्याक्ष इति प्रतीत: ।
उभौ भवन्नाथमशेषलोकं
रुषा न्यरुन्धां निजवासनान्धौ ॥८॥

hiraNyapuurvaH kashipuH kilaikaH
parO hiraNyaaksha iti pratiitaH |
ubhau bhavannaathamasheShalOkaM
ruShaa nyarundhaaM nijavaasanaandhau ||

ஒரு பிறவியில்  ஜெய விஜயர்கள்  ஹிரண்ய கசிபு , ஹிரண்யாக்ஷன் என  பெயர்கள் கொண்டவர்கள். எவ்வளவு துன்பங்கள் கொடுக்க முடியுமோ அவ்வளவு  தேவர்களுக்கு தந்தவர்கள்.  மூவுலகங்களும் நடுங்கின.

ஹிரண்யபூர்வ: கஶிபு: கிலைக:
பரோ ஹிரண்யாக்ஷ இதி ப்ரதீத: |
உபௌ₄ ப₄வந்நாத₂மஶேஷலோகம்
ருஷா ந்யருந்தா₄ம் நிஜவாஸநாந்தௌ₄ || 8||

ஹிரண்யனுக்கு  பிடிக்காத ஒரு  வார்த்தை  நாராயணன். மூவுலகிலும் உன் பெயரே இருக்க கூடாது என்று எண்ணியவன்.   தன்னைவிட உயர்ந்தவன் எவனுமில்லை என்ற அகந்தை கொண்டவன்.  உன்னை அடியோடு வெறுத்தவன்.

तयोर्हिरण्याक्षमहासुरेन्द्रो
रणाय धावन्ननवाप्तवैरी ।
भवत्प्रियां क्ष्मां सलिले निमज्य
चचार गर्वाद्विनदन् गदावान् ॥९॥

tayOrhiraNyaakshamahaasurendrO
raNaaya dhaavannanavaaptavairii |
bhavatpriyaaM kshmaaM salile nimajya
chachaara garvaadvinadan gadaavaan ||

ஹிரண்யாக்ஷன் ஒரு படி மேலே போய் அவனது  கையில் சக்தி வாய்ந்  கதாயுதம் ஏந்தி ,  எல்லா லோகங்களிலும்  சென்று அனைவரையும்  வாட்டி வதைத்தான். அவனை எதிர்க்க எவருமில்லை.  நாராயணா உனக்கு மகிழ்ச்சியைத் தரும் உன்  பூமாதேவியை  சுருட்டிக் கொண்டுபோய் கடல்களுக்கு அடியிலே மறைத்து வைத்து  விட்டானே .  உனக்கு எப்படி இருந்திருக்கும்?   எல்லாம் நீ எதிர்பார்த்ததுதானே.?

தயோர்ஹிரண்யாக்ஷமஹாஸுரேந்த்₃ரோ
ரணாய தா₄வந்நநவாப்தவைரீ |
ப₄வத்ப்ரியாம் க்ஷ்மாம் ஸலிலே நிமஜ்ய
சசார க₃ர்வாத்₃விநத₃ந் க₃தா₃வாந் || 9||

ततो जलेशात् सदृशं भवन्तं
निशम्य बभ्राम गवेषयंस्त्वाम् ।
भक्तैकदृश्य: स कृपानिधे त्वं
निरुन्धि रोगान् मरुदालयेश ॥१०।

tatO jaleshaat sadR^ishaM bhavantaM
nishamya babhraama gaveShayamstvaam |
bhaktaikadR^ishyaH sa kR^ipaanidhe tvaM
nirundhi rOgaan marudaalayesha ||

ததோ ஜலேஶாத் ஸத்₃ருஶம் ப₄வந்தம்
நிஶம்ய ப₃ப்₄ராம க₃வேஷயம்ஸ்த்வாம் |
ப₄க்தைகத்₃ருஶ்ய: ஸ க்ருபாநிதே₄ த்வம்
நிருந்தி₄ ரோகா₃ந் மருதா₃லயேஶ || 10 ||

வருணன் ஓடிவந்தான்.  அவனை நிறுத்தி ஹிரண்யாக்ஷன்  எனக்கு சமம் யாரடா சொல்? என்றான்.  அந்த நாராயணன் ஒருவனே  என்றான் வருணன்.  எங்கே  அந்த  நாராய ணன்  என கேட்டு உன்னை தேடினான் ஹிரண்யாக்ஷன்.   கருணா மூர்த்தி குருவாயூரப்பா,  நான் சொல்வதெல்லாம் நினைவுக்கு வருகிறதா?  நேரம் வந்து விட்டது ஹிரண்யாக்ஷனுக்கு.  உன் பக்தர்களுக்கு நீ  அரியவன், அரி. என் குறைகளையும் அறிவாய். தீர்ப்பாய் தெய்வமே .

Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 12

Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 12 12.   பூமியும்  பூவராஹனும் स्वायम्भुवो मनुरथो जनसर्गशीलो दृष्ट्वा महीमसमये सलिले निमग्ना...