Monday, February 26, 2024

Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 10

 Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 10

10. மனிதன்  தோன்றினான்.


 


वैकुण्ठ वर्धितबलोऽथ भवत्प्रसादा-
दम्भोजयोनिरसृजत् किल जीवदेहान् ।
स्थास्नूनि भूरुहमयानि तथा तिरश्चां
जातिं मनुष्यनिवहानपि देवभेदान् ॥१॥

  vaikuṇṭha vardhitabalō:’tha bhavatprasādā-
daṁbhōjayōnirasr̥jatkila jīvadēhān |
sthāsnūni bhūruhamayāni tathā tiraścāṁ
jātīrmanuṣyanivahānapi dēvabhēdān || 10-1 ||

  வைகுண்ட² வர்தி⁴தப³லோ(அ)த² ப⁴வத்ப்ரஸாதா³-
த³ம்போ⁴ஜயோனிரஸ்ருஜத்கில ஜீவதே³ஹான் |
ஸ்தா²ஸ்னூனி பூ⁴ருஹமயானி ததா² திரஶ்சாம்
ஜாதீர்மனுஷ்யனிவஹானபி தே³வபே⁴தா³ன் || 10-1 ||

''வைகுண்ட நாதா, நீ அளித்த அதீத சக்தியால் ப்ரம்மா ஸ்ரிஷ்டியை  வேகமாக துவங்கிவிட்டான். ஸ்தாவர ஜங்கம உயிர்கள் தோன்றின. அசைவது, அசையாதது, பேசுவது பேசாதது, பரப்பன, நடப்பன, ஊர்வன, மிதப்பன  எல்லாமே  பிறந்தது.  இந்த உயிரினங்களில் ஜீவன்தகுந்த உடலில் அடைக்கப்பட்டது.

मिथ्याग्रहास्मिमतिरागविकोपभीति-
रज्ञानवृत्तिमिति पञ्चविधां स सृष्ट्वा ।
उद्दामतामसपदार्थविधानदून -
स्तेने त्वदीयचरणस्मरणं विशुद्ध्यै ॥२॥

mithyāgrahāsmimatirāgavikōpabhīti-
rajñānavr̥ttimiti pañcavidhāṁ sa sr̥ṣṭvā |
uddāmatāmasapadārthavidhānadūna-
stēnē tvadīyacaraṇasmaraṇaṁ viśuddhyai || 10-2 ||

மித்²யாக்³ரஹாஸ்மிமதிராக³விகோபபீ⁴தி-
ரஜ்ஞானவ்ருத்திமிதி பஞ்சவிதா⁴ம் ஸ ஸ்ருஷ்ட்வா |
உத்³தா³மதாமஸபதா³ர்த²விதா⁴னதூ³ன-
ஸ்தேனே த்வதீ³யசரணஸ்மரணம் விஶுத்³த்⁴யை || 10-2 ||

அஹங்காரம்  தோன்றிவிட்டது. ஐம்புலன்கள் தெரிந்துவிட்டது.  மாயை உருவெடுத்தது. கோபம் தாபம் சண்டாளம் எல்லாம் புரிந்துவிட்டது.  பயம்  வந்துவிட்டது.  தீயவைகளும்  நல்லவற்றோடு உருவானது.  பயிர் இருந்தால் களையும் தோன்றவில்லையா?.  நெல்லொடு புல் .   அப்போது தானே  நல்லவற்றின்  தன்மை  மேன்மை புரியும்.  பிரமன்  தன்னை பரிசுத்தமாக்கிக்   கொள்ள   நாராயணா உன்  தாமரைத் திருவடிகளை விடாமல் தியானித்தான்.

तावत् ससर्ज मनसा सनकं सनन्दं
भूय: सनातनमुनिं च सनत्कुमारम् ।
ते सृष्टिकर्मणि तु तेन नियुज्यमाना-
स्त्वत्पादभक्तिरसिका जगृहुर्न वाणीम् ॥३॥

tāvatsasarja manasā sanakaṁ sanandaṁ
bhūyassanātanamuniṁ ca sanatkumāram |
tē sr̥ṣṭikarmaṇi tu tēna niyujyamānā-
stvatpādabhaktirasikā jagr̥hurna vāṇīm || 10-3 ||

தாவத்ஸஸர்ஜ மனஸா ஸனகம் ஸனந்த³ம்
பூ⁴யஸ்ஸனாதனமுனிம் ச ஸனத்குமாரம் |
தே ஸ்ருஷ்டிகர்மணி து தேன நியுஜ்யமானா-
ஸ்த்வத்பாத³ப⁴க்திரஸிகா ஜக்³ருஹுர்ன வாணீம் || 10-3 ||

பிரமன் சிருஷ்டியை  தனது   கையினால் நாம் பொம்மை செய்வது போல் படைக்கவில்லை. மனதில் சங்கல்பத்தால் எண்ணற்ற பிறவிகளை தோற்றுவித்தவன் .  சனகர், ஸநந்தனர்  ,சனாதனர் சனத் குமாரர்  என்று  ரிஷிகள் தோன்றினார்கள்.  ''நீங்களும்  சிருஷ்டி யில் என்னோடு பங்கேற்க வாருங்கள்'' என அழைத்தும் அவர்கள் அதில் ஈடுபடவில்லை. அவர்கள்  நாராயணா   உனது  திருவடிகளை  வணங்குவதிலேயே காலம்  கழித்தவர்கள்.

तावत् प्रकोपमुदितं प्रतिरुन्धतोऽस्य
भ्रूमध्यतोऽजनि मृडो भवदेकदेश: ।
नामानि मे कुरु पदानि च हा विरिञ्चे-
त्यादौ रुरोद किल तेन स रुद्रनामा ॥४॥

tāvatprakōpamuditaṁ pratirundhatō:’sya
bhrūmadhyatō:’jani mr̥ḍō bhavadēkadēśaḥ |
nāmāni mē kuru padāni ca hā viriñcē-
tyādau rurōda kila tēna sa rudranāmā || 10-4 ||

தாவத்ப்ரகோபமுதி³தம் ப்ரதிருந்த⁴தோ(அ)ஸ்ய
ப்⁴ரூமத்⁴யதோ(அ)ஜனி ம்ருடோ³ ப⁴வதே³கதே³ஶ꞉ |
நாமானி மே குரு பதா³னி ச ஹா விரிஞ்சே-
த்யாதௌ³ ருரோத³ கில தேன ஸ ருத்³ரனாமா || 10-4 ||

ப்ரம்மாவிற்கு கோபம் வந்துவிட்டது.   அவரது மானசீக புத்திரர்களே   இப்படி  அவர் வாக்கை நிராகரித்து விட்டார்களே என்று கோபத்தோடு வருத்தமும் உண்டு.  அந்த உணர்ச்சியை அவர்  மறக்கமுடியவில்லை. அப்போது அவன் ஸ்ரிஷ்டியில் தோன்றியவர்   ம்ரிதா.   ப்ரம்மாவின்  நெற்றிப்புருவங்கள் இடையே  தோன்றியவர். இந்த   ம்ருதா தான் கோபத்தில் பிறந்த  ருத்ரன்.

एकादशाह्वयतया च विभिन्नरूपं
रुद्रं विधाय दयिता वनिताश्च दत्वा ।
तावन्त्यदत्त च पदानि भवत्प्रणुन्न:
प्राह प्रजाविरचनाय च सादरं तम् ॥५॥

  ēkādaśāhvayatayā ca vibhinnarūpaṁ
rudraṁ vidhāya dayitā vanitāśca dattvā |
tāvantyadatta ca padāni bhavatpraṇunnaḥ
prāha prajāviracanāya ca sādaraṁ tam || 10-5 ||

ஏகாத³ஶாஹ்வயதயா ச விபி⁴ன்னரூபம்
ருத்³ரம் விதா⁴ய த³யிதா வனிதாஶ்ச த³த்த்வா |
தாவந்த்யத³த்த ச பதா³னி ப⁴வத்ப்ரணுன்ன꞉
ப்ராஹ ப்ரஜாவிரசனாய ச ஸாத³ரம் தம் || 10-5 ||

நாராயணா  நீ  உணர்த்தியபடியே  ப்ரம்மா  ருத்ரனுக்கு  பதினோரு அம்சங்களை  உண்டாக்கி  பெயர்களை  சூட்டினான். அவர்கள் இருப்பிடங்களை அமைத்தான்.  ''எனக்கு  படைக்கும் தொழிலில்  நீங்கள் உதவுங்கள்'' என கேட்டுக்கொண்டான்.
रुद्राभिसृष्टभयदाकृतिरुद्रसंघ-
सम्पूर्यमाणभुवनत्रयभीतचेता: ।
मा मा प्रजा: सृज तपश्चर मङ्गलाये-
त्याचष्ट तं कमलभूर्भवदीरितात्मा ॥६॥

rudrābhisr̥ṣṭabhayadākr̥tirudrasaṅgha-
saṁpūryamāṇābhuvanatrayabhītacētāḥ |
mā mā prajāḥ sr̥ja tapaścara maṅgalāyē-
tyācaṣṭa taṁ kamalabhūrbhavadīritātmā || 10-6 ||

ருத்³ராபி⁴ஸ்ருஷ்டப⁴யதா³க்ருதிருத்³ரஸங்க⁴-
ஸம்பூர்யமாணாபு⁴வனத்ரயபீ⁴தசேதா꞉ |
மா மா ப்ரஜா꞉ ஸ்ருஜ தபஶ்சர மங்க³லாயே-
த்யாசஷ்ட தம் கமலபூ⁴ர்ப⁴வதீ³ரிதாத்மா || 10-6 ||

ருத்ரனின் அம்சங்கள் கோபத்தோடு கூடியவை.  மூவுலகிலும் நிறைந்தவர்கள்.  அவர்களுடைய   கோபாவேசம் ப்ரம்மாவையே  திகைக்கவைத்தது.  உன்  உந்துதலால்  ப்ரம்மா  ருத்ரனின் படைப்புகளை நிறுத்தினான்.  ''சிருஷ்டியை  நிறுத்தி விட்டு நீங்கள்  லோக க்ஷேமத்துக்காக  தவம் இருங்கள்'' என்று  ப்ரம்மா  ருத்ரர்களை கேட்டுக்கொண்டார்.
तस्याथ सर्गरसिकस्य मरीचिरत्रि-
स्तत्राङिगरा: क्रतुमुनि: पुलह: पुलस्त्य: ।
अङ्गादजायत भृगुश्च वसिष्ठदक्षौ
श्रीनारदश्च भगवन् भवदंघ्रिदास: ॥७॥

  tasyātha sargarasikasya marīciratri-
statrāṅgirāḥ kratumuniḥ pulahaḥ pulastyaḥ |
aṅgādajāyata bhr̥guśca vasiṣṭhadakṣau
śrīnāradaśca bhagavan bhavadaṅghridāsaḥ || 10-7 ||

தஸ்யாத² ஸர்க³ரஸிகஸ்ய மரீசிரத்ரி-
ஸ்தத்ராங்கி³ரா꞉ க்ரதுமுனி꞉ புலஹ꞉ புலஸ்த்ய꞉ |
அங்கா³த³ஜாயத ப்⁴ருகு³ஶ்ச வஸிஷ்ட²த³க்ஷௌ
ஶ்ரீனாரத³ஶ்ச ப⁴க³வன் ப⁴வத³ங்க்⁴ரிதா³ஸ꞉ || 10-7 ||

பிரம்மனின்  சிருஷ்டி இடைவிடாது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இன்று வரையில், நான் இதை எழுதும் வரையிலும் கூட.  நமது தேசத்திலேயே  பல கோடி மனிதர்கள்,  இதைத் தவிர கணக்கிலடங்கா உயிர்கள். தாவரங்கள்  அசையும்  அசையா வஸ்துக்கள்.  பிரம்மனின் தேகத்திலிருந்து உதித்தவர்கள் தான்  மரீசி, அத்ரி, ஆங்கிரஸ் , க்ரது முனி, புலஹர்,  புலஸ்தியர்,   ப்ருகு, வசிஷ்டர், தக்ஷர்கள், நாரதர் முதலிய ரிஷிகள்,  ஏனையோர்.

धर्मादिकानभिसृजन्नथ कर्दमं च
वाणीं विधाय विधिरङ्गजसंकुलोऽभूत् ।
त्वद्बोधितैस्सनकदक्षमुखैस्तनूजै-
रुद्बोधितश्च विरराम तमो विमुञ्चन् ॥८॥

  dharmādikānabhisr̥jannatha kardamaṁ ca
vāṇīṁ vidhāya vidhiraṅgajasaṅkulō:’bhūt |
tvadbōdhitaiḥ sanakadakṣamukhaistanūjai-
rudbōdhitaśca virarāma tamō vimuñcan || 10-8 ||

த⁴ர்மாதி³கானபி⁴ஸ்ருஜன்னத² கர்த³மம் ச
வாணீம் விதா⁴ய விதி⁴ரங்க³ஜஸங்குலோ(அ)பூ⁴த் |
த்வத்³போ³தி⁴தை꞉ ஸனகத³க்ஷமுகை²ஸ்தனூஜை-
ருத்³போ³தி⁴தஶ்ச விரராம தமோ விமுஞ்சன் || 10-8 ||

பிரம்மாவால்  பிறந்தவர்கள் தான் தர்ம தேவன், கர்தம ரிஷி, சரஸ்வதிதேவி.  சரஸ்வதி ப்ரம்மனோடு தங்கி அவன் நாவில் குடியேறினாள்
वेदान् पुराणनिवहानपि सर्वविद्या:
कुर्वन् निजाननगणाच्चतुराननोऽसौ ।
पुत्रेषु तेषु विनिधाय स सर्गवृद्धि-
मप्राप्नुवंस्तव पदाम्बुजमाश्रितोभूत् ॥९॥

vēdānpurāṇanivahānapi sarvavidyāḥ
kurvannijānanagaṇāccaturānanō:’sau |
putrēṣu tēṣu vinidhāya sa sargavr̥ddhi-
maprāpnuvaṁstava padāṁbujamāśritō:’bhūt || 10-9 ||

வேதா³ன்புராணனிவஹானபி ஸர்வவித்³யா꞉
குர்வன்னிஜானநக³ணாச்சதுரானநோ(அ)ஸௌ |
புத்ரேஷு தேஷு வினிதா⁴ய ஸ ஸர்க³வ்ருத்³தி⁴-
மப்ராப்னுவம்ஸ்தவ பதா³ம்பு³ஜமாஶ்ரிதோ(அ)பூ⁴த் || 10-9 ||
குருவாயூரப்பா, நான்முகன் பிரம்மன் அப்புறம் வேதங்களை ஸ்ருஷ்டித்தான்.  புராணங்கள் உருவானது.  சாஸ்திரங்கள் தோன்றியது.  அவற்றையெல்லாம் புத்ரர்களுக்கு கற்பித்தான். ஸ்ரிஷ்டியோடு த்யானத்தில் உன்னை ஸ்மரித்தான் , உன் திருவடிகளை சரணடைந்து தொழுதான்.  
जानन्नुपायमथ देहमजो विभज्य   स्रीपुंसभावमभजन्मनुतद्वधूभ्याम् ।
ताभ्यां च मानुषकुलानि विवर्धयंस्त्वं
गोविन्द मारुतपुरेश निरुन्धि रोगान् ॥१०॥  

jānannupāyamatha dēhamajō vibhajya
strīpuṁsabhāvamabhajanmanutadvadhūbhyām |
tābhyāṁ ca mānuṣakulāni vivardhayaṁstvaṁ
gōvinda mārutapurēśa nirundhi rōgān || 10-10 ||  

ஜானந்னுபாயமத² தே³ஹமஜோ விப⁴ஜ்யஸ்த்ரீபும்ஸபா⁴வமப⁴ஜன்மனுதத்³வதூ⁴ப்⁴யாம் |தாப்⁴யாம் ச மானுஷகுலானி விவர்த⁴யம்ஸ்த்வம்
கோ³விந்த³ மாருதபுரேஶ நிருந்தி⁴ ரோகா³ன் || 10-10  

''கிருஷ்ணா,  நாராயணனே ,  உன்னுடைய அறிவுரையால்,  ப்ரம்மா  தனது  உடலின் இரு பக்கங்களிலிருந்தும்   ஆண்  பெண்  என்று இருவகையாரை பிறப்பித்தான்.   அவர்கள்  தான் மனுவும் அவன் மனைவி  ஸதரூபாவும் . அவர்கள் மூலமே  மனிதகுலம்  உருவானது.  ஓஹோ இப்போது தான் புரிகிறது,  மனுவிலிருந்து வந்தவன் தான் மனுஷன்!
என்னப்பா  குருவாயூரப்பா,  இவ்வளவெல்லாம் பண்ணிய நீ  என்  ரோகத்தை நீக்கு உடனே  என்று  வேண்டிக்கொள்கிறார்  நம்பூதிரி.

Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 7

 Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 7

7 பிரம்மனுக்கு அருள் ஞானம்




एवं देव चतुर्दशात्मकजगद्रूपेण जात: पुन-स्तस्योर्ध्वं खलु सत्यलोकनिलये जातोऽसि धाता स्वयम् ।
यं शंसन्ति हिरण्यगर्भमखिलत्रैलोक्यजीवात्मकं योऽभूत् स्फीतरजोविकारविकसन्नानासिसृक्षारस: ॥१॥

ēvaṁ dēva caturdaśātmakajagadrūpēṇa jātaḥ puna-stasyōrdhvaṁ khalu satyalōkanilayē jātō:’si dhātā svayam |
yaṁ śaṁsanti hiraṇyagarbhamakhilatrailōkyajīvātmakaṁyō:’bhūt sphītarajōvikāravikasannānāsisr̥kṣārasaḥ || 7-1 ||

ஏவம் தே³வ சதுர்த³ஶாத்மகஜக³த்³ரூபேண ஜாத꞉ புன-ஸ்தஸ்யோர்த்⁴வம் க²லு ஸத்யலோகனிலயே ஜாதோ(அ)ஸி தா⁴தா ஸ்வயம் |
யம் ஶம்ஸந்தி ஹிரண்யக³ர்ப⁴மகி²லத்ரைலோக்யஜீவாத்மகம் யோ(அ)பூ⁴த் ஸ்பீ²தரஜோ விகாரவிகஸன் னானா ஸிஸ்ருக்ஷாரஸ꞉ || 7-1 ||

நாராயண பட்டத்ரி  குருவாயூரப்பன் எதிரே அமர்ந்து பாடுகிறார்.  என்னப்பனே,   பிரளயம் முடிந்தபின்னே  மீண்டும் ஜீவ ஸ்ரிஷ்டிக்காக  நீயே   மேலேழு , கீழேழு  லோகங்களாக  உருவெடுத்தாய்.  எல்லாம் உன் மாயை.  லோகங்களிலேயே உயர்ந்ததும் சிறந்ததுமான சத்யலோகத்தில்  பிரஜாபதி, ப்ரம்மாவாக சிருஷ்டியை மேற்கொண்டாய்.  பொன்னிற அண்டமாக ஹிரண்யகர்பனாக மூவுலகின்   சர்வ ஜீவன்களுக்கும் நீயே  உற்பத்தி  ஸ்தானமானவன்.    தீவிரமாக   செயலில்  ஈடுபடும் ரஜோகுண சம்பந்தனாக ஹிரண்யகர்பனாக  சங்கல்பித்து  சிருஷ்டி துவங்கினாய் .

 सोऽयं विश्वविसर्गदत्तहृदय: सम्पश्यमान: स्वयं
बोधं खल्वनवाप्य विश्वविषयं चिन्ताकुलस्तस्थिवान् ।
तावत्त्वं जगतां पते तप तपेत्येवं हि वैहायसीं
वाणीमेनमशिश्रव: श्रुतिसुखां कुर्वंस्तप:प्रेरणाम् ॥२॥  

sō:’yaṁ viśvavisargadattahr̥dayaḥ sampaśyamānaḥ svayaṁ
bōdhaṁ khalvanavāpya viśvaviṣayaṁ cintākulastasthivān |
tāvattvaṁ jagatāmpatē tapa tapētyēvaṁ hi vaihāyasīṁ
vāṇīmēnamaśiśravaḥ śrutisukhāṁ kurvaṁstapaḥprēraṇām || 7-2 ||

ஸோ(அ)யம் விஶ்வவிஸர்க³த³த்தஹ்ருத³ய꞉ ஸம்பஶ்யமான꞉ ஸ்வயம்
போ³த⁴ம் க²ல்வனவாப்ய விஶ்வவிஷயம் சிந்தாகுலஸ்தஸ்தி²வான் |
தாவத்த்வம் ஜக³தாம்பதே தப தபேத்யேவம் ஹி வைஹாயஸீம்
வாணீமேனமஶிஶ்ரவ꞉ ஶ்ருதிஸுகா²ம் குர்வம்ஸ்தப꞉ப்ரேரணாம் || 7-2 ||

பிரபஞ்ச நாயகா,  குருவாயூரப்பா,   சிருஷ்டியைத்  துவங்கு என்று பிரம்மனுக்கு கட்டளையிட்டாயிற்று. அவன் சிருஷ்டிக்க ஆரம்பிக்கிறான். அது சரி  ஸ்ரிஷ்டிக்கான  பயிற்சி வழிமுறை   உபதேசம் இருந்தால் தானே  சிறப்பாக  சிருஷ்டிக்க முடியும்?  அவனால் இயலவில்லை என்று  நீ   அறிவாய்.  அவனை ஊக்குவிக்க, அவன் காதுகளில் கேட்கும்படியாக  ''தப  தப ''   என்ற சொல்  அவன் செவிகளில் பாய்ந்து  அவனை முதலில் தவம் செய்ய வைத்தது. உன்னையன்றி வேறு யாரை  வேண்டி அவன் தவமிருப்பான்?


कोऽसौ मामवदत् पुमानिति जलापूर्णे जगन्मण्डले
दिक्षूद्वीक्ष्य किमप्यनीक्षितवता वाक्यार्थमुत्पश्यता ।
दिव्यं वर्षसहस्रमात्ततपसा तेन त्वमाराधित -
स्तस्मै दर्शितवानसि स्वनिलयं वैकुण्ठमेकाद्भुतम् ॥३॥

kō:’sau māmavadatpumāniti jalāpūrṇē jaganmaṇḍalē
dikṣūdvīkṣya kimapyanīkṣitavatā vākyārthamutpaśyatā |
divyaṁ varṣasahasramāttatapasā tēna tvamārādhita-
stasmai darśitavānasi svanilayaṁ vaikuṇṭhamēkādbhutam || 7-3 ||

கோ(அ)ஸௌ மாமவத³த்புமானிதி ஜலாபூர்ணே ஜக³ன்மண்ட³லே
தி³க்ஷூத்³வீக்ஷ்ய கிமப்யனீக்ஷிதவதா வாக்யார்த²முத்பஶ்யதா |
தி³வ்யம் வர்ஷஸஹஸ்ரமாத்ததபஸா தேன த்வமாராதி⁴த-
ஸ்தஸ்மை த³ர்ஶிதவானஸி ஸ்வனிலயம் வைகுண்ட²மேகாத்³பு⁴தம் || 7-3 ||

''முதலில் பிரம்மதேவன்  ஆச்சரியப்பட்டான். எப்படி என் மனதில் தோன்றிய சம்சயம் வெளியுலகில் எவருக்கோ தெரிந்துள்ளது.  யார்  அவர்,  இப்படி  எனக்கு தவமிருக்க வழிகாட்டியது.    பிரமன் நான்முகன் அல்லவா?  நாலாபக்கமும் பார்க்கமுடியுமே .   பார்த்தான்.  எங்கும் ஜலசமுத்ரம். எவரும் கண்ணில் படவில்லை.  ஓஹோ  என்னுள்ளே இருந்து என்னை இயக்கும்  பரமாத்மாவின்  குரல்  அல்லவா  இது என    மகிழ்ந்து ஆயிரம் வருஷங்கள்  உன்னை  வணங்கி தவமிருந்தவன். உன்னால்  அவ்வாறு  வைகுந்தத்தை அடைந்தவன்  பிரம்மன் என்று நான் புரிந்து கொண்டேன் குருவாயூரப்பா.

माया यत्र कदापि नो विकुरुते भाते जगद्भ्यो बहि:
शोकक्रोधविमोहसाध्वसमुखा भावास्तु दूरं गता: ।
सान्द्रानन्दझरी च यत्र परमज्योति:प्रकाशात्मके
तत्ते धाम विभावितं विजयते वैकुण्ठरूपं विभो ॥४॥

māyā yatra kadāpi nō vikurutē bhātē jagadbhyō bahi-
śśōkakrōdhavimōhasādhvasamukhā bhāvāstu dūraṁ gatāḥ |
sāndrānandajharī ca yatra paramajyōtiḥprakāśātmakē
tattē dhāma vibhāvitaṁ vijayatē vaikuṇṭharūpaṁ vibhō || 7-4 ||

மாயா யத்ர கதா³பி நோ விகுருதே பா⁴தே ஜக³த்³ப்⁴யோ ப³ஹி-
ஶ்ஶோகக்ரோத⁴விமோஹஸாத்⁴வஸமுகா² பா⁴வாஸ்து தூ³ரம் க³தா꞉ |
ஸாந்த்³ரானந்த³ஜ²ரீ ச யத்ர பரமஜ்யோதி꞉ப்ரகாஶாத்மகே
தத்தே தா⁴ம விபா⁴விதம் விஜயதே வைகுண்ட²ரூபம் விபோ⁴ || 7-4 ||

எங்கும் நிறைந்த பரமாத்மா, மாயையால் நெருங்கமுடியாத  மாதவா,  பதினாலு லோகங்களிலும்  வியாபித்து  மனதை ஆட்கொள்ளும் மாயை அல்லவோ  மனதில் துக்கம், கோபம்,  பயம், கலக்கம்,எல்லாவற்றுக்கும்  காரணம் என்றாலும்  அதால் நெருங்கமுடியாதவனே.  வைகுண்டவாஸா,   பேரானந்தம் அருளும்  பிரபு, காருண்ய ஒளி வீசும்  கருணாகரா , வைகுண்ட ஞான ஒளியை  பிரமனுக்கு  அளித்த பரமா.  உனக்கு கோடி நமஸ்காரம்.


 यस्मिन्नाम चतुर्भुजा हरिमणिश्यामावदातत्विषो
नानाभूषणरत्नदीपितदिशो राजद्विमानालया: ।
भक्तिप्राप्ततथाविधोन्नतपदा दीव्यन्ति दिव्या जना-
तत्ते धाम निरस्तसर्वशमलं वैकुण्ठरूपं जयेत् ॥५॥  

  yasminnāma caturbhujā harimaṇiśyāmāvadātatviṣō  
nānābhūṣaṇaratnadīpitadiśō rājadvimānālayāḥ |
bhaktiprāptatathāvidhōnnatapadā dīvyanti divyā janā-
stattē dhāma nirastasarvaśamalaṁ vaikuṇṭharūpaṁ jayēt || 7-5 ||

யஸ்மின்னாம சதுர்பு⁴ஜா ஹரிமணிஶ்யாமாவதா³தத்விஷோ
நானாபூ⁴ஷணரத்னதீ³பிததி³ஶோ ராஜத்³விமானாலயா꞉ |
ப⁴க்திப்ராப்தததா²விதோ⁴ன்னதபதா³ தீ³வ்யந்தி தி³வ்யா ஜனா-
ஸ்தத்தே தா⁴ம நிரஸ்தஸர்வஶமலம் வைகுண்ட²ரூபம் ஜயேத் || 7-5 ||

நாராயணா, நீ வாசம் செய்யும் வைகுண்டத்தில் அல்லவோ  நாற்கரங்கள் கொண்ட  கருநீல வண்ண தெய்வ ஸ்வரூபமான  ஒளி வீசி  எங்கும் காட்சி தருகிறது. கண்ணைப்பறிக்கும் சர்வாலங்காரத்தோடு  ஒளிவீசும் உனது தெய்வீக  ஆபரணங்கள் மனதை  இனிக்க செயகிறது.  தெய்வீக  தேர்களில்  வான வீதியில்  நீ  உலாவரும் அந்த அற்புதத்தை என்ன சொல்வேன்? பக்தியில் திளைத்து  பரவசம் கொள்ளச்செய்யும்  பரமானந்த குருவே.  உனது திவ்ய ஸ்வரூப  புனித வைகுந்தத்துக்கு  எனது எண்ணற்ற  நமஸ்காரங்கள். .

नानादिव्यवधूजनैरभिवृता विद्युल्लतातुल्यया
विश्वोन्मादनहृद्यगात्रलतया विद्योतिताशान्तरा ।
त्वत्पादांबुजसौरभैककुतुकाल्लक्ष्मी: स्वयं लक्ष्यते
यस्मिन् विस्मयनीयदिव्यविभवं तत्ते पदं देहि मे ॥६॥  

nānādivyavadhūjanairabhivr̥tā vidyullatātulyayā
viśvōnmādanahr̥dyagātralatayā vidyōtitāśāntarā |
tvatpādāṁbujasaurabhaikakutukāllakṣmīḥ svayaṁ lakṣyatē
yasmin vismayanīyadivyavibhavaṁ tattē padaṁ dēhi mē || 7-6 ||

நானாதி³வ்யவதூ⁴ஜனைரபி⁴வ்ருதா வித்³யுல்லதாதுல்யயா
விஶ்வோன்மாத³னஹ்ருத்³யகா³த்ரலதயா வித்³யோதிதாஶாந்தரா |
த்வத்பாதா³ம்பு³ஜஸௌரபை⁴ககுதுகால்லக்ஷ்மீ꞉ ஸ்வயம் லக்ஷ்யதே
யஸ்மின் விஸ்மயனீயதி³வ்யவிப⁴வம் தத்தே பத³ம் தே³ஹி மே || 7-6 ||

என்  தலைவா,  குருவாயூரப்பா, உனது  தெய்வீக்க வாஸ  ஸ்தலமான  வைகுண்டத்தில் அல்லவோ, என் தாய்  மகாலட்சுமியும்  வாசம் செய்கிறாள்.  அவளை சுற்றி  ஆஹா  எவ்வளவு  எண்ணற்ற  தோழிகள், பக்தைகள். விண்ணில் கண்ணைப்பறிக்கும் மின்னல்  கொடி போல  அல்லவோ   ஜொலிக்கிறாள்.  கை தொழும் பக்தர்கள் மனம் கவர்ந்து புளகாங்கிதம் அடையச்செய்யும்  சர்வலோக நாயகி அல்லவா? வைகுண்டத்துக்கே  ஒளி தருபவளோ?  உங்கள் தாமரைத் திருவடிகளை  நெஞ்சில் சுமக்கும்  பெரும் செல்வந்தன் நான்.  வைகுண்டத்தில் காணாத  அருள் ஞான செல்வமா? நீங்கள்  என்னை ரக்ஷித்தருள  வேண்டுகிறேன்.

तत्रैवं प्रतिदर्शिते निजपदे रत्नासनाध्यासितं
भास्वत्कोटिलसत्किरीटकटकाद्याकल्पदीप्राकृति ।
श्रीवत्साङ्कितमात्तकौस्तुभमणिच्छायारुणं कारणं
विश्वेषां तव रूपमैक्षत विधिस्तत्ते विभो भातु मे ॥७॥  

tatraivaṁ pratidarśitē nijapadē ratnāsanādhyāsitaṁ
bhāsvatkōṭilasatkirīṭakaṭakādyākalpadīprākr̥ti |
śrīvatsāṅkitamāttakaustubhamaṇicchāyāruṇaṁ kāraṇaṁ
viśvēṣāṁ tava rūpamaikṣata vidhistattē vibhō bhātu mē || 7-7 ||

தத்ரைவம் ப்ரதித³ர்ஶிதே நிஜபதே³ ரத்னாஸனாத்⁴யாஸிதம்
பா⁴ஸ்வத்கோடிலஸத்கிரீடகடகாத்³யாகல்பதீ³ப்ராக்ருதி |
ஶ்ரீவத்ஸாங்கிதமாத்தகௌஸ்துப⁴மணிச்சா²யாருணம் காரணம்
விஶ்வேஷாம் தவ ரூபமைக்ஷத விதி⁴ஸ்தத்தே விபோ⁴ பா⁴து மே || 7-7 ||

பிரம்மனுக்கு வைகுந்தத்தில் காட்சி தந்து மகிழ்வித்த  பெருமாளே,  ஞான பீட  சிம்மாசனத்தில்  ஒளி வீச அமர்ந்தவனே ,  பல  சூரியன்கள் உடலில் ஒளிவீசுவது போல் ஆபரணங்கள் அணிந்து அருள் தரிசனம் தருபவனே, மார்பில் ஸ்ரீவத்சம் தனித்து காட்சி அளித்து  தோன்றி என் கண்களுக்கு திவ்ய தரிசனம் தருகிறதே.   கௌஸ்துப மாலை கண்ணைப் பறிக்கிறதே , காருண்யா, குருவாயூரப்பா,  எங்கும் காணாத சிவந்த ஒளிவீசும் மலர்  மார்பா,  சர்வ ஜீவ காரணா , உன் திவ்ய சுந்தர தரிசனம் தந்தருள்வாய். 7

  कालांभोदकलायकोमलरुचीचक्रेण चक्रं दिशा -
मावृण्वानमुदारमन्दहसितस्यन्दप्रसन्नाननम् ।
राजत्कम्बुगदारिपङ्कजधरश्रीमद्भुजामण्डलं
स्रष्टुस्तुष्टिकरं वपुस्तव विभो मद्रोगमुद्वासयेत् ॥८॥  

kālāṁbhōdakalāyakōmalarucīcakrēṇa cakraṁ diśā-
māvr̥ṇvānamudāramandahasitasyandaprasannānanam |
rājatkaṁbugadāripaṅkajadharaśrīmadbhujāmaṇḍalaṁ
sraṣṭustuṣṭikaraṁ vapustava vibhō madrōgamudvāsayēt || 7-8 ||

காலாம்போ⁴த³கலாயகோமலருசீசக்ரேண சக்ரம் தி³ஶா-
மாவ்ருண்வானமுதா³ரமந்த³ஹஸிதஸ்யந்த³ப்ரஸன்னானநம் |
ராஜத்கம்பு³க³தா³ரிபங்கஜத⁴ரஶ்ரீமத்³பு⁴ஜாமண்ட³லம்
ஸ்ரஷ்டுஸ்துஷ்டிகரம் வபுஸ்தவ விபோ⁴ மத்³ரோக³முத்³வாஸயேத் || 7-8 ||

என்னப்பனே  உண்ணி   கிருஷ்ணா,  கருத்த மேகங்களா நீயா  என்று அடையாளம் தெரியவில்லையடா. அதில் எப்படி  நீல மலர்கள் போல் உன் உருவம். ஒளிவீசும்  வட்டம்.  எங்கும்  பிரகாசம் தரும்  பர  ஒளி.  உன்  முகத்தில்  காணும்    குறும் புன்னகையின்  காந்த சக்தியை எப்படி சொல்வேனடா.  உனது  திரண்ட புஜங்கள், நாற் கரங்களில்  நீ தாங்கிய  பாஞ்சஜன்யம், சுதர்சன சக்ரம், கௌமோதகி, நந்தகம்,   தாமரை எதை  எப்படி  வர்ணிப்பேன், வார்த்தைகள் தேடுகிறேன் ப்ரபோ.  இந்த திவ்ய சுந்தர ரூபம் அல்லவோ வைகுண்டத்தில் பிரம்மனை மகிழ்வுறச் செய்தது.  என் நோயெல்லாம் தீர  இந்த  தரிசனம் ஒன்றே போதுமே.

दृष्ट्वा सम्भृतसम्भ्रम: कमलभूस्त्वत्पादपाथोरुहे
हर्षावेशवशंवदो निपतित: प्रीत्या कृतार्थीभवन् ।
जानास्येव मनीषितं मम विभो ज्ञानं तदापादय
द्वैताद्वैतभवत्स्वरूपपरमित्याचष्ट तं त्वां भजे ॥९॥

dr̥ṣṭvā saṁbhr̥tasaṁbhramaḥ kamalabhūstvatpādapāthōruhē
harṣāvēśavaśaṁvadō nipatitaḥ prītyā kr̥tārthībhavan |
jānāsyēva manīṣitaṁ mama vibhō jñānaṁ tadāpādaya
dvaitādvaitabhavatsvarūpaparamityācaṣṭa taṁ tvāṁ bhajē || 7-9 ||

த்³ருஷ்ட்வா ஸம்ப்⁴ருதஸம்ப்⁴ரம꞉ கமலபூ⁴ஸ்த்வத்பாத³பாதோ²ருஹே
ஹர்ஷாவேஶவஶம்வதோ³ நிபதித꞉ ப்ரீத்யா க்ருதார்தீ²ப⁴வன் |
ஜானாஸ்யேவ மனீஷிதம் மம விபோ⁴ ஜ்ஞானம் ததா³பாத³ய
த்³வைதாத்³வைதப⁴வத்ஸ்வரூபபரமித்யாசஷ்ட தம் த்வாம் ப⁴ஜே || 7-9 ||

லோகநாயகா,  பிரம்ம  தேவன்  உன் திரு உருவம் காணப்பெற்று அடைந்த  ஆச்சர்யம் கொஞ்சமா நஞ்சமா.   எவ்வளவு ஆனந்தத்தில் திளைத்தான்.  மன  நிறைவு பெற்றான்.  சாஷ்டாங்கமாக  நான்கு சிரங்களும்  நினது தாமரை  மலர்ப்  பாதங்களில் வைத்து  வணங்கினான்.   ''என் தந்தையே,  தாங்கள்  எனது கடமையைச் செய்ய  அருள்வீர்கள், சிருஷ்டிப்பது எனக்கு தொழிலாக அருளிய தாங்களே என்னை அதில் சிறக்கச் செய்ய வேண்டும் என வேண்டினான்.  அதற்குத் தேவையான  ஞானமும்  அருளும் ஆசியும் வழங்க வேண்டுகிறேன் என்று வேண்டினான் அல்லவா.   அத்வைத    த்வைத ஸ்வரூபமே  உன்  திருவடிகளில் வணங்குகிறேன்.

आताम्रे चरणे विनम्रमथ तं हस्तेन हस्ते स्पृशन्
बोधस्ते भविता न सर्गविधिभिर्बन्धोऽपि सञ्जायते ।
इत्याभाष्य गिरं प्रतोष्य नितरां तच्चित्तगूढ: स्वयं
सृष्टौ तं समुदैरय: स भगवन्नुल्लासयोल्लाघताम् ॥१०॥  

ātāmrē caraṇē vinamramatha taṁ hastēna hastē spr̥śan
bōdhastē bhavitā na sargavidhibirbandhō:’pi sañjāyatē |
ityābhāṣya giraṁ pratōṣya nitarāṁ taccittagūḍhaḥ svayaṁ
sr̥ṣṭau taṁ samudairayaḥ sa bhagavannullāsayōllāghatām || 7-10 ||

ஆதாம்ரே சரணே வினம்ரமத² தம் ஹஸ்தேன ஹஸ்தே ஸ்ப்ருஶன்
போ³த⁴ஸ்தே ப⁴விதா ந ஸர்க³விதி⁴பி³ர்ப³ந்தோ⁴(அ)பி ஸஞ்ஜாயதே |
இத்யாபா⁴ஷ்ய கி³ரம் ப்ரதோஷ்ய நிதராம் தச்சித்தகூ³ட⁴꞉ ஸ்வயம்
ஸ்ருஷ்டௌ தம் ஸமுதை³ரய꞉ ஸ ப⁴க³வன்னுல்லாஸயோல்லாக⁴தாம் || 7-10 ||

பிரம்மன் பக்தி பூர்வமாக  என்னப்பா, உன் சிவந்த தாமரைத் திருவடிகளில் இவ்வாறு விழுந்து வணங்கினான் அல்லவா. அவன் கரங்களைத் தொட்டு  அணைத்து , அவனுக்கு தேவைப்பட்ட  சிருஷ்டி ஞானத்தை அளித்து அருளியவனே, அவனது சிருஷ்டி யாகிய ரஜோ குண கர்மத்தால் எந்த  பலனும் தீண்டாமல் பரிபூர்ணமாக  அவன் ஈடுபட அருள் செய்தவா.   இவ்வாறு அவன் விருப்பத்தை  நிறைவேற்றிய  ஆனந்த ஸ்வரூபா,  அவனை மகிழ்வித்த மது சூதனா, பிரம்மன்  அதுமுதல் சிருஷ்டியில் இடைவிடாது ஈடுபடுகிறான்.  அவன் மனத்தில் நிறைந்த நீ அவனை ஊக்குவிக்கிறாய்.  பிரபஞ்சம் பல்லுயிர் பெற்றது.  காருண்ய சீலா , குருவாயூரப்பா, என்குறையும் தீர்த்து  அருள்வாய்  குருவாயூரப்பா.

Sunday, February 25, 2024

Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 9

 Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 9



9  ப்ரம்மாவின்  ஸ்ருஷ்டி துவங்கியது.

स्थितस्स कमलोद्भवस्तव हि नाभिपङ्केरुहे
कुत: स्विदिदमम्बुधावुदितमित्यनालोकयन् ।
तदीक्षणकुतूहलात् प्रतिदिशं विवृत्तानन-
श्चतुर्वदनतामगाद्विकसदष्टदृष्ट्यम्बुजाम् ॥१॥

sthitaḥ sa kamalōdbhavastava hi nābhipaṅkēruhē
kutaḥ svididamaṁbudhāvuditamityanālōkayan |
tadīkṣaṇakutūhalātpratidiśaṁ vivr̥ttānana-
ścaturvadanatāmagādvikasadaṣṭadr̥ṣṭyaṁbujām || 9-1 ||

ஸ்தி²த꞉ ஸ கமலோத்³ப⁴வஸ்தவ ஹி நாபி⁴பங்கேருஹே
குத꞉ ஸ்விதி³த³மம்பு³தா⁴வுதி³தமித்யனாலோகயன் |
ததீ³க்ஷணகுதூஹலாத்ப்ரதிதி³ஶம் விவ்ருத்தானந-
ஶ்சதுர்வத³னதாமகா³த்³விகஸத³ஷ்டத்³ருஷ்ட்யம்பு³ஜாம் || 9-1 ||

குருவாயூரப்பா, நாராயணா,    பிரளயம் முடிந்து  கல்பம் துவங்குகிறது.   உனது நாபிக் கமலத்தில் உதித்த தாமரைக்  கொடியில்  மலர்ந்த  தாமரை இதழ்கள் மேல்  சிருஷ்டி கர்த்தா  ப்ரம்மா   அமர்ந்து கொண்டு  எங்கிருந்து இந்த தாமரை வந்தது என்று  ஒரு கணம் அதிசயித்து, தனது நான்கு சிரங்களையும்  திருப்பி எங்கும்  தனது  எட்டு  கண்களை வீசிப்  பார்க்கிறார்.   

महार्णवविघूर्णितं कमलमेव तत्केवलं
विलोक्य तदुपाश्रयं तव तनुं तु नालोकयन् ।
क एष कमलोदरे महति निस्सहायो ह्यहं
कुत: स्विदिदम्बुजं समजनीति चिन्तामगात् ॥२॥

mahārṇavavighūrṇitaṁ kamalamēva tatkēvalaṁ
vilōkya tadupāśrayaṁ tava tanuṁ tu nālōkayan |
ka ēṣa kamalōdarē mahati nissahāyō hyahaṁ
kutaḥ svididamaṁbujaṁ samajanīti cintāmagāt || 9-2 ||

மஹார்ணவவிகூ⁴ர்ணிதம் கமலமேவ தத்கேவலம்
விலோக்ய தது³பாஶ்ரயம் தவ தனும் து நாலோகயன் |
க ஏஷ கமலோத³ரே மஹதி நிஸ்ஸஹாயோ ஹ்யஹம்
குத꞉ ஸ்விதி³த³மம்பு³ஜம் ஸமஜனீதி சிந்தாமகா³த் || 9-2 ||

எங்கும் ஜலமயம்,  ஒரு உருவமும்  உயிரும்  தென்படவில்லை, நிசப்தம், கடலொலி தவிர. ப்ரம்மாவைத்தவிர வேறு எவருமே இல்லை.  இவ்வளவு நீண்ட பெரிய  தாமரைக்கொடி  எங்கிருந்து முளைத்தது?  பிரம்மனுக்கு  நாராயணன் கண்ணில்  தெரியவில்லை. பூ மறைத்தது.  நடுக்கடலில் தாமரை எழும்பி ஆடுவது போல் இருந்தது.  பிரம்மாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. எப்படி கடலில் தாமரை? எப்படி அதன் மேல் நான்?'' என்று யோசிக்கிறார்.


अमुष्य हि सरोरुह: किमपि कारणं सम्भ्वे-
दिति स्म कृतनिश्चयस्स खलु नालरन्ध्राध्वना ।
स्वयोगबलविद्यया समवरूढवान् प्रौढधी -
स्त्वदीयमतिमोहनं न तु कलेवरं दृष्टवान् ॥३॥

amuṣya hi sarōruhaḥ kimapi kāraṇaṁ saṁbhavē-
diti sma kr̥taniścayaḥ sa khalu nālarandhrādhvanā |
svayōgabalavidyayā samavarūḍhavānprauḍhadhīḥ
tvadīyamatimōhanaṁ na tu kalēbaraṁ dr̥ṣṭavān || 9-3 ||

அமுஷ்ய ஹி ஸரோருஹ꞉ கிமபி காரணம் ஸம்ப⁴வே-
தி³தி ஸ்ம க்ருதனிஶ்சய꞉ ஸ க²லு நாலரந்த்⁴ராத்⁴வனா |
ஸ்வயோக³ப³லவித்³யயா ஸமவரூட⁴வான்ப்ரௌட⁴தீ⁴꞉
த்வதீ³யமதிமோஹனம் ந து கலேப³ரம் த்³ருஷ்டவான் || 9-3 ||

ப்ரம்ம  ஞானி அல்லவா?  தாமரை தானாகவே   வரவில்லை. தன்னைச் சுமக்கவில்லை. ஏதோ ஒரு  தெய்வீக காரணம் அதன் பின் இருக்கிறது. தனது  யோக சக்தியால்  அந்த தாமரைத் தண்டினுள் புகுந்து  தேடியும்  எங்கிருந்து அது உற்பத்தியானது  என்பதை   பிரம்மாவால்  அறியமுடியவில்லை.  

तत: सकलनालिकाविवरमार्गगो मार्गयन्
प्रयस्य शतवत्सरं किमपि नैव संदृष्टवान् ।
निवृत्य कमलोदरे सुखनिषण्ण एकाग्रधी:
समाधिबलमादधे भवदनुग्रहैकाग्रही ॥४॥

tatassakalanālikāvivaramārgagō mārgayan
prayasya śatavatsaraṁ kimapi naiva sandr̥ṣṭavān |
nivr̥tya kamalōdarē sukhaniṣaṇṇa ēkāgradhīḥ
samādhibalamādadhē bhavadanugrahaikāgrahī || 9-4 ||

ததஸ்ஸகலனாலிகாவிவரமார்க³கோ³ மார்க³யன்
ப்ரயஸ்ய ஶதவத்ஸரம் கிமபி நைவ ஸந்த்³ருஷ்டவான் |
நிவ்ருத்ய கமலோத³ரே ஸுக²னிஷண்ண ஏகாக்³ரதீ⁴꞉
ஸமாதி⁴ப³லமாத³தே⁴ ப⁴வத³னுக்³ரஹைகாக்³ரஹீ || 9-4 ||

நூற்றுக்கணக்கான வருஷங்கள்  பிரம்மன்  அந்த தாமரைத் தண்டின்  துவாரங்களில்   உட்புகுந்து தேடியும்  அதன் ஆதாரத்தை அறியமுடியாததால்   பிரம்மதேவன்  திரும்ப  தாமரை மலர்மேல் வந்து அமர்ந்து தவம் இருந்தார்.  நாராயணா  உன் சக்தி எவரால் அறியமுடியும்?  உன் தரிசனம் பெற  ப்ரம்மா சமாதி நிலையடைந்தார் .


शतेन परिवत्सरैर्दृढसमाधिबन्धोल्लसत्-
प्रबोधविशदीकृत: स खलु पद्मिनीसम्भव: ।
अदृष्टचरमद्भुतं तव हि रूपमन्तर्दृशा
व्यचष्ट परितुष्टधीर्भुजगभोगभागाश्रयम् ॥५॥

śatēna parivatsarairdr̥ḍhasamādhibandhōllasat-
prabōdhaviśadīkr̥taḥ sa khalu padminīsaṁbhavaḥ |
adr̥ṣṭacaramadbhutaṁ tava hi rūpamantardr̥śā
vyacaṣṭa parituṣṭadhīrbhujagabhōgabhāgāśrayam || 9-5 ||

ஶதேன பரிவத்ஸரைர்த்³ருட⁴ஸமாதி⁴ப³ந்தோ⁴ல்லஸத்-
ப்ரபோ³த⁴விஶதீ³க்ருத꞉ ஸ க²லு பத்³மினீஸம்ப⁴வ꞉ |
அத்³ருஷ்டசரமத்³பு⁴தம் தவ ஹி ரூபமந்தர்த்³ருஶா
வ்யசஷ்ட பரிதுஷ்டதீ⁴ர்பு⁴ஜக³போ⁴க³பா⁴கா³ஶ்ரயம் || 9-5 ||

தவமிருந்தால்  தரிசனம் தரும் தெய்வமே.  ப்ரம்மதேவனுக்கு  ஞானம் பிறந்தது.  உனது திவ்ய தரிசனம் கிட்டியது. ஆதிசேஷன் மேல்  பள்ளிகொண்ட உனது திவ்ய சௌந்தர்ய ஸ்வரூபத்தைக்  கண்ணாரக் கண்டு மகிழ்ந்தார்/    எவராலும் காணமுடியாத அற்புத காட்சி ப்ரம்மதேவனுக்கு  கிடைத்தது. மிகவும் மகிழ்ந்தார் .  தான் தோன்றிய காரணம் புரிந்து கொண்டார் .

किरीटमुकुटोल्लसत्कटकहारकेयूरयुङ्-
मणिस्फुरितमेखलं सुपरिवीतपीताम्बरम् ।
कलायकुसुमप्रभं गलतलोल्लसत्कौस्तुभं
वपुस्तदयि भावये कमलजन्मे दर्शितम् ॥६॥

kirīṭamukuṭōllasatkaṭakahārakēyūrayuṅ-
maṇisphuritamēkhalaṁ suparivītapītāṁbaram |
kalāyakusumaprabhaṁ galatalōllasatkaustubhaṁ
vapustadayi bhāvayē kamalajanmanē darśitam || 9-6 ||

கிரீடமுகுடோல்லஸத்கடகஹாரகேயூரயுங்-
மணிஸ்பு²ரிதமேக²லம் ஸுபரிவீதபீதாம்ப³ரம் |
கலாயகுஸுமப்ரப⁴ம் க³லதலோல்லஸத்கௌஸ்துப⁴ம்
வபுஸ்தத³யி பா⁴வயே கமலஜன்மனே த³ர்ஶிதம் || 9-6 ||

நாராயணா, உன்னுடைய திவ்ய ஸ்வரூபம்,  ஒளிவிடும் தங்க கிரீடம்,  கண்ணைப் பறிக்கும்   நீலோத்பல   நீல நிறம்,  நீ அணிந்திருக்கும் கௌஸ்துப மலர் அழகு,  கழுத்தில் , தோளில் , மார்பில் அலங்கரிக்கும் பல வண்ண  ஆபரணங்கள், இடுப்பில் தரித்த   பொன்னிற  பீதாம்பர  வஸ்திரம்  அதை பிணைத்திருக்கும்  இன்னொரு  மேல்  வஸ்திரத்தின் கண்ணைப் பறிக்கும்   அழகு,    இவ்வாறு  நீ  அளிக்கும்  உன்  திவ்ய தரிசனத்தில்  மயங்காதார் யார் ?  ஸ்ரீ கிருஷ்ணா உன் திருவடி போற்றி  நமஸ்கரிக்கிறேன்.  பிரம்மனும் அதைத்தானே செய்தார் .

श्रुतिप्रकरदर्शितप्रचुरवैभव श्रीपते
हरे जय जय प्रभो पदमुपैषि दिष्ट्या दृशो: ।
कुरुष्व धियमाशु मे भुवननिर्मितौ कर्मठा-
मिति द्रुहिणवर्णितस्वगुणबंहिमा पाहि माम् ॥७॥

śrutiprakaradarśitapracuravaibhava śrīpatē
harē jaya jaya prabhō padamupaiṣi diṣṭyā dr̥śōḥ |
kuruṣva dhiyamāśu mē bhuvananirmitau karmaṭhā-
miti druhiṇavarṇitasvaguṇabaṁhimā pāhi mām || 9-7 ||

ஶ்ருதிப்ரகரத³ர்ஶிதப்ரசுரவைப⁴வ ஶ்ரீபதே
ஹரே ஜய ஜய ப்ரபோ⁴ பத³முபைஷி தி³ஷ்ட்யா த்³ருஶோ꞉ |
குருஷ்வ தி⁴யமாஶு மே பு⁴வனநிர்மிதௌ கர்மடா²-
மிதி த்³ருஹிணவர்ணிதஸ்வகு³ணப³ம்ஹிமா பாஹி மாம் || 9-7 ||

ஸ்ரீ லட்சுமி காந்தா , நாராயணா,  வேதங்கள் உன்ன்னைப்  போற்றி பாடுகின்றன.  உலகில் துன்பம் துயரம் எல்லாம் போக்கி  இன்பமளிக்கும்  லோகரக்ஷகா,  நான் செய்த புண்ய பலனால்  எனக்கு உனது திவ்ய தரிசனம் கிடைத்தது.  நான் பாக்கியசாலி.   எனக்கு  நீ  அளித்த  இந்த  பிரபஞ்ச   ஸ்ரிஷ்டி காரியத்தை நான் குறைவற  சிறப்பாக  நிறைவேற்ற நீயே எனக்கு  சக்தியும், திறமையும்   ஞானத்தையும்   தரவேண்டும்.''  என்று ப்ரம்ம தேவன் உன்னை வேண்டினார்   அல்லவா?  குருவாயூரப்பா,  நானும்  வேண்டிக்கொள்கிறேன், என் மீதும் கருணை காட்டப்பா.என்  குறை தீர்த்து என்னை ரக்ஷித்தருள்வாய்''  என்று நாராயண நம்பூதிரி  ஸ்தோத்ரம் செய்கிறார்.  

लभस्व भुवनत्रयीरचनदक्षतामक्षतां
गृहाण मदनुग्रहं कुरु तपश्च भूयो विधे ।
भवत्वखिलसाधनी मयि च भक्तिरत्युत्कटे-
त्युदीर्य गिरमादधा मुदितचेतसं वेधसम् ॥८॥

labhasva bhuvanatrayīracanadakṣatāmakṣatāṁ
gr̥hāṇa madanugrahaṁ kuru tapaśca bhūyō vidhē |
bhavatvakhilasādhanī mayi ca bhaktiratyutkaṭē-
tyudīrya giramādadhā muditacētasaṁ vēdhasam || 9-8 ||

லப⁴ஸ்வ பு⁴வனத்ரயீரசனத³க்ஷதாமக்ஷதாம்
க்³ருஹாண மத³னுக்³ரஹம் குரு தபஶ்ச பூ⁴யோ விதே⁴ |
ப⁴வத்வகி²லஸாத⁴னீ மயி ச ப⁴க்திரத்யுத்கடே-
த்யுதீ³ர்ய கி³ரமாத³தா⁴ முதி³தசேதஸம் வேத⁴ஸம் || 9-8 ||

பகவானே  நீ திருவாய் மலர்ந்தருளிய  வார்த்தை எப்படி பிரம்மனை  மகிழ்வித்தது. ஆஹா ,   இதோ நான் திருப்பி சொல்கிறேன் நீ  அருளிய  அந்த  வரத்தை:   ''  பிரம்மதேவா,  உனக்கு மங்களமுண்டாகட்டும். நீ துவங்கப்போகும்   த்ரி  புவன சிருஷ்டி iகாரியம்  பரிபூர்ணமாக  நிறைவேறட்டும். எனது ஆசிகள்.  மீண்டும் தவமிருந்து  உனது சிறந்த பக்தியின் பயனாக,   உனது விருப்பம் இனிதாக  நிறைவேறட்டும் ''  பிரம்மனின் சந்தோஷத்தை  நான் சொல்லவா முடியும்?

शतं कृततपास्तत: स खलु दिव्यसंवत्सरा-
नवाप्य च तपोबलं मतिबलं च पूर्वाधिकम् ।
उदीक्ष्य किल कम्पितं पयसि पङ्कजं वायुना
भवद्बलविजृम्भित: पवनपाथसी पीतवान् ॥९॥

śataṁ kr̥tatapāstataḥ sa khalu divyasaṁvatsarā-
navāpya ca tapōbalaṁ matibalaṁ ca pūrvādhikam |
udīkṣya kila kampitaṁ payasi paṅkajaṁ vāyunā
bhavadbalavijr̥ṁbhitaḥ pavanapāthasī pītavān || 9-9 ||

ஶதம் க்ருததபாஸ்தத꞉ ஸ க²லு தி³வ்யஸம்வத்ஸரா-
நவாப்ய ச தபோப³லம் மதிப³லம் ச பூர்வாதி⁴கம் |
உதீ³க்ஷ்ய கில கம்பிதம் பயஸி பங்கஜம் வாயுனா
ப⁴வத்³ப³லவிஜ்ரும்பி⁴த꞉ பவனபாத²ஸீ பீதவான் || 9-9 ||

உண்ணி  கிருஷ்ணா,  உன்  திருவாக்கின் படி,  மிகுந்த உற்சாகத்தோடு ப்ரம்ம தேவன் மறுபடியும் ஒரு நூறு வருஷங்கள் தவமிருந்தார் .  உன் அருளால் அவருக்கு சர்வ சக்தியும் சித்தியாயிற்று.  தெய்வபலமும், மனோபலமும் ஒரு சேரப்பெற்று முன்னிலும் அதிக சக்தியோடு அவர்  உன்னை வணங்கினார்  . அவர்  அமர்ந்திருந்த  தாமரை மலர் கடலில் காற்றில்  மிதந்து அசைந்தது.  உன்னிடமிருந்து பெற்ற  அளவிடமுடியாத சக்தியோடு  காற்று நீர் இரண்டுமே   உனது ஜீவசக்தியாக அவருள்ளே  செல்ல   ப்ரம்மா புத்துணர்ச்சி யடைந்தார் .

तवैव कृपया पुनस्सरसिजेन तेनैव स:
प्रकल्प्य भुवनत्रयीं प्रववृते प्रजानिर्मितौ ।
तथाविधकृपाभरो गुरुमरुत्पुराधीश्वर
त्वमाशु परिपाहि मां गुरुदयोक्षितैरीक्षितै: ॥१०॥

tavaiva kr̥payā punaḥ sarasijēna tēnaiva saḥ
prakalpya bhuvanatrayīṁ pravavr̥tē prajānirmitau |
tathāvidhakr̥pābharō gurumarutpurādhīśvara
tvamāśu paripāhi māṁ gurudayōkṣitairīkṣitaiḥ || 9-10 ||

தவைவ க்ருபயா புன꞉ ஸரஸிஜேன தேனைவ ஸ꞉
ப்ரகல்ப்ய பு⁴வனத்ரயீம் ப்ரவவ்ருதே ப்ரஜானிர்மிதௌ |
ததா²வித⁴க்ருபாப⁴ரோ கு³ருமருத்புராதீ⁴ஶ்வர
த்வமாஶு பரிபாஹி மாம் கு³ருத³யோக்ஷிதைரீக்ஷிதை꞉ || 9-10

அடுத்து  ப்ரம்மா தாமரை மலர்மேல் அமர்ந்தவாறு   மூவுலகையும்  படைத்தார் , அவற்றில் பலகோடி  ஜீவன்கள்  உயிர் பெற்றன. எண்டே  குருவாயூரப்பா,  எவ்வளவு தயை, காருண்யம் உனக்கு.  பிரபு என் மேலும் கருணை கூர்ந்து ரட்சிக்குமாறு உன்னை நமஸ்கரிக்கிறேன் ''

Thursday, February 1, 2024

Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 6


 
 
 
6.  விஷ்ணுவின் விராட் ஸ்வரூபம், விஸ்வரூப தர்சனம்

1. एवं चतुर्दशजगन्मयतां गतस्य पातालमीश तव पादतलं वदन्ति ।
पादोर्ध्वदेशमपि देव रसातलं ते गुल्फद्वयं खलु महातलमद्भुतात्मन् ॥१॥

 ēvaṁ caturdaśajaganmayatāṁ gatasya pātālamīśa tava pādatalaṁ vadanti |
pādōrdhvadēśamapi dēva rasātalaṁ tē gulphadvayaṁ khalu mahātalamadbhutātman || 6-1 ||

ஏவம் சதுர்தஸ ஜகந்மயதாம் கதஸ்ய பாதாலம் ஈஸ தவ பாததலம் வதந்தி
பாதோர்த்த்வ தேஸமபி தேவ ரஸாதலம் தே குல்பத்வயம் கலு மஹாதலம் அத்புதாத்மந். (1)

ஹே,  என் தெய்வமே குருவாயூர் கொச்சு கிருஷ்ணா, எப்படியப்பா நீ பதினான்கு உலகையும் ஒன்று சேர்த்த விராட் ஸ்வரூபமாக காட்சி அளித்தாய்? நினைத்தே பார்க்க முடியவில்லையே? உன் திருவடி பாதங்கள் பாதாளத்தையும் தாண்டி கீழே செல்ல, மேல் பாதம் ரஸாதளத்தில் தென்பட, தண்டை அணிந்த கணுக் கால்கள் மஹா தளத்தில் காணப்பட அடேயப்பா, மேலே மேலே எப்படி சொல்லிக்கொண்டே போவேன். வார்த்தை தேடுகிறேன்.

2 जङ्घे तलातलमथो सुतलं च जानू किञ्चोरुभागयुगलं वितलातले द्वे ।
क्षोणीतलं जघनमम्बरमङ्ग नाभि- र्वक्षश्च शक्रनिलयस्तव चक्रपाणे ॥२॥

jaṅghē talātalamathō sutalaṁ ca jānū kiñcōrubhāgayugalaṁ vitalātalē dvē |
kṣōṇītalaṁ jaghanamaṁbaramaṅga nābhi rvakṣaśca śakranilayastava cakrapāṇē || 6-2 ||

ஜங்க்கே தலாதலம் அதோஸுதலஞ்ச ஜாநூ கிம் சோருபாகயுகலம் விதலாதலே த்வே
க்ஷோணீதலம் ஜகநம் அம்பரம் அங்க நாபி: வக்ஷஸ்ச ஸக்ர நிலயஸ்தவ சக்ரபாணே 2

ஓ குருவாயூரப்பா, சுதர்சன சக்ரதாரி, முழங்காலுக்கு கீழே முன்புறம் தலா தளத்தில் இருக்கிறதே. முழங்கால் முட்டிகள் சுதல லோகத்தில் கண்ணில் படுகிறதே. அடேயப்பா, உன் இரு தொடைக ளும் விதல அதல லோகங்களா? அப்படியென்றால் உன் இடுப்பின் முன்புறம் பூமியோ? தொப்புள் பகுதி ஆகாசம் போல இருக்கிறது. உன் மார்பு அகண்டு இந்திர லோகமாக தெரிகிறது. இந்திரன் அங்கே ஆசனத்தில் தேவர்களோடு அமர்ந்திருப்பதை பார்க்கிறேனே .

3.ग्रीवा महस्तव मुखं च जनस्तपस्तु फालं शिरस्तव समस्तमयस्य सत्यम् ।
 एवं जगन्मयतनो जगदाश्रितैर- प्यन्यैर्निबद्धवपुषे भगवन्नमस्ते ॥३॥

grīvā mahastava mukhaṁ ca janastapastu phālaṁ śirastava samastamayasya satyam |
ēvaṁ jaganmayatanō jagadāśritaira-pyanyairnibaddhavapuṣē bhagavannamastē || 6-3 ||

க்ரீவா மஹஸ்தவ முகஞ் ச ஜநஸ்தபஸ்துபாலம் ஸிரஸ்தவ ஸமஸ்தமயஸ்ய ஸத்யம்.
ஏவம் ஜகந்மயதநோ ஜகதாஸ்ரிதைர:அப்யந்யைர் நிபத்த வபுஷே பகவந் நமஸ்தே (3)

அப்பனே, குருவாயூரா , உன் உடம்பின் சில பகுதிகளை பதினாலு லோகங்களில் சிலதாக பார்த்தேனே. மீதியைச்  சொல்கிறேன். உன் கழுத்து பூரா மஹ லோகம் , முகம் ஜன லோகம். ரொம்ப பொருத்தம். நெற்றியோ தபோ லோகம், உனது சிரம் சத்யலோகம், உன் தேகமே பிரபஞ்சம்,  அப்பனே, நீ எங்கும் நிறைந்தவன் என்பதை இதைவிட வேறு எப்படி சொல்வேன்? அப்பா என்னுடைய சாஷ்டாங்க நமஸ்காரத்தை உனக்கு செலுத்துகிறேன்.

4 त्वद्ब्रह्मरन्ध्रपदमीश्वर विश्वकन्द छन्दांसि केशव घनास्तव केशपाशा: ।
उल्लासिचिल्लियुगलं द्रुहिणस्य गेहं पक्ष्माणि रात्रिदिवसौ सविता च नेत्रै ॥४॥

tvadbrahmarandhrapadamīśvara viśvakanda chandāṁsi kēśava ghanāstava kēśapāśāḥ |
ullāsicilliyugalaṁ druhiṇasya gēhaṁ pakṣmāṇi rātridivasau savitā ca nētrē || 6-4 ||

த்வத் ப்ரஹ்மரந்த்ர பதம் ஈஸ்வர விஸ்வகந்த சந்தாம்ஸி கேஸவ கநாஸ்தவ கேஸபாஸா:                  உல்லாஸி சில்லியுகலம் த்ருஹிணஸ்ய கேஹம். பக்ஷ்மாணி ராத்ரிதிவஸெள ஸவிதா ச நேத்ரே.4

 என் உண்ணி கிருஷ்ணா, நீ தான் இந்த பிரபஞ்சத்தின் ஆதாரம். உன் உடம்பில் உள்ளவை தான் இந்த பிரபஞ்சத்தில் காணும் யாவையும். உன் சிரசின் உச்சியில் ப்ரம்மரந்திரத்திலிருந்து பிறந்தது தான் வேதங்கள் . துளியும் சந்தேகத்துக்கு இடமே இல்லை. மேலே காணும் கருநிற மேகங்கள் எல்லாமே உன் கரிய புருவங்கள். ப்ரம்மாவின் லோகம் தான்  உன் கண் இமைகள் தான் ஐயனே.  இரவும் பகலும் உன் கண்கள், அப்பப்பா, சூரியன் அல்லவோ அவை! ஒளியே காட்டிக் கொடுக்கிறதே!.

5. निश्शेषविश्वरचना च कटाक्षमोक्ष: कर्णौ दिशोऽश्वियुगलं तव नासिके द्वे ।
 लोभत्रपे च भगवन्नधरोत्तरोष्ठौ तारागणाश्च दशना: शमनश्च दंष्ट्रा ॥५॥

niśśēṣaviśvaracanā ca kaṭākṣamōkṣaḥ karṇau diśō:’śviyugalaṁ tava nāsikē dvē |
lōbhatrapē ca bhagavannadharōttarōṣṭhau tārāgaṇāśca daśanāḥ śamanaśca daṁṣṭrā || 6-5 ||

நி: ஸேஷ விஸ்வரசநா ச கடாக்ஷமோக்ஷ: கர்ணெள திஸோ ஸ்வியுகளம் தவ நாஸிகே த்வே
லோபத்ரபே ச பகவந்நதரோத்த ரோஷ்டாடெள தாராகணாஸ்ச தஸநா: ஸமநஸ்ச தம்ஷ்ரா. 5

ஓ, குருவாயூரப்பா, நான் தான் ஏற்கனவே சொல்லிவிட்டேனே. உன் கடைக்கண் விழி ஒன்றே போதுமே, பிரபஞ்சம் உயிர் பெற்று எழுவதற்கு. உன் இரு செவிகள் தான் திசைகள்.  உன் காது தானே  நாலா பக்கத்து செய்திகளையும்  எங்களைக்  கேட்க வைக்கிறது.  உனது நாசித்வாரம் மூச்சு இழுத்து வெளிவிடுகிறதே  இந்த இரு செயலும் தான் அஸ்வினி தேவதைகள்.   
 
கீழுதடு மேலுதடு ரெண்டுமே, லோபம் எனும் சுயநலம், பேராசை இவற்றை அடக்குபவை,  தன்மையான குணத்தை அளிப்பவை.

பற்கள்; தான் நக்ஷ்த்ரங்கள், கடைவாய் பற்கள் தான் எமதர்மன் என்கிறார் நாராயண நம்பூதிரி. அவர் கண்களுக்கு இதெல்லாம் தெரிந்து தானே ஸ்லோகமாக வந்திருக்கிறது. எதிரே உட்கார்ந்து பார்த்தவரல் லவா?

6. माया विलासहसितं श्वसितं समीरो जिह्वा जलं वचनमीश शकुन्तपङ्क्ति: ।
सिद्धादय: स्वरगणा मुखरन्ध्रमग्नि- र्देवा भुजा: स्तनयुगं तव धर्मदेव: ॥६॥

māyā vilāsahasitaṁ śvasitaṁ samīrō jihvā jalaṁ vacanamīśa śakuntapaṅktiḥ |
siddhādayaḥ svaragaṇā mukharandhramagni-rdēvā bhujāḥ stanayugaṁ tava dharmadēvaḥ || 6-6 ||   

மாயா விலாஸ ஹஸிதம் ஸ்வஸிதம் ஸமீரோ ஜிஹ்வா ஜலமா வசநமீஸ ஸகுந்த பங்க்தி:    
ஸித்தாய: ஸ்வரகணா முகரந்த்ரம் அக்நி: தேவா புஜா: ஸ்தநயுகம் தவ தர்மதேவ: 6

என்னுடைய ப்ரபோ, வாதபுரீசா, உன் காந்த புன்னகை தான் ஐயா மாயை.! உன் மூச்சு தான் உலகத்தில் ப்ராண வாயு ,காற்று.     நாக்கு தான் ஜலம். வார்த்தைகள் தான் பக்ஷிகள் இனம்.    சப்தம் கானம் தான் சித்தர்கள். வாய் அக்னி, கரங்கள் எல்லாமே  உபதேவதைகள்.  மார்பு தான்  தர்மதேவதை..

पृष्ठं त्वधर्म इह देव मन: सुधांशु - रव्यक्तमेव हृदयंबुजमम्बुजाक्ष ।
कुक्षि: समुद्रनिवहा वसनं तु सन्ध्ये शेफ: प्रजापतिरसौ वृषणौ च मित्र: ॥७॥ 7

pr̥ṣṭhaṁ tvadharma iha dēva manaḥ sudhāṁśu-ravyaktamēva hr̥dayāṁbujamaṁbujākṣa |                                                                      kukṣiḥ samudranivahā vasanaṁ tu sandhyē śēphaḥ prajāpatirasau vr̥ṣaṇau ca mitraḥ || 6-7 ||

ப்ருஷ்டம் த்வதர்ம இஹ தேவ மந: ஸுதாம்ஸு: அவ்யக்தமேவ ஹ்ருதயாம்புஜம் அம்புஜாக்ஷ: குக்ஷி : ஸமுத்ரநிவஹா வஸநம் து ஸந்த்யே ஸேப: ப்ரஜாபதிரஸெள வ்ருஷணெள ச மித்ர:

என் தாமரைக்கண்ணா, ப்ரபோ, உன் முதுகுக்கு கீழே பின்புறம் அதர்மத்தை குறிக்கும். நல்லது கெட்டது எல்லாமே உன்னுள்ளே தானே. மனம் சந்த்ரன், நாபிப் பிரதேசம் எல்லையற்ற சமுத்திரம். உன் மேலாடை இடுப்பு வஸ்திரம் தான் அந்தி, விடியற்காலை நேரங்கள். உன் உறுப்புகள் ப்ரம்மா, மித்ரன் ஆகியோர். விண்ணும் மண்ணும் நீயே என்று ஒரு வரியில் சொல்லாமல் ஏன் எப்படி நீட்டி சொல்கிறேன்? என் கண்ணால் பார்த்த ஆனந்தத்தை மற்றவருக்காக விவரிக்க வேண்டாமா?

8. श्रोणीस्थलं मृगगणा: पदयोर्नखास्ते हस्त्युष्ट्रसैन्धवमुखा गमनं तु काल: ।
 विप्रादिवर्णभवनं वदनाब्जबाहु- चारूरुयुग्मचरणं करुणांबुधे ते ॥८॥

śrōṇīsthalaṁ mr̥gagaṇāḥ padayōrnakhāstē hastyuṣṭrasaindhavamukhā gamanaṁ tu kālaḥ |
viprādivarṇabhavanaṁ vadanābjabāhu-cārūruyugmacaraṇaṁ karuṇāṁbudhē tē || 6-8 ||


ஸ்ரோணீஸ்த்தலம் ம்ருககணா: பதயோர்நகாஸ்தே ஹஸ்த்யுஷ்ட்ரஸைந்த்தவமுகா கமநம் து கால: விப்ராதி வர்ண பவநம் வதனாப்ஜ பாஹு சாரூருயுக்ம சரணம் கருணாம் புதே தே.

''ஹே கருணாமூர்த்தி, உன் இடுப்பு பிரதேசத்தில் இருந்து உயிர் பெற்றவை தான் விலங்குகள். கால் நகங்கள் தான்  யானைகள்  ஒட்டகங்கள், குதிரைகள் போல் மிருகங்களாயின. பகவானே உன் அசைவு தான் காலம். உன் உடம்பிலிருந்து உருவான மனித உயிர்கள் தான் அவரவர் ஸ்வதர்ம தொழில், கர்மத்துக்கு தக்கவாறு தோன்றின. புருஷ சூக்தம் இதை தான் சொல்கிறது. இதில் ஜாதி எங்கே வந்தது?

9. संसारचक्रमयि चक्रधर क्रियास्ते वीर्यं महासुरगणोऽस्थिकुलानि शैला: ।
नाड्यस्सरित्समुदयस्तरवश्च रोम जीयादिदं वपुरनिर्वचनीयमीश ॥९॥

saṁsāracakramayi cakradhara kriyāstē vīryaṁ mahāsuragaṇō:’sthikulāni śailāḥ |                                        nāḍyassaritsamudayastaravaśca rōma jīyādidaṁ vapuranirvacanīyamīśa || 6-9 ||

ஸம்ஸார சக்ரம் அயி சக்ரதர க்ரியாஸ்தே வீர்யம் மஹாஸுரகணோ ஸ்த்தி குலாநி ஸைலா:
நாட்யஸ்ஸரித் ஸமுதய: தரவஸ்ச ரோம ஜீயாதிதம் வபுர் அநிர்வசநீயம் ஈஸ (9)

''என் தெய்வமே, சுதர்சன சக்ரமேந்தியவனே, உன் செயல் தான் உலக வாழ்க்கை சக்ரம் எனும் ஓய்வில்லாத பிறப்பு இறப்பு ஸம்ஸார அனுபவம். உனது வீர பௌருஷம் தான் அசுரர்களையும் கட்டுக்குள் வைப்பது. உன் எலும்புகள் தான் மஹாசக்தி வாய்ந்த மலைகள். உன் நாடி நரம்புகள் தான் எண்ணற்ற ஆறு ஏரி குளம் போன்ற நீர் நிலைகள். உன் தலை முடிகளாகத்தான் எண்ணற்ற தாவர வர்க்கத்தை பார்க்கிறேன். அப்பா என் குருவாயூர் கிருஷ்ணா. போதும் போதும், உன்னுடைய விராட் தரிசனத்தை, உருவத்தை, முழுதுமாக விவரிக்க என்னால் இயலவில்லை. ஜெயவிஜயீபவ..

10. ईदृग्जगन्मयवपुस्तव कर्मभाजां कर्मावसानसमये स्मरणीयमाहु: ।
तस्यान्तरात्मवपुषे विमलात्मने ते वातालयाधिप नमोऽस्तु निरुन्धि रोगान् ॥१०॥

īdr̥gjaganmayavapustava karmabhājāṁ karmāvasānasamayē smaraṇīyamāhuḥ |
tasyāntarātmavapuṣē vimalātmanē tē vātālayādhipa namō:’stu nirundhi rōgān || 6-10 ||

ஈக்ருத் ஜகந்மய வபுஸ்தவ கர்ம பாஜாம் கர்மாவஸாந ஸமயே ஸ்மரணீயம் ஆஹு:
தஸ்யாந்தராத்ம வபுஷே விமலாத்மநே தே வாதாலயாதிப நமோ ஸ்து நிருந்தி ரோகாந்.

நாராயண பட்டத்ரி ஸ்ரீமந் நாராயணனின் விராட் ஸ்வரூபத்தை வர்ணிக்கிறார். ஸ்ரீமந் நாராயணனின் விராட் ஸ்வரூபத்தை வைதீக கர்மங்கள் முடித்த பின்னும், மரண காலத்திலும் த்யானம் செய்வது வழக்கம். இவ்வளவு பெரிய விராட் ஸ்வரூபத்தின் முக்கிய அங்கமாக நீ உள்ளுறைகிறாய். பூலோக வாசிகள் கர்மத்தால் சம்சார பந்தத்தில் உழல்பவர்கள் உன்னுடைய விராட் ஸ்வரூபத்தை நினைவு கூர்தல் வேண்டும். அண்ட சராசரமாக தோன்றுபவன் நீ. சத்வ ஸம்பன்னன். யாக யஞனங்களின் முடிவு, பலன், நீ.     மரணத்தின் பின் மோக்ஷம் முக்தி தருபவன்.

ஹே என் ப்ரபோ, குருவாயூரப்பா, என் ,மீதும் உன் கருணை வை. என் தேஹ உபாதைகள், துன்பங்களை அகற்று. உனக்கு என் ஸாஷ்டாங்க நமஸ் காரங்கள்.

 

Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 5

 Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 5


 

 


 

 

 

5.  ப்ரபஞ்ச காரணன்

व्यक्ताव्यक्तमिदं न किञ्चिदभवत्प्राक्प्राकृतप्रक्षये
मायायाम् गुणसाम्यरुद्धविकृतौ त्वय्यागतायां लयम् ।
नो मृत्युश्च तदाऽमृतं च समभून्नाह्नो न रात्रे: स्थिति-
स्तत्रैकस्त्वमशिष्यथा: किल परानन्दप्रकाशात्मना ॥१॥

vyaktāvyaktamidaṁ na kiñcidabhavatprākprākr̥taprakṣayē
māyāyāṁ guṇasāmyaruddhavikr̥tau tvayyāgatāyāṁ layam |
nō mr̥tyuśca tadāmr̥taṁ ca samabhūnnāhnō na rātrēḥ sthiti-
statraikastvamaśiṣyathāḥ kila parānandaprakāśātmanā || 5-1 ||

1. வ்யக்தாவ்யக்தமிதம் ந கிஞ்சிதபவத் ப்ராக் ப்ராக்ருத ப்ரக்ஷயே
மாயாயாம் குண ஸாம்ய ருத்த விக்ருதெள த்வய்யாகதாயம் லயம்
நோ ம்ருத்யுஸ்ச ததாம்ருதம் ச ஸமபூ நாஹ்நோ ந ராத்ரோ: ஸ்த்திதி:
தத்ரைகஸ்த்வமஸிஷ்யதா: கில பராநந்த ப்ரகாசாத்மநா || (1)

குருவாயூரப்பா, இந்த ப்ரக்ருதி மஹா பிரளயத்தின் போது எங்கும் நீர்மயமாக வேறெந்த ஜீவராசி இல்லாமல் இருந்தது. கிருஷ்ணா, விஷ்ணு, நாராயணா , உன் மாயையினால் சர்வமும் ஒவ்வொன்றாய் மீண்டும் உயிராக தோன்றியது. ஆத்மா பரமாத்மா வேறாகியது. பிறப்பு இறப்பு உருவாகியது. பகலும் இரவும் வித்யாசம் தெரிந்தது. எல்லாவற்றிற்கும் காரணனாக நீ ஒளிமயமாக நின்றாய். எதற்கு இதை சொல்கிறேன்  தெரியுமா? ... எல்லாம் உன் செயல். நீ இன்றி ஒரு அணுவும் அசையாது. சிருஷ்டி மட்டும் அல்ல அதை க்ஷேமமாக பாதுகாக்கும் கடவுள் நீ. எங்கள் குறையை தீர்த்து ரக்ஷிப்பாயாக. லோகா  ஸமஸ்தா சுகினோ பவந்து:

2. काल: कर्म गुणाश्च जीवनिवहा विश्वं च कार्यं विभो
चिल्लीलारतिमेयुषि त्वयि तदा निर्लीनतामाययु: ।
तेषां नैव वदन्त्यसत्त्वमयि भो: शक्त्यात्मना तिष्ठतां
नो चेत् किं गगनप्रसूनसदृशां भूयो भवेत्संभव: ॥२॥

kālaḥ karma guṇāśca jīvanivahā viśvaṁ ca kāryaṁ vibhō
cillīlāratimēyuṣi tvayi tadā nirlīnatāmāyayuḥ |
tēṣāṁ naiva vadantyasatvamayi bhōḥ śaktyātmanā tiṣṭatāṁ
nō cēt kiṁ gaganaprasūnasadr̥śāṁ bhūyō bhavētsaṁbhavaḥ || 5-2 ||

காலா: கர்ம குணாஸ்ச ஜீவநிவஹா விஸ்வஞ்ச கார்யம் விபோ
சில்லீலா ரதிமேயுஷி த்வயி ததா நிர்லீநதாமாயயு:
தேஷாம் நைவ வதந்த்யஸ்த்த்வமயி போ: ஸக்த்யாத்மநா திஷ்ட்டதாம்
நோ சேத் கிம் ககநப்ரஸூந ஸத்ருஸாம் பூயோ பவேத் ஸம்ப்பவ: (2)

வாதபுரீசா, பிரளய காலத்தில், காலம், ஆகாசம், கர்மா, சத்வ ரஜோ தமோ குணங்கள் எல்லாம் உன்னில் மறைந்தன. தாவரம், ஜங்கம , உயிர்கள்   எல்லாமே   உன் மாயை யினால் வேறு வேறாக உருவெடுத்து ப்ரக்ரிதியில் உலவின.

ஒன்றோடு ஒன்று இசைந்து, இணங்கி, சமநிலையில் இயங்க அவற்றின் குணம், உருவம் எல்லாம் கொடுத்தாய். ஆத்மா   என்பது   பரமாத்மா உன் அம்சமாக ஒவ்வொன்றிலும் தனித்து விளங்கியது. குணங்கள் அவற்றை இயக்க, கர்மாக்கள் வேறுபட்டு உலகம் துவங்கியது. இயங்கியது,  வாட்டி வதக்கியது.

3. एवं च द्विपरार्धकालविगतावीक्षां सिसृक्षात्मिकां
बिभ्राणे त्वयि चुक्षुभे त्रिभुवनीभावाय माया स्वयम् ।
मायात: खलु कालशक्तिरखिलादृष्टं स्वभावोऽपि च
प्रादुर्भूय गुणान्विकास्य विदधुस्तस्यास्सहायक्रियाम् ॥३॥

ēvaṁ ca dviparārdhakālavigatāvīkṣāṁ sisr̥kṣātmikāṁ
bibhrāṇē tvayi cukṣubhē tribhuvanībhāvāya māyā svayam |
māyātaḥ khalu kālaśaktirakhilādr̥ṣṭaṁ svabhāvō:’pi ca
prādurbhūya guṇānvikāsya vidadhustasyāssahāyakriyām || 5-3

ஏவஞ்ச த்விபரார்த்தகால விகதாவீக்ஷாம் ஸிஸ்ருக்ஷாத்மிகாம்
பிப்ப்ராணே த்வயி சுக்ஷுபே த்ரிபவநீ பாவாய மாயா ஸ்வயம்.
மாயாத: கலு காலஸக்தி: அகிலாத்ருஷ்டம் ஸ்வபாவோபி ச
ப்ராதுர்ப்பூய குணாந் விகாஸ்ய விதது: தஸாயா: ஸஹாயக்ரியாம் (3)

குருவாயூரப்பா, காலத்தை சாவி கொடுத்து முடுக்கி  விட்டாய்.   கால கடிகாரம் ஓட ஆரம்பித்துவிட்டது. மாற்றங்கள் காலத் திற்கேற்ப மாறும் என்ற நியதி உருவாக் கினாய். இதற்குள் ரெண்டு 'பரார்த்தம்'' (இது ப்ரம்மாவின் ப்ரம்ம லோக வருஷங்களில்  சில நிமிஷ காலம்.   நமக்கு பல மடங்கு அதிகமான ஆண்டுகள். அதாவது ப்ரம்மாவின் ஒரு நிமிஷம் நமக்கு ஒரு வருஷம் மாதிரி..) நீ சிருஷ்டியை கண்காணிக்க பிரம்மாவை உருவாக்கி, எண்ணற்ற ஜீவன்களை பிறப்பித்தாய். உன் மாயை உனது சங்கல்பத்தை நிறைவேற்றியது. மூவுலகும் இவ்வாறு அறிமுகமானது. சிருஷ்டி கையினால் செய்வது அல்ல. மனதில் நினைத்தாலே உருவாவது. அதைத்தான் சங்கல்பம் என்று சொல்வது. விஷ்ணுவின் மாயையை அடிப்படையாக கொண்டது பிரபஞ்சமும் அதில் சிருஷ்டியும்.

4. मायासन्निहितोऽप्रविष्टवपुषा साक्षीति गीतो भवान्
भेदैस्तां प्रतिबिंबतो विविशिवान् जीवोऽपि नैवापर: ।
कालादिप्रतिबोधिताऽथ भवता संचोदिता च स्वयं
माया सा खलु बुद्धितत्त्वमसृजद्योऽसौ महानुच्यते ॥४॥

māyāsannihitō:’praviṣṭavapuṣā sākṣīti gītō bhavān
bhēdaistāṁ pratibiṁbatō viviśivān jīvō:’pi naivāparaḥ |
kālādipratibōdhitā:’tha bhavatā sañcōditā ca svayaṁ
māyā sā khalu buddhitattvamasr̥jadyō:’sau mahānucyatē || 5-4 ||

மாயா ஸந்நிஹிதோ ப்ரவிஷ்டவபுஷா ஸாக்ஷீதி கீதோ பவாந்
பேதைஸ்தாம் ப்ரதிபிம்பதோ விவஸிவாந் ஜீவோ பி நைவாபர:
காலாதி ப்ரதிபோதித த பவதா ஸஞ்சோதிதா ச ஸ்வயம்
மாயா ஸா கலு புத்திதத்வம் அஸ்ருஜத் யோ ஸெள மஹாநுச்யதே. (4)

கிருஷ்ண பரமாத்மா, நீ மாயாவி. வேதங்கள் உன்னை மாயையின் சிருஷ்டிக்கு சாக்ஷி பூதம் என்கிறது. மாயையின் தோற்றங்களில், ஜீவன்களில், நீ உள்நின்று ஆட்டுவிக்கும் ஜீவாத்மா. நீ அந்த மாயையாலோ, அதன் விளைவு களாலோ எந்த சம்பந்தமுமில்லா தவன். எல்லாவற்றையும் அறிந்தும் அதில் எந்த பங்கேற்பும் இல்லை. மாயையின் எல்லாத்  தோற்றங்களிலும் தனித்தனியாக ஜீவாத் மாவாக ஒளிர்கிறாய்.

5. तत्रासौ त्रिगुणात्मकोऽपि च महान् सत्त्वप्रधान: स्वयं
जीवेऽस्मिन् खलु निर्विकल्पमहमित्युद्बोधनिष्पाद्क: ।
चक्रेऽस्मिन् सविकल्पबोधकमहन्तत्त्वं महान् खल्वसौ
सम्पुष्टं त्रिगुणैस्तमोऽतिबहुलं विष्णो भवत्प्रेरणात् ॥५॥

tatrāsau triguṇātmakō:’pi ca mahān sattvapradhānaḥ svayaṁ
jīvē:’smin khalu nirvikalpamahamityudbōdhaniṣpādakaḥ |
cakrē:’smin savikalpabōdhakamahantattvaṁ mahān khalvasau
sampuṣṭaṁ triguṇaistamō:’tibahulaṁ viṣṇō bhavatprēraṇāt || 5-5 ||

தத்ராஸெள த்ரிகுணாத்மகோ பிச மஹாந் ஸத்வப்ரதாநா: ஸ்வயம்
ஜீவே ஸ்மிந்கலு நிர்விகல்பமஹமித் யுத்போத நிஷ்பாதக:
சக்ரே ஸ்மிந் ஸவிகல்ப போதகமஹந்தத்வம் மஹாந் கல்வஸெள
ஸம்புஷ்டம் த்ரிகுணைஸ் தமோ திபஹுலம் விஷ்ணோபவத்ப்ரேரணாத்

குருவாயூரப்பா, இந்த மாயையின் சமாச்சாரங்களில் ஒன்று புலனாகிறது. அது சத்வ ரஜோ, தமோ குணங் களில் ஒன்றாக கலந்து இருந்தாலும் சத்வ குணம் தான் தலை தூக்குகிறது. அது புத்தியோடு ஈடுபட்டு அஹங்காரம் உருவாக காரணமாகிறது. நான், எனது , என்னுடைய, எங்களது என்று சுயநலம் பெருகி மனம் இருளடைகிறது. தவறுகள் தொடர ஆரம்பிக்கிறது. பாபம் வளர்கிறது.

6. सोऽहं च त्रिगुणक्रमात् त्रिविधतामासाद्य वैकारिको
भूयस्तैजसतामसाविति भवन्नाद्येन सत्त्वात्मना
देवानिन्द्रियमानिनोऽकृत दिशावातार्कपाश्यश्विनो
वह्नीन्द्राच्युतमित्रकान् विधुविधिश्रीरुद्रशारीरकान् ॥६॥

sō:’haṁ ca triguṇakramāttrividhatāmāsādya vaikārikō
bhūyastaijasatāmasāviti bhavannādyēna sattvātmanā |
dēvānindriyamāninō:’kr̥ta diśāvātārkapāśyaśvinō
vahnīndrācyutamitrakān vidhuvidhiśrīrudraśārīrakān || 5-6 ||

ஸோ ஹஞ்ச த்ரிகுணக்ரமாத் த்ரிவிததாம் ஆஸாத்ய வைகாரிகோ
பூயஸ்தஜைஸ தாமஸாவிதி பவந்நாத்யேந ஸத்வாத்மநா
தேவாநிந்த்ரிய மாநினோ க்ருத திஸாவாதார்க்க பாஸ்யஸ்விநோ
வஹ்நீந்த்ராசாயுத மித்ரகாந் விது விதி ஶ்ரீருத்ர ஸாரீரகாந். (6)

ஹே, குருவாயூரப்பா, இந்த அஹம்காரம் இருக்கிறதே அது வெவேறு விகிதத்தில் சத்வ ரஜோ தமோ குணங்களோடு கலந்து, வித விதமான உணர்ச்சிகளின் கலவையாகிறது. சத்வ குணம் அதிகமாக இருந்தபோது வைகாரிகம் எனும் தன்மை, ரஜோ குணம் தூக்கலாக இருந்தால் தைஜஸா , தமோகுணம் மிகுதியானால் தாமஸா என்று குணம் வெளிப்படுகிறது. வைகாரிக, அதாவது சாத்வீக குணம் படைத்தவர்கள் தெய்வங்கள். மனத்தையும் புலன்களையும் கட்டுக்குள் கொண்டவர்கள். ஞானேந்திரியங்களை செயல் படுத்துபவர்கள். அவர்களே, திக் தேவதைகள், புலனுணர்வுகளுக்கு அதிபதிகள் வாயு, என்றால் ஸ்பரிசம், கேட்டல் ஆகியவற் றை புரியச் செய்பவர், பார்வைக்கு சூர்யன், சுவைத்தலுக்கு வருணன். வாசனை அறிய அஸ்வினி தேவதைகள். அதேபோல் கர்மேந்திரியங்களின் செயலான பேச்சுக்கு அக்னி, கரங்களுக்கு இந்திரன், கால்களின் இயக்கத்துக்கு விஷ்ணு, கழிவுகளை வெளியேற்ற மித்ரன், சிருஷ்டி உற்பத்திக்கு பிரஜாபதி, மனம் , புத்தி, அஹங்காரம், சித்த ம் எனப்படும் உள்ளுணர்வுகளை (அந்தக் கரணம்) கண்காணிக்கும் தேவதைகள், அதாவது மனதுக்கு சந்திரன், புத்திக்கு ப்ரம்மா, அஹங்காரத்துக்கு ருத்ரன், சித்தத்துக்கு க்ஷேத்ரஞர் என்று வெவ்வேறு பிரிவுகளுக்கு அதிகாரிகள் உண்டானார்கள்.

7. भूमन् मानसबुद्ध्यहंकृतिमिलच्चित्ताख्यवृत्त्यन्वितं
तच्चान्त:करणं विभो तव बलात् सत्त्वांश एवासृजत् ।
जातस्तैजसतो दशेन्द्रियगणस्तत्तामसांशात्पुन-
स्तन्मात्रं नभसो मरुत्पुरपते शब्दोऽजनि त्वद्बलात् ॥७॥

bhūmanmānasabuddhyahaṅkr̥timilaccittākhyavr̥tyanvitaṁ
taccāntaḥkaraṇaṁ vibhō tava balātsattvāṁśa ēvāsr̥jat |
jātastaijasatō daśēndriyagaṇastattāmasāṁśātpuna-
stanmātraṁ nabhasō marutpurapatē śabdō:’jani tvadbalāt || 5-7 ||

பூமந் மாநஸ புத்த்யஹங்க்ருதி மிலச்சித்தாக்க்ய வ்ருத்த்யந்விதம்
தச்சாந்த: கரணம் விபோ தவ பலாத் ஸத்வாம்ஸ ஏவாஸ்ருஜத்
ஜாதஸ்தைஜஸதோ தாஸேந்த்ரியகண: தத்தாமஸாம்ஸாத் புந:
தந்மாத்ரம் நபஸோ மருத்புரபதை ஸப்தோ ஜநி த்வத்பலாத். (7

என்னப்பா, வாதபுரீஸ்வரா, இன்னொன்று புரிகிறது. சாத்வீகம் சேர்ந்த அஹங்காரம் தான் அந்தகரண சித்தம் எனும் உள்ளுறுப்பை நிறுவுகிறது. ரஜோகுணம் மிகுந்த அஹங் காரம், ஐந்து கர்மேந்திரியங்களையும், ஐந்து ஞானேந்திரியங்களையும் கொண்ட குணக் கலவைகளை, தமோ குணம் கொண்ட அஹம்காரம் சப்தத்தையும் நிறுவியது. சப்தத்திலிருந்து ஆகாசம், ஸ்பர்சம், காற்று, தீ, ருசி, நீர், வாசனை, மண் எல்லாம் உருவானது. மூலகங்கள் தானாக எதையும் சிருஷ்டிக்க முடியாது. நீ தானே அப்பா, உயியர்களின் உயிராக உள்நின்று இயக்குபவன். நீயல்லவோ எல்லை கடந்த பிரம்மாண்டம். அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தவன்.

8. श्ब्दाद्व्योम तत: ससर्जिथ विभो स्पर्शं ततो मारुतं
तस्माद्रूपमतो महोऽथ च रसं तोयं च गन्धं महीम् ।
एवं माधव पूर्वपूर्वकलनादाद्याद्यधर्मान्वितं
भूतग्राममिमं त्वमेव भगवन् प्राकाशयस्तामसात् ॥८॥

śabdādvyōma tataḥ sasarjitha vibhō sparśaṁ tatō mārutaṁ
tasmādrūpamatō mahō:’tha ca rasaṁ tōyaṁ ca gandhaṁ mahīm |
ēvaṁ mādhava pūrvapūrvakalanādādyādyadharmānvitaṁ
bhūtagrāmamimaṁ tvamēva bhagavan prākāśayastāmasāt || 5-8 ||

ஸப்தாத் வ்யோம தத: ஸஸர்ஜித விபோ ஸ்பர்ஸம் ததோ மாருதம்
தஸ்மாத் ரூபமதோ மஹோ த ச ரஸம் தோயஞாச கந்தம் மஹீம்
ஏவம் மாதவ பூர்வபூர்வகலனாத் ஆத்யாத்ய தர்மாந்விதம்
பூதக்ராம மிமம் த்வமேவ பகவந் ப்ராஙாஸயஸ் தாமஸாத் (8)

ஹே குருவாயூரப்பா என்னவெல்லாம் நீ கற்றுத்தருகிறாய். சப்தங்களுக்கு காரணமான தன்மாத்திரைகள் மூலம் ஆகாசம் எனும் அகண்ட வெளி உருவாக்கினாய். ஸ்பரிசம் காற்றுடன் தொடர்பு கொண்டது. உருவங்கள் அக்னி மூலமாக, அதிலிருந்து ருசி போன்ற வை தோன்றின. ரஸம் எனப்படும் ருசி தன்மாத்திரை மூலம் நீர் அறியப்பட்டது. வாசனை தெரிய ஆரம்பித்தது. அதிலிருந்து மண் உருவானது. மாதவா எல்லாம் உன் சங்கல்பம் ஒன்றே. பஞ்ச பூதங்களை இப்படி நிறுவினாய் . உயிர் வாழ இதெல்லாம் இன்றியமையாததாகியது

9. एते भूतगणास्तथेन्द्रियगणा देवाश्च जाता: पृथङ्-
नो शेकुर्भुवनाण्डनिर्मितिविधौ देवैरमीभिस्तदा ।
त्वं नानाविधसूक्तिभिर्नुतगुणस्तत्त्वान्यमून्याविशं-
श्चेष्टाशक्तिमुदीर्य तानि घटयन् हैरण्यमण्डं व्यधा: ॥९॥

ētē bhūtagaṇāstathēndriyagaṇā dēvāśca jātā pr̥thaṅ-
nō śēkurbhuvanāṇḍanirmitividhau dēvairamībhistadā |
tvaṁ nānāvidhasūktibhirnutaguṇastattvānyamūnyāviśaṁ-
ścēṣṭāśaktimudīrya tāni ghaṭayan hairaṇyamaṇḍaṁ vyadhāḥ || 5-9 ||

ஏதே பூதகணாஸ்ததேந்த்ரியகணார தேவாஸ்ச ஜாதா: ப்ருதக்
நோ ஸேகுர்ப்புவநாண்ட நிர்மிதிவிதெள தேவைரமீபிஸ்ததா
த்வம் நாநாவித ஸூக்திபிர்நுத கணஸ்தத் வாந் யமூன் யாவிஸம்
ஸ்சேஷ்டா ஸக்திமுதீர்ய தாநி கடயந் ஹைரண்யமண்டம் வ்யதா:(9)

என்னப்பனே , குருவாயூர் குட்டா, என்ன ஆச்சர்யம். சிருஷ்டி ரகசியத்தை பார்க் கும்போது, இந்த பஞ்சபூதங்கள், புலனா லனுபவிக்கும் இந்திரியங்கள், அவற்றின் செயல்பாடுகள், அதற்கான அதிபதியான தேவதைகள், இதெல்லாம் உருவானாலும் அவை ப்ரம்மாண்டமாகுமா? அவை எல்லாம் ஒன்று கூடி உன்னை பிரார்த்தித்தன. அவைகள் தானே என்னென்னவோ ஸூக்தங்கள். அவற்றில் நீ உள்புகுந்தாய். செயல்படுத்தினாய், ஆட்டுவிப்பவன் அல்லவா நீ கிருஷ்ணா? எல்லாவற்றையும் ஒன்று கூட்டி சேர்த்து அல்லவோ இந்த பெரிய பிரபஞ்சம், ஹிரண்ய அண்டம் உருவாக்கினாய்.

अण्डं तत्खलु पूर्वसृष्टसलिलेऽतिष्ठत् सहस्रं समा:
निर्भिन्दन्नकृथाश्चतुर्दशजगद्रूपं विराडाह्वयम् ।
साहस्रै: करपादमूर्धनिवहैर्निश्शेषजीवात्मको
निर्भातोऽसि मरुत्पुराधिप स मां त्रायस्व सर्वामयात् ॥१०॥

aṇḍaṁ tatkhalu pūrvasr̥ṣṭasalilē:’tiṣṭhatsahasraṁ samāḥ
nirbhindannakr̥thāścaturdaśajagadrūpaṁ virāḍāhvayam |
sāhasraiḥ karapādamūrdhanivahairniśśēṣajīvātmakō
nirbhātō:’si marutpurādhipa sa māṁ trāyasva sarvāmayāt || 5-10 ||

அண்டம் தத்கலு பூர்வ ஸ்ருஷ்டஸலிலே திஷ்ட்டத் ஸஹஸ்ரம் ஸமா:
நிர்பிந்நக்ருதாஸ்சதுர்தஸ ஜகத்ரூபம் விராடாஹ்வயம்
ஸாஹஸ்ரை: கர பாத மூர்த்த நிவஹைர் நி: ஸேஷ ஜீவாத்மகோ
நிர்ப்பாதோ ஸி மருத்புராதிப ஸ மாம் த்ராயஸ்வ ஸர்வாமயாத். (10)

குருவாயூர் கிருஷ்ணா, இந்த பிரம்மாண்டம் இன்றா நேற்றா உருவானது? கணக்கற்ற ஆயிரம் ஆண்டுகள். மேலும் கீழுமாக ஈறேழு உலகங்கள் உணடாக்கினாய். விராட் புருஷன் எனப்படும் ஆயிரக்கணக்கான கரங்கள், கால்கள், தலைகள், எனும் அறியவொண்ணா உருவெடுத்தாய். நீ என் நோய் தீர்த்து என்னை காப்பாற்ற வேண்டும்.

Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 12

Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 12 12.   பூமியும்  பூவராஹனும் स्वायम्भुवो मनुरथो जनसर्गशीलो दृष्ट्वा महीमसमये सलिले निमग्ना...