Sunday, January 28, 2024

Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 8

 Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 8



 


 

 

 

 

8.  பத்மநாபா சரணம்.

एवं तावत् प्राकृतप्रक्षयान्ते
ब्राह्मे कल्पे ह्यादिमे लब्धजन्मा ।
ब्रह्मा भूयस्त्वत्त एवाप्य वेदान्
सृष्टिं चक्रे पूर्वकल्पोपमानाम् ॥१॥

ēvaṁ tāvatprākr̥taprakṣayāntē
brāhmē kalpē hyādimē labdhajanmā |
brahmā bhūyastvatta ēvāpya vēdān
sr̥ṣṭiṁ cakrē pūrvakalpōpamānām || 8-1 ||

ஏவம் தாவத்ப்ராக்ருதப்ரக்ஷயாந்தே
ப்³ராஹ்மே கல்பே ஹ்யாதி³மே லப்³த⁴ஜன்மா |
ப்³ரஹ்மா பூ⁴யஸ்த்வத்த ஏவாப்ய வேதா³ன்
ஸ்ருஷ்டிம் சக்ரே பூர்வகல்போபமானாம் || 8-1 ||

சென்ற  அத்தியாயத்தில்  ஸ்ரிஷ்டிகர்த்தா  பிரம்மன்  ஸ்ரீமன் நாராயணனிடம் முறையாக  சிருஷ்டி சங்கல்பம் பெற்று அவரது அருளாசி யோடு,   சிருஷ்டியைத்  தொடங்கியதை அறிந்தோம்.   சிருஷ்டி என்பது புதிதாக உயிர்கள் ஒரு யுகமுடிவிலும்  தோன்றுவது.  சிருஷ்டிக்கு முன்  பிரளயம் எனும்  பிரம்மாண்ட அழிவு,  நீரினால் எங்கும்  எல்லாவற்றையும் அழிக்கும்.  ப்ரம்மா மீண்டும் சிருஷ்டியை யுக ஆரம்பத்தில்  துவங்குவார். அப்படி முதலில் தோன்றிய பிரளயத்திற்கு, ப்ரக்ரித் பிரளயத்திற்கு  பின் தோன்றியது  ப்ரம்ம கல்பம் என்று பெயர்.   குருவாயூரப்பா, நாராயணா, உன்னிடம் தானே பிரம்மன்  சிருஷ்டி ரஹஸ்யம் கற்று உயிர்க ளைப்  படைத்தான்.  

 चतुर्युगसहस्रमितान्यहानि
तावन्मिताश्च रजनीर्बहुशो निनाय ।
निद्रात्यसौ त्वयि निलीय समं स्वसृष्टै-
र्नैमित्तिकप्रलयमाहुरतोऽस्य रात्रिम् ॥२॥

sō:’yaṁ caturyugasahasramitānyahāni
tāvanmitāśca rajanīrbahuśō nināya |
nidrātyasau tvayi nilīya samaṁ svasr̥ṣṭai-
rnaimittikapralayamāhuratō:’sya rātrim || 8-2 ||

ஸோ(அ)யம் சதுர்யுக³ஸஹஸ்ரமிதான்யஹானி
தாவன்மிதாஶ்ச ரஜனீர்ப³ஹுஶோ நினாய |
நித்³ராத்யஸௌ த்வயி நிலீய ஸமம் ஸ்வஸ்ருஷ்டை-
ர்னைமித்திகப்ரலயமாஹுரதோ(அ)ஸ்ய ராத்ரிம் || 8-2 ||

பிரளயம் முடிந்து  அடுத்த கல்பம் துவங்கு  முன் காலப்ரமாணம் அறியப்படவேண்டும்.  நம்முடைய கடிகாரம் காட்டும் நேரம்  சென்னையில் வேறு,  அமெரிக்கா ஜப்பானில் வேறு  என்று இப்போதே நமக்குத் தெரியும்  போது  எண்ணமுடியாத,  அளக்கமுடியாத தூரத்தில் உள்ள  ப்ரம்மலோகத்தில் ப்ரம்மாவின் கடிகாரம் வேறு அளவுகோல்.  நமது காலண்டர்  12 மாதங்கள் ஒரு வருஷம் என்று  யாரோ கற்பித் ததை நம்புகிறோம். பின்பற்றுகிறோம்.   ஆயிரம் சதுர்யுகம் கொண்டது பிரம்மாவிற்கு ஒரு பகல் நேரம்.  அதே அளவு  ஒரு இரவு.  பகலில் ஸ்ரிஷ்டிக்கிறான். இரவில் தூங்குகிறான்.  அவனது இரவுக்கு  என்ன பெயர் தெரியுமா  நைமித்திக பிரளயம்.  அப்போது  அவன்  எல்லா உயிர்களோடு  தானும் கிருஷ்ணா,   உன்னில் கலக்கிறான்.  இப்படி பல இரவுகள் பகல்கள் பிரம்மன் கழிக்கிறான்.  

अस्मादृशां पुनरहर्मुखकृत्यतुल्यां
सृष्टिं करोत्यनुदिनं स भवत्प्रसादात् ।
प्राग्ब्राह्मकल्पजनुषां च परायुषां तु
सुप्तप्रबोधनसमास्ति तदाऽपि सृष्टि: ॥३॥

asmādr̥śāṁ punaraharmukhakr̥tyatulyāṁ
sr̥ṣṭiṁ karōtyanudinaṁ sa bhavatprasādāt |
prāgbrahmakalpajanuṣāṁ ca parāyuṣāṁ tu
suptaprabōdhanasamā:’sti tadā:’pi sr̥ṣṭiḥ || 8-3 ||

அஸ்மாத்³ருஶாம் புனரஹர்முக²க்ருத்யதுல்யாம்
ஸ்ருஷ்டிம் கரோத்யனுதி³னம் ஸ ப⁴வத்ப்ரஸாதா³த் |
ப்ராக்³ப்³ரஹ்மகல்பஜனுஷாம் ச பராயுஷாம் து
ஸுப்தப்ரபோ³த⁴னஸமா(அ)ஸ்தி ததா³(அ)பி ஸ்ருஷ்டி꞉ || 8-3 ||

காலையில் நாம் எழுந்து பல் துலக்கி முகம் கழுவி காப்பி குடிப்பதை வழக்கமாக கொண்டவர்கள்.  பிரம்மாவுக்கும் அதே போல் விடிந்ததும்  சில வேலைகள் உண்டு.  சிருஷ்டி அப்படி ஒரு நித்ய அனுஷ்டானம். ப்ரம்ம கல்பத்துக்கு முன்னால்  பிறந்தவர்கள், மற்றும் நித்ய ஆத்மாக்கள், ஆகியோருக்கு புது கல்பத்தில் மீண்டும் பிறப்பது  தூங்கி எழுந்திருப்பது போல.  

पञ्चाशदब्दमधुना स्ववयोर्धरूप-
मेकं परार्धमतिवृत्य हि वर्ततेऽसौ ।
तत्रान्त्यरात्रिजनितान् कथयामि भूमन्
पश्चाद्दिनावतरणे च भवद्विलासान् ॥४॥

pañcāśadabdamadhunā svavayō:’rdharūpa-
mēkaṁ parārdhamativr̥tya hi vartatē:’sau |
tatrāntyarātrijanitānkathayāmi bhūman
paścāddināvataraṇē ca bhavadvilāsān || 8-4 ||

பஞ்சாஶத³ப்³த³மது⁴னா ஸ்வவயோ(அ)ர்த⁴ரூப-
மேகம் பரார்த⁴மதிவ்ருத்ய ஹி வர்ததே(அ)ஸௌ |
தத்ராந்த்யராத்ரிஜனிதான்கத²யாமி பூ⁴மன்
பஶ்சாத்³தி³னாவதரணே ச ப⁴வத்³விலாஸான் || 8-4 ||

ஹே, ஸாஸ்வதனே ,  இப்போது  நீ கொடுத்த  சிருஷ்டி வேலையில் பிரம்மன்  ஈடுபட்டிருப்பது கிட்டத்தட்ட  ஐம்பது வருஷங்களோ?  இது நாம்  போடும் வயசு கணக்கு இல்லை.  பல லக்ஷம் வருஷங்கள்.  இந்த ஐம்பது வருஷங்களை ஒரு  பரார்த்தம்  என்று சொல்வார்கள்.   ஒரு ராத்திரியில்,   அப்புறம் அடுத்த  காலைப் பொழுதில் நடப்பது பற்றி மட்டும் சொல்கிறேன்.  .

दिनावसानेऽथ सरोजयोनि:
सुषुप्तिकामस्त्वयि सन्निलिल्ये ।
जगन्ति च त्वज्जठरं समीयु-
स्तदेदमेकार्णवमास विश्वम् ॥५॥

dināvasānē:’tha sarōjayōniḥ
suṣuptikāmastvayi sannililyē |
jaganti ca tvajjaṭharaṁ samīyu-
stadēdamēkārṇavamāsa viśvam || 8-5 ||

தி³னாவஸானே(அ)த² ஸரோஜயோனி꞉
ஸுஷுப்திகாமஸ்த்வயி ஸன்னிலில்யே |
ஜக³ந்தி ச த்வஜ்ஜட²ரம் ஸமீயு-
ஸ்ததே³த³மேகார்ணவமாஸ விஶ்வம் || 8-5 ||

பகவானே,  எல்லாம்  நீ சொல்லி தான் சாஸ்திரங்கள், வேதங்களில் நான் தெரிந்து கொள்கிறேன்.  ஒரு  நாள் சிருஷ்டிக்கு பிறகு  அந்த  நாளின் முடிவில்  ப்ரம்மா  படுக்கைக்கு தூங்கச்  செல்கிறான்.  அவன் மட்டுமா?  இந்த பிரபஞ்சமே அவனுடன் சேர்ந்து உன் நாபிக்குள்  செல்கிறது.   அம்மா  வயிற்றுக்குள்  குழந்தை சுருண்டு படுக்குமே  அது போல.  சூக்ஷ்ம  உருவில்.  அப்போது  இந்த பிரபஞ்சம் ஒரு எல்லையில்லாத சமுத்ரமாகிறது.  பிரளயம்.

तवैव वेषे फणिराजि शेषे
जलैकशेषे भुवने स्म शेषे ।
आनन्दसान्द्रानुभवस्वरूप:
स्वयोगनिद्रापरिमुद्रितात्मा ॥६॥

tavaiva vēṣē phaṇirāji śēṣē
jalaikaśēṣē bhuvanē sma śēṣē |
ānandasāndrānubhavasvarūpaḥ
svayōganidrāparimudritātmā || 8-6 ||

தவைவ வேஷே ப²ணிராஜி ஶேஷே
ஜலைகஶேஷே பு⁴வனே ஸ்ம ஶேஷே |
ஆனந்த³ஸாந்த்³ரானுப⁴வஸ்வரூப꞉
ஸ்வயோக³னித்³ராபரிமுத்³ரிதாத்மா || 8-6 ||

எண்டே  குருவாயூரப்பா,  அப்போது  இந்த  முழு  பிரபஞ்சமும்  அகண்டாகார,  காரண  ஜலமயம்.  எங்கும்  இருள்.  அதில் காணப்படுவது நீ மட்டுமே.  ஜம்மென்று  ஆதிசேஷன் மேல்  மிதந்து கொண்டி ருப்பவன்.  ஆதிசேஷன் வேறு யாரோ அல்ல,  அதுவும்   நீயே தான்.  அது தான் உன் யோக நித்திரை.  அரைக்கண் விழித்த தூக்கம்.  ஆனந்தமய ஸ்திதி..

कालाख्यशक्तिं प्रलयावसाने
प्रबोधयेत्यादिशता किलादौ ।
त्वया प्रसुप्तं परिसुप्तशक्ति-
व्रजेन तत्राखिलजीवधाम्ना ॥७॥

kālākhyaśaktiṁ pralayāvasānē
prabōdhayētyādiśatā kilādau |
tvayā prasuptaṁ parisuptaśakti-
vrajēna tatrākhilajīvadhāmnā || 8-7 ||

காலாக்²யஶக்திம் ப்ரலயாவஸானே
ப்ரபோ³த⁴யேத்யாதி³ஶதா கிலாதௌ³ |
த்வயா ப்ரஸுப்தம் பரிஸுப்தஶக்தி-
வ்ரஜேன தத்ராகி²லஜீவதா⁴ம்னா || 8-7 ||

நாராயணா,  உன் உத்தரவின் படி,  உன் சங்கல்பத்தின் படி,  பிரளயம்  மறைகிறது.  காலம்  உன் மூலம்  விழித்துக் கொண்டு தோன்றுகிறது. பிரளயத்தின்  ஆரம்பத்தில் நீ  சகல சக்திகளும் ஜீவன்களும் உன்னில் அடக்கமாக நீ  உறங்கப்போனவன் அல்லவா ?

चतुर्युगाणां च सहस्रमेवं
त्वयि प्रसुप्ते पुनरद्वितीये ।
कालाख्यशक्ति: प्रथमप्रबुद्धा
प्राबोधयत्त्वां किल विश्वनाथ ॥८॥

caturyugāṇāṁ ca sahasramēvaṁ
tvayi prasuptē punaradvitīyē |
kālākhyaśaktiḥ prathamaprabuddhā
prābōdhayattvāṁ kila viśvanātha || 8-8 ||

சதுர்யுகா³ணாம் ச ஸஹஸ்ரமேவம்
த்வயி ப்ரஸுப்தே புனரத்³விதீயே |
காலாக்²யஶக்தி꞉ ப்ரத²மப்ரபு³த்³தா⁴
ப்ராபோ³த⁴யத்த்வாம் கில விஶ்வனாத² || 8-8 ||

ஈடு இணையற்ற  பரமாத்மா,  லோகேஸ்வரா,  இவ்வாறு    ஆயிரம்  சதுர் யுகங்கள் கொண்ட ஒரு  நைமித்திக  பிரளயத்தின் போது   கண்ணா, நீ கண்ணுறங்குகிறாய்.   உனது  கால சக்தியே  உன்னை எழுப்புகிறது. சுப்ரபாதம்.

विबुध्य च त्वं जलगर्भशायिन्
विलोक्य लोकानखिलान् प्रलीनान् ।
तेष्वेव सूक्ष्मात्मतया निजान्त: -
स्थितेषु विश्वेषु ददाथ दृष्टिम् ॥९॥

vibudhya ca tvaṁ jalagarbhaśāyin
vilōkya lōkānakhilānpralīnān |
tēṣvēva sūkṣmātmatayā nijāntaḥ-
sthitēṣu viśvēṣu dadātha dr̥ṣṭim || 8-9 ||

விபு³த்⁴ய ச த்வம் ஜலக³ர்ப⁴ஶாயின்
விலோக்ய லோகானகி²லான்ப்ரலீனான் |
தேஷ்வேவ ஸூக்ஷ்மாத்மதயா நிஜாந்த꞉-
ஸ்தி²தேஷு விஶ்வேஷு த³தா³த² த்³ருஷ்டிம் || 8-9 ||

சகல ஜீவ ஆதார  காரண  ஜலத்தில்  நீ  பாம்பணை மேல் பள்ளி கொண்ட பரமானந்த ஸ்வரூபன்.  விழித்தபோது உன்னுள் சர்வ லோகமும்  அடங்கியிருப்பதை உணர்பவன்.  அவற்றை நோக்குகிறாய்.

ततस्त्वदीयादयि नाभिरन्ध्रा-
दुदञ्चितं किंचन दिव्यपद्मम् ।
निलीननिश्शेषपदार्थमाला-
संक्षेपरूपं मुकुलायमानम् ॥१०॥

tatastvadīyādayi nābhirandhrā-
dudañcitaṁ kiñcana divyapadmam |
nilīnaniśśēṣapadārthamālā-
saṅkṣēparūpaṁ mukulāyamānam || 8-10 ||

ததஸ்த்வதீ³யாத³யி நாபி⁴ரந்த்⁴ரா-
து³த³ஞ்சிதம் கிஞ்சன தி³வ்யபத்³மம் |
நிலீனநிஶ்ஶேஷபதா³ர்த²மாலா-
ஸங்க்ஷேபரூபம் முகுலாயமானம் || 8-10 ||

பரந்தாமா,  நாராயணா,  உன் நாபியிலிருந்து  ஒரு தெய்வீக தாமரைக் கொடி  எழும்புகிறது. மொட்டு விடுகிறது, அவிழ்கிறது. அதனால் தானே உனக்கு  பத்ம நாபன் என்றே பெயர்.   சகல ஜீவன்களும்  சூக்ஷ்ம ரூபத்தில் அதில் அடக்கம்.  

तदेतदंभोरुहकुड्मलं ते
कलेवरात् तोयपथे प्ररूढम् ।
बहिर्निरीतं परित: स्फुरद्भि:
स्वधामभिर्ध्वान्तमलं न्यकृन्तत् ॥११॥

Tadētadaṁbhōruhakuḍmalaṁ tē
kalēbarāttōyapathē prarūḍham |
bahirnirītaṁ paritaḥ sphuradbhiḥ
svadhāmabhirdhvāntamalaṁ nyakr̥ntat || 8-11 ||

ததே³தத³ம்போ⁴ருஹகுட்³மலம் தே
கலேப³ராத்தோயபதே² ப்ரரூட⁴ம் |
ப³ஹிர்னிரீதம் பரித꞉ ஸ்பு²ரத்³பி⁴꞉
ஸ்வதா⁴மபி⁴ர்த்⁴வாந்தமலம் ந்யக்ருந்தத் || 8-11 ||

பகவானே,  அந்த தாமரை மொட்டு உன் நாபியிலிருந்து எழும்பி,  ஜலத்திற்கு மேலே  எங்கும் சூழ்ந்திருந்த இருளை  விலக்கி ஒளிமய மாக்குகிறது.

संफुल्लपत्रे नितरां विचित्रे
तस्मिन् भवद्वीर्यधृते सरोजे ।
स पद्मजन्मा विधिराविरासीत्
स्वयंप्रबुद्धाखिलवेदराशि: ॥१२॥

samphullapatrē nitarāṁ vicitrē
tasminbhavadvīryadhr̥tē sarōjē |
sa padmajanmā vidhirāvirāsīt
svayamprabuddhākhilavēdarāśiḥ || 8-12 ||

ஸம்பு²ல்லபத்ரே நிதராம் விசித்ரே
தஸ்மின்ப⁴வத்³வீர்யத்⁴ருதே ஸரோஜே |
ஸ பத்³மஜன்மா விதி⁴ராவிராஸீத்
ஸ்வயம்ப்ரபு³த்³தா⁴கி²லவேத³ராஶி꞉ || 8-12 ||

என் ப்ரபோ,  இவ்வாறு  உன்  எல்லையற்ற சக்தியால், உன்  நாபிக்கமலத்திலிருந்து உதித்த  தாமரை இதழ்கள் மேல் ப்ரம்மா தோன்றுகிறான்.  அவன் வேதமயம்.  சர்வ சாஸ்த்ர  வேத ஸ்வரூபன்.

अस्मिन् परात्मन् ननु पाद्मकल्पे
त्वमित्थमुत्थापितपद्मयोनि: ।
अनन्तभूमा मम रोगराशिं
निरुन्धि वातालयवास विष्णो ॥१३॥

asminparātman nanu pādmakalpē
tvamitthamutthāpitapadmayōniḥ |
anantabhūmā mama rōgarāśiṁ
nirundhi vātālayavāsa viṣṇō || 8-13 |  

அஸ்மின்பராத்மன் நனு பாத்³மகல்பே
த்வமித்த²முத்தா²பிதபத்³மயோனி꞉ |
அனந்தபூ⁴மா மம ரோக³ராஶிம்
நிருந்தி⁴ வாதாலயவாஸ விஷ்ணோ || 8-13 |  

பரம தயாநிதி, பத்மநாபா,  விவரிக்கமுடியாத சக்தி கொண்ட  வேதநாயகா,  அப்போது தோன்றிய கல்பத்தின் பெயர் தான் பாத்மகல்பம்.  பிரம்மனை உருவாக்கி விட்டாய்.  ஹே  மஹா விஷ்ணு,  குருவாயூரப்பா, குட்டி நாராயணா, என்  வாதனைகளை, நோயை  அகற்றுவாயாக''

Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 4

 Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 4

 
 
 


4 அஷ்டாங்க யோகமும் பலனும்

இந்த தசகம் நாராயணீயத்திலேயே பெரிய தசகம். 15 ஸ்லோகங்கள் இருக்கிறது

कल्यतां मम कुरुष्व तावतीं कल्यते भवदुपासनं यया ।
स्पष्टमष्टविधयोगचर्यया पुष्टयाशु तव तुष्टिमाप्नुयाम् ॥१॥

kalyatāṁ mama kuruṣva tāvatīṁ kalyatē bhavadupāsanaṁ yayā |
spaṣṭamaṣṭavidhayōgacaryayā puṣṭayā:’:’śu tava tuṣṭimāpnuyām || 4-1 ||      
                                                                                                                                                            
கல்யதாம் மம குருஷ்வ தாவதிம் கல்யதே பவதுபாசனாம்                                                                                                                    ஸ்பஷ்டமஷ் தவிதயோகாச்சார்யாயா புஷ்டயாஷு தவதுஷ்டிமாப் நுயாம்        
                                                 
குருவாயூரப்பா, கண்கண்ட தெய்வமே, கருணாசாகரா, நீ எனக்கு செய்ய வேண்டியதெல்லாம் என் தேக உபாதையை நீக்கி ஆரோக்கியத்தை அளிப்பது ஒன்று தான். எதற்கு கேட்கிறேன் என்று உனக்கே தெரியும். சுவர் இருந்தால் தானே சித்திரம் எழுதமுடியும். என் உடல் ஆரோக்கியமாக இருந்தால் அதைப்பற்றிய நினைப்பே இல்லாமல் என் மனம் உன் மேல் முழுதும் ஈடுபடும். உனைப் போற்றி, பாடி, வணங்கிக்கொண்டே இருப்பேன்.உன் கருணை மழையில் நனைவேன். அஷ்டாங்கயோகத்தில் சிறப்பாக செயல்படுவேன். என் உண்மையான முயற்சி அறிந்து நீயும் மகிழ்வாய். யம , நியம, ஆசன, பிராணாயாம, ப்ரத்யாஹார, தாரணா, தியான, சமாதி நிலைகள் தான் அஷ்டாங்கம் எனப்படும் எட்டு வகை யோக மார்க்கம். நாராயண பட்டத்ரி உடல் நலம் சரியானால் ஆனந்தமாக அஷ்டாங்க யோகத்தில் ஈடுபடுவேனே என்று ஏங்குகிறார்.

ब्रह्मचर्यदृढतादिभिर्यमैराप्लवादिनियमैश्च पाविता: ।
कुर्महे दृढममी सुखासनं पङ्कजाद्यमपि वा भवत्परा: ॥२॥

brahmacaryadruḍhatādibhiryamairāplavādiniyamaiśca pāvitāḥ |
kurmahē druḍhamamī sukhāsanaṁ paṅkajādyamapi vā bhavatparāḥ || 4-2 ||]

ப்ரஹ்மசர்யத் ருட தாதி, பிர்யமைராப்லவாதி, நியமைச்ச பாவிதா:
குர்மஹே த்ருட மமீ ஸுகாஸநம் பங்கஜாத் யமபி வா பவத்பரா: || 2 ||

பகவானே, ஸ்ரீ கிருஷ்ணா, உன் மேல் கொண்ட பக்தி அன்றி வேறே எதையும் நான் நம்பவில்லையே. என் உடம்பு உன்னால் குணமாகி, நான் முதலில் என்ன செய்வேன் தெரியுமா? முதலில் சுய அடக்கம், பிரம்மச்சர்யம், அஹிம்சை, சத்யம், சாஸ்த்ராசார சம்பிரதாயங்கள், நியம, அனுஷ்டானம், உள்ளும் புறமும் பரிசுத்தமாக அல்லவோ உன்னை தியானம் பண்ணு வேன். சுகாசன, பத்மாசனங்களில் சௌகர்ய மாக அமர்ந்து உன்னை என் மனது, ஹ்ருதயம் பூரா நிரப்பிக் கொள்வேன்.   பட்டத்ரி தான் யமம், நியமம், ஆசனம் தாரணம், சமாதி நிலை, இத்யாதிகளில் எப்படி க்ரிஷ்ண த்யானத்தில் ஈடுபடுவேன் என்று எடுத்துரைக்கிறார் பார்த்தீர்களா?

तारमन्तरनुचिन्त्य सन्ततं प्राणवायुमभियम्य निर्मला: ।
इन्द्रियाणि विषयादथापहृत्यास्महे भवदुपासनोन्मुखा: ॥३॥

tāramantaranucintya santataṁ prāṇavāyumabhiyamya nirmalāḥ |                                                                                                                                            indriyāṇi viṣayādathāpahr̥tyāsmahē bhavadupāsanōnmukhāḥ || 4-3 ||

தாரமந்த - ரநுசிந்த்ய ஸந்ததம் ப்ராணவாயுமபி யம்ய நிர்மலா: ! இந்த்ரியாணி விஷயாததாபஹ்ருத் யாஸ்மஹே பவது பாஸ்நோந்முகரா: | 3 ||

பிரணவ மந்த்ரமாகிய ஓம் எனும் உன்னத மந்த்ரத்தை இடைவிடாமல், மூச்சு விடாமல், என் மனம் தியானம் செய்யும். அதனால் எனக்கு தான் லாபம். பரிசுத்தமாக இப்படி பிராணாயாமம் பண்ணுவதால் புலன்கள் வாலாட்டாது. அதனால் விளையும், காம க்ரோத லோப மோஹ சமாச்சாரங்கள் இருக்கும் இடம். தெரியாது. மனம் உன்னிலேயே ஆணி அடித்ததுபோல் நிலையாக நிற்கும். இந்த ஆனந்தத்தை விட பேரானந்தம் வேறு உண்டா சொல் கிருஷ்ணா?

अस्फुटे वपुषि ते प्रयत्नतो धारयेम धिषणां मुहुर्मुहु: ।
तेन भक्तिरसमन्तरार्द्रतामुद्वहेम भवदङ्घ्रिचिन्तका ॥४॥

asphuṭē vapuṣi tē prayatnatō dhārayēma dhiṣaṇāṁ muhurmuhuḥ |
tēna bhaktirasamantarārdratāmudvahēma bhavadaṅghricintakāḥ || 4-4 ||

அஸ்புடே வபுஷி தே ப்ரயத்நதோ தாரயேம திஷணாம் முஹுர்முஹு தேந பத்திரஸ்-மந்தரார்த் ரதா-முத் வஹேம ப வதங்க ரிசிந்தகா: | 4 1

யாருக்கு தான் தெரியாது கிருஷ்ணா? எந்த வேதத்தாலும் உன் திவ்ய சௌந்தர்ய ரூபத்தை விளக்க முடியாது. என் மனதை முழுதும் உன் திருமேனியில் செலுத்தி முயற்சி செய்து உன் தாமரைத் திருப்பதங்களில் மனது லயிக்கும் போது கிடைக்கும் பக்திரசத்திற்கு ஈடு இணையேது? எவ்வளவு ருசி அனுபவிக்க முடியும். இதைவிட வேறு பாக்யம் உண்டா?

विस्फुटावयवभेदसुन्दरं त्वद्वपु: सुचिरशीलनावशात् ।
अश्रमं मनसि चिन्तयामहे ध्यानयोगनिरतास्त्वदाश्रयाः ॥५॥

visphuṭāvayavabhēdasundaraṁ tvadvapuḥ suciraśīlanāvaśāt |
aśramaṁ manasi cintayāmahē dhyānayōganiratāstvadāśrayāḥ || 4-5 ||

விஸ்புடாவயவ-பேத ஸுந்தரம் தவத் வபுஸ்-ஸுசிரபலேநாவலாத் | அப்பரமம் மநஸி சிந்தயாமஹே த்யாநயோக நிரதாஸ் த்வதாஷ்ரயா: || 5|

கிருஷ்ணா, குருவாயூரப்பா, உன்னை இப்படி சிரத்தை யாக தியானிப்பதன் மூலம் மனது பயிற்சி பெற்றுவிடும். உன் திவ்ய ஸ்வரூபம், தெளிவாக என் முன் தியானம் செய்ய தர்சனம் தரும். உன்னை பூரணமாக சரண்அடைவோர்க்கு மட்டுமே இது சாத்தியம் என்றும் அறிவேன். என் ஏகாக்ர சித்த த்யானம் உன் தரிசனம் பெற்று தரும்.

ध्यायतां सकलमूर्तिमीदृशीमुन्मिषन्मधुरताहृतात्मनाम् ।
सान्द्रमोदरसरूपमान्तरं ब्रह्म रूपमयि तेऽवभासते ॥6

dhyāyatāṁ sakalamūrtimīdr̥śīmunmiṣanmadhuratāhr̥tātmanām |
sāndramōdarasarūpamāntaraṁ brahmarūpamayi tē:’vabhāsatē || 4-6 ||

த்யாயதாம் ஸகலமூர்திமீத் ருமீ முந்மிஷந்மது ரதா-ஹ்ருதாத்மநாம் | ஸாந்த்ரமோத --ரஸரூபமாந்தரம் ப்ரஹ்மரூபமயி தேவபாஸதே 161

குருவாயூரப்பா,  நான் என்ன செய்யப்போகிறேன் என்று விளக்கமாக சொல்லட்டுமா? எனது இடைவிடா தியானத்தின் மூலம் எனக்கு உன் திவ்ய சௌந்தர்ய அங்க தர்சனம் கிடைக்கும். நீ சகுண பிரம்மமாக எனக்கு காட்சி தருவாய். ஆஹா அந்த ஆனந்தத்தில் எங்கும் எதிலும் அரூபமாக நிறைந்திருக்கும் நிர்குண ப்ரம்ம ஸ்வரூபத்தையும் என்னால் உணர முடியும். இதற்கு மேல் எனக்கு சுகானந்தம் தரும் விஷயம் வேறு இருக்க முடியுமா?

तत्समास्वदनरूपिणीं स्थितिं त्वत्समाधिमयि विश्वनायक ।
आश्रिता: पुनरत: परिच्युतावारभेमहि च धारणादिकम् ॥७॥

tatsamāsvadanarūpiṇīṁ sthitiṁ tvatsamādhimayi viśvanāyaka |
āśritāḥ punarataḥ paricyutāvārabhēmahi ca dhāraṇādhikam || 4-7 ||

தத்ஸமாஸ்வத நரூபிணீம் ஸ்திதிம் த்வத்ஸமாதி மயி விப்பவநாயக ஆம்ரிதா: புநரத: பரிச்யுதா-வாரபே மஹி ச தாரணாதிகம் || 7 ||

ஹே குருவாயூரப்பா, உண்ணி கிருஷ்ணா, அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகா, அஷ்டாங்க யோக உபாசனையில் சமாதி நிலையில் எல்லாம் மறந்து நீ ஒன்றே என ப்ரம்மஸ்வரூபமான உன்னுடன் இரண்டறக்கலந்து நான் அனுபவிக்கும் அந்த ஆனந்தம் நிலத்து நிற்காமல் சற்றேனும் நழுவி விட்டால் என்ன பண்ணுவேன் தெரியுமா. மறுபடியும் என் மனத்தைக் குவித்து உன்னை சிக்கெனைப் பிடித்து மனதில் நிலை நிறுத்தி தாரணை என்னும் தியான அஷ்டாங்க யோக ம் மூலம் மீண்டும் நிர்விகல்ப சமாதியில் உன்னை அடைவேன்.

 ராமகிருஷ்ணர் விவேகானந்தர், ரமணர், சேஷாத்திரி ஸ்வாமிகள், பரமாச்சாரியார், ராகவேந்திரர் போன்றோர் எளிதில் இதை அடைந் தவர்கள்.

इत्थमभ्यसननिर्भरोल्लसत्त्वत्परात्मसुखकल्पितोत्सवा: ।
मुक्तभक्तकुलमौलितां गता: सञ्चरेम शुकनारदादिवत् ॥८॥

itthamabhyasananirbharōllasattvatparātmasukhakalpitōtsavāḥ |
muktabhaktakulamaulitāṁ gatāḥ sañcarēma śukanāradādivat || 4-8 ||

இதமப் யஸந நிர்ப ரோல்லஸத்-த்வத்பராத்ம ஸுக, கல்பிதோத்ஸவா: / முக்த பக்தகுலமௌலிதாம் கதா: ஸஞ்சரேம கநாரதாதி,வத் | 8 ||

உன்னை விட்டால் வேறு யாரிடம் இப்படி மனம் விட்டு பேசுவேன். என் மனோரதங்களை தெரிவிப்பேன். ஸ்ரீ கிருஷ்ணா, குருவாயூர் குட்டா, இதைக் கேள். இப்படி நான் தாரணை மூலம், அஷ்டாங்க யோக சித்தி பெற்று உன்னை சமாதிநிலையில் நேரே தரிசித்து ஆனந்தமாக இருக்கும் நிலையில் நான் வேறு யாரையெல்லாம் இப்படி உன்னை தரிசிக்கிறார்க்ளோ அவர்களோடு உலவுவேன். யாரென சில பெயர்கள் சொல்லட்டுமா? ஜீவன் முக்தர்களான நாரத ப்ரம்ம ரிஷி, சுகப்பிரம்ம ரிஷி பிரஹலாதன் போன்றோருடன். போதுமா? ஆனந்தமாக அவர்களோடு நானும் உன்னைப் போற்றி பாடுவேனே ...

9. त्वत्समाधिविजये तु य: पुनर्मङ्क्षु मोक्षरसिक: क्रमेण वा ।
योगवश्यमनिलं षडाश्रयैरुन्नयत्यज सुषुम्नया शनै: ॥९॥

tvatsamaadhivijaye tu yaH punarma~Nkshu mOksharasikaH krameNa vaa |
yOgavashyamanilaM ShaDaashrayairunnayatyaja suShumnayaa shanaiH || 9

த்வத்ஸமாதி விஜயே து ய: புநர்மங்க்ஷ மோக்ஷரஸிக : க்ரமேண வாயோக வம்யமநிலம் ஷடாய்ரயை - ருந்நயத்யஜ ஸுஷும்நயா ஷனை :|| 9 ||

ஹே குருவாயூரப்பா, உனக்கு பிறப்பே இல்லை. எங்களுக்கு? உன் திருப்பாதத்தில் மனம் திளைத்து சமாதியடைந்த யோகி ரெண்டு விதத்தில் மோக்ஷம் அடைகிறான். இந்த இப்பிறவியிலேயே இப்பொழுதே உடனே முக்தி (சத்யமுக்தி) அடைபவரும் உண்டு. பூவுலகம் தாண்டி மேலே தேவலோகங்கள் சென்று, தெய்வீகமான பல பிறவிகள் பெற்று பிறகு முக்தியடைவது.(க்ரம முக்தி)

ஹே குருவாயூரப்பா சமாதி நிலையடைந்த உன் பக்தன் என்ன செய்வான்? . உன்னை அடைய வேண்டும் அல்லவா? அது தானே முக்தி நிலை? பிராணாயாமம் செய்து, பிராணனை தன் வயப்படுத்தி - முதுகெலும்பினுள் நடுவில் தாமரைக் கொடி, நூல் போல் மெல்லியதாக இருக்கும் ஸுஷும்னா நாடியின் அடியிலிருந்து

தேகத்தில் உள்ள ஆறு ஆதாரங்கள் வழியாக - மூலாதாரம், ஸ்வாதிஷ்டானம், மணிபூரகம், அநாஹதம், விசுக்தி, ஆக்ஞை சக்கரங்கள்--வரிசையாக மேலே கிளம்பி-மெதுவாக மேலெழச் செய்து சஹஸ்ராரம் அடைவது தான் க்ரம முக்தி .

10. लिङ्गदेहमपि सन्त्यजन्नथो लीयते त्वयि परे निराग्रह: ।
ऊर्ध्वलोककुतुकी तु मूर्धत: सार्धमेव करणैर्निरीयते ॥१०॥

lingadehamapi santyajannathO liiyate tvayi pare niraagrahaH |
uurdhvalOkakutukii tu muurdhataH saardhameva karaNairniriiyate || 10

லிங்க தே ஹமபி ஸந்த்ய ஜந்ந்தோ லீயதே த்வயி பரே நிராக் ரஹ: |
ஊர்த்வலோக்குது கீ து மூர்த தஸ் ஸார்த மேவ கரணைர்நிரீயதே | 10 ||

என்னப்பா உண்ணி கிருஷ்ணா ப்ரம்மலோகம் முதலான மற்ற தேவலோகங்களை அடையும் இச்சை இல்லாத உன் பக்தன் உன்னை அடைய என்ன செயகிறான் சொல்லட்டுமா ? பிராணனைப் புருவ மத்தியில் கொண்டு நிறுத்திய பிறகு சத்யமுக்தி அடையும் யோகி தனது ஸ்தூல சரீரத்தையம் சூக்ஷ்ம சரீரத்தை யும் ஆஞ்ஞா சக்ரத்தின் மூலமாக கை விட்டு உன்னோடு கலந்து விடுகிறான். இதர காமங்களை விட்டு ஆறு ஆதாரங்களைக் கடந்தபின் லிங்க சரீரத்தையும் விட்டு பரமாத்மாவான தங்களிடம் லயித்துவிடுகிறான் (ஸாயுஜ்ய முக்தியை அடைகிறான்).

க்ரமமுக்தி விரும்பும் யோகி பிரம்மலோகம் முதலிய தேவலோகங்களில் சிறிது காலம் அனுபவிக்க விருப்பம் கொண்டவன் (அதாவது கிரம முக்தியை அடைய விரும்புபவன்) ஐந்து பிராணன்கள், மனது, புத்தி, பத்து இந்திரியங்கள், சித்தம், அஹங்காரம் என்ற இத்தத்துவங்கள் அடங்கிய லிங்க சரீரத்துடனேயே கபால மோக்ஷம் அடைகிறான்,  ஸஹஸ்ராரம்  வழியாக (பிரம்மரந்திரத்தின் வழியாக) வெளிக் கிளம்புகிறான்.

11. अग्निवासरवलर्क्षपक्षगैरुत्तरायणजुषा च दैवतै: ।
प्रापितो रविपदं भवत्परो मोदवान् ध्रुवपदान्तमीयते ॥११॥

agnivaasaravalarkshapakshagair uttaraayaNajuShaa cha daivataiH |
praapitO ravipadaM bhavatparO mOdavaan dhruvapadaantamiiyate || 11

அக் நிவாஸர வளர்க்ஷபக்ஷகை - ருத்தராயணஜுஷா ச தைவதை : 1 ப்ராபிதோ ரவிபதம் பவத்பரோ மோத வாந் த்ருவபதாந்தமீயதே | 11 ||

ஹே , பிரபஞ்ச நாயகா, குருவாயூரப்பா, க்ரமமுக்தி தேடும் உன் பக்தனான யோகி, தனது விருப்பத்திற்கேற்ப, சுக்லபக்ஷத்தில், பகலில், உத்தராயண புண்ய காலத்தில் தேகத்தை விட்டுவிட்டு சூர்ய கிரணங்கள் மூலம் ஜீவனை வெளியேற்றுகிறான். அக்னி பகல் இவற்றை நிர்ணயிக்கும் தேவதைகள் துணையோடு உத்தராயணத்தில், சூரிய மண்டலம் சென்று துருவன் இருக்கும் லோகத்தை அடைகிறான்.மீண்டும் இந்த பூமியில் பிறப்ப தில்லை. பீஷ்மர் அப்படித்தானே உத்தராயண காலம் வரை காத்திருந்து ஜீவனை வெளியேற்றினார்.

மேலே சொன்ன பிரயாண வழி : க்ரமமாக   முக்தி அடையும் யோகியின் ஜீவனை அக்னி தேவதை தன் லோகத்தின் வழியே அழைத்துச் சென்று பகலுக்கு அபிமானியான தேவதையிடம் ஒப்படைத்து அந்த தேவதை சுக்லபக்ஷ அபிமான தேவதை, உத்தராயண அபிமானி தேவதை மற்றும் ஸம்வத்ஸராபிமானி தேவதைகளின் உதவியுடன் தேவலோக மார்க்கமாக சென்று வாயு தேவனை அடைகிறது. பிறகு வாயு லோக மார்க்கமாக சூர்ய, சந்திர தேவதைகள் லோகம் வழியாக வித்யுல் லோகத்தையும் அடைந்து அப்பறம் யோகியின் ஜீவன் துருவலோகம் அடைகிறது. இது தான் பாதை .

12 आस्थितोऽथ महरालये यदा शेषवक्त्रदहनोष्मणार्द्यते ।
ईयते भवदुपाश्रयस्तदा वेधस: पदमत: पुरैव वा ॥१२॥

aasthitO(a)tha maharaalaye yadaa sheShavaktradahanOShmaNaardyate |
iiyate bhavadupaashrayastadaa vedasaH padamataH puraiva vaa || 12

ஆஸ்தி, தோத, மஹராலயே யதா பேஷவக்த்ர த ஹநோஷ்மணார்த்யதே ஈயதே பவது, பாபரயஸ் ததா வேதஸ: பத மத : புரைவ வா ! 12 )

துருவலோகத்தையடைந்த பிறகு அங்கிருந்து மஹர்லோகத்தை அடைந்த தங்கள் பக்தன் ஆதிசேஷனின் முகங்களிலிருந்து வெளிவரும் விஷாக்னியின் வெம்மையினால் வருந்தும் பொழுதோ, அதற்கு முன்போ பிரம்மலோகத்தை அதாவது சத்தியலோகத்தை அடைகிறான்.

13, तत्र वा तव पदेऽथवा वसन् प्राकृतप्रलय एति मुक्तताम् ।
स्वेच्छया खलु पुरा विमुच्यते संविभिद्य जगदण्डमोजसा ॥१३॥

tatra vaa tava pade(a)thavaa vasan praakR^itapralaya eti muktataam svechChayaa khalu puraa vimuchyate sanvibhidya jagadaNDamOjasaa || 13

தத்ர வா தவ பதே தவா வஸந் ப்ராக்ருதப்ரளய ஏதி முக்ததாம் | ஸ்வேச்சயா கலு புராவி முச்யதே ஸம்விபித்ய ஜகதண்ட மோஜஸா || 13 ||

ஹே குருவாயூரப்பா! நான் புரிந்துகொண்டதை உன்னிடம் ஒருமுறை சொல்லிப்பார்க்கிறேன் என்கிறார் நாராயண பட்டத்ரி.

மேலே சொன்னபடி துருவபதத்தை , மஹர்லோகத்தை அடைந்த உன் பக்தன் க்ரமமுக்தி யோகி அப்புறம் பிரம்மலோகத் திலாவது அல்லது தங்களுடைய விஷ்ணு லோகத்திலாவது (வைகுண்டத்தில்) வெகுகாலம் வாழ்கிறான். மஹாப்பிரளயத்தின் போது ஆதிசேஷனின் தஹிக்கும் அக்னி மூச்சுக்கு காற்றில் இருந்து விலக உன்னை சரண் அடைகிறான். பிரம்மலோகம் செல்கி றான். அல்லது, தன் விருப்பப்படி பிரளயத்திற்கு முன்பே. ஆதி சேஷனின் அக்னி உஷ்ண காற்றை தவிர்த்து, தனது யோகபலத்தால் பிரம்மாண் டத்தைப் பிளந்து கொண்டு பிரம்மலோகம் செல்கிறான்.

(மஹாப்பிரளயம் என்பது பிரக்ருதி காரியங்களான மஹத், அஹங்காரம், ஐந்து தன்மாத்திரைகள் - இவைகள் அதனதன் காரணங்களில் ஒன்றுபடுவதேயாகும்).

14. तस्य च क्षितिपयोमहोऽनिलद्योमहत्प्रकृतिसप्तकावृती: ।
तत्तदात्मकतया विशन् सुखी याति ते पदमनावृतं विभो ॥१४॥

thasya cha kshithipayo mahodhanilth yo mahath prakruthi saptha kavaruthi
tattadaatmakatayaa vishan sukhii yaati te padamanaavR^itaM vibhO ||14

தஸ்ய ச க்ஷிதிபயோ-மஹோதநிலத் யோமஹத்ப்ரக்ருதி-ஸப்தகாவருதீ: |தத் ததாத்மகதயா வியந் ஸு, யாதி தே பத மநாவ்ருதம் விபோ | 14 ||

ஹே, நாராயணா , குருவாயூர் குட்டா, உன்னருளால் எனக்கு புரிகிறது. உன் பக்தன் பிரம்மாண்டத்தின் ஏழு திரைகளை (மண், நீர், தீ, காற்று, ஆகாசம், புத்தி, பரம்) ஒவ்வொன்றாக கிழித்து நுழைகிறான். அவனது ஸூக்ஷம உருவில் உன் விஸ்வரூப லீலைகளை உணர்கிறான். மகிழ்கிறான். உன்திருவடிகளை சேரவேண்டிய இடமாக முயன்று அடைந்து முக்தி பெறுகிறான்.

15 अर्चिरादिगतिमीदृशीं व्रजन् विच्युतिं न भजते जगत्पते ।
सच्चिदात्मक भवत् गुणोदयानुच्चरन्तमनिलेश पाहि माम् ॥१५॥

archiraadigatimiidR^ishiiM vrajan vichyutiM na bhajate jagatpate
sachchidaatmaka bhavadguNOdayaanuchcharantamanilesha paahi maam ||15

அர்ச்சிராதி கதிமி த்ரிஷிம் வ்ரஜன் விச்யு திம் ன பஜதே ஜகத்பதே சச்சிதாத்மக பவத் குணோதயா னுச்சரந்த மநிலேஷ பாஹிமாம் என்னப்பா, வாதபுரீசா, அப்புறம் சொல்றேன் கேள். உன் பக்தன் யோகி என்ன பண்ணுகிறான் தெரியுமா? உன்னை அடையும் வழியில் பல வித லோகங் களை கண்டு மகிழ்ந்து,உன் திருவடி சேர்ந்தபின் அவனுக்கு வேறு பிறப்பே கிடையாது. நானும் அப்படி அடைய தான் உன்னை இடைவிடாமல் பாடிக்கொண்டே இருக்கிறேன். என்னைக் காப்பாற்றுவது உன்னால் தானே முடியும்? 

Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 1

 

 


 

 

 ஸ்ரீ நாராயணீயம் - தசகம் 1 

 

பகவான் பெருமை
सान्द्रानन्दावबोधात्मकमनुपमितं कालदेशावधिभ्यां
निर्मुक्तं नित्यमुक्तं निगमशतसहस्रेण निर्भास्यमानम् ।
अस्पष्टं दृष्टमात्रे पुनरुरुपुरुषार्थात्मकं ब्रह्म तत्वं
तत्तावद्भाति साक्षाद् गुरुपवनपुरे हन्त भाग्यं जनानाम् ॥ १ ॥

ஸாந்த்₃ராநந்தா₃வபோ₃தா₄த்மகமநுபமிதம் காலதே₃ஶாவதி₄ப்₄யாம்
நிர்முக்தம் நித்யமுக்தம் நிக₃மஶதஸஹஸ்ரேண நிர்பா₄ஸ்யமாநம் |  
அஸ்பஷ்டம் த்₃ருஷ்டமாத்ரே புநருருபுருஷார்தா₂த்மகம் ப்₃ரஹ்ம தத்வம்
தத்தாவத்₃பா₄தி ஸாக்ஷாத்₃ கு₃ருபவநபுரே ஹந்த பா₄க்₃யம் ஜநாநாம் ||1||

1. பகவானாகிய அந்த பரப்ரம்மம் ஆனந்தமாகவும், அறிவாகவும் உள்ளது. மோக்ஷத்தை அளிக்க வல்லது. ஒப்புயர்வு அற்றது. கால தேசத்திற்கு அப்பார்ப்பட்டது. உலக மாயைகளில் சம்பந்தமற்றது. அந்த மெய்ப்போருளே குருவாயூரில் குருவாயூரப்பானாக, ஜனங்களின் பாக்யமாக விளங்குகிறது. ஆச்சர்யம்!

एवंदुर्लभ्यवस्तुन्यपि सुलभतया हस्तलब्धे यदन्यत्
तन्वा वाचा धिया वा भजति बत जन: क्षुद्रतैव स्फुटेयम् ।
एते तावद्वयं तु स्थिरतरमनसा विश्वपीड़ापहत्यै
निश्शेषात्मानमेनं गुरुपवनपुराधीशमेवाश्रयाम: ॥ २ ॥

ஏவம் து₃ர்லப்₄யவஸ்துந்யபி ஸுலப₄தயா ஹஸ்தலப்₃தே₄ யத₃ந்யத்
தந்வா வாசா தி₄யா வா ப₄ஜதி ப₃த ஜந: க்ஷுத்₃ரதைவ ஸ்பு₂டேயம் |  
ஏதே தாவத்₃வயம் து ஸ்தி₂ரதரமநஸா விஶ்வபீடா₃பஹத்யை
நிஶ்ஶேஷாத்மாநமேநம் கு₃ருபவநபுராதீ₄ஶமேவாஶ்ரயாம: ||2||

2. இவ்வாறு, கிடைப்பதற்கு அரிதான பொருள், எளிதில் கிடைத்திருந்தும், மக்கள் அறியாமையால் உடலாலும், மனத்தாலும், வாக்காலும் வேறொன்றை வழிபடுகிறார்கள். கஷ்டம்! அனைத்து உயிர்களிடத்தும் வியாபித்திருப்பவரான குருவாயூரப்பனையே, உலகோரின் கஷ்டம் நீங்க, உறுதி பூண்ட உள்ளத்தோடு நம்பியிருக்கின்றோம்.

सत्त्वं यत्तत् पराभ्यामपरिकलनतो निर्मलं तेन तावत्
भूतैर्भूतेन्द्रियैस्ते वपुरिति बहुश: श्रूयते व्यासवाक्यम्।
तत् स्वच्छ्त्वाद्यदाच्छादितपरसुखचिद्गर्भनिर्भासरूपं
तस्मिन् धन्या रमन्ते श्रुतिमतिमधुरे सुग्रहे विग्रहे ते ॥ ३ ॥

ஸத்த்வம் யத்தத் பராப்₄யாமபரிகலநதோ நிர்மலம் தேந தாவத்
பூ₄தைர்பூ₄தேந்த்₃ரியைஸ்தே வபுரிதி ப₃ஹுஶ: ஶ்ரூயதே வ்யாஸவாக்யம்|  
தத் ஸ்வச்ச்₂த்வாத்₃யதா₃ச்சா₂தி₃தபரஸுக₂சித்₃க₃ர்ப₄நிர்பா₄ஸரூபம்
தஸ்மிந் த₄ந்யா ரமந்தே ஶ்ருதிமதிமது₄ரே ஸுக்₃ரஹே விக்₃ரஹே தே ||3||

3. ஓ குருவாயூரப்பா! தங்கள் திருவுருவம் ரஜோகுணம், தமோகுணம் ஆகிய குணங்களின் சம்பந்தமற்று, ஸத்வ குணம் நிரம்பியதாகவும், பஞ்ச பூதங்களாலும்,பதினொரு இந்த்ரியங்களாலும் ஸ்ருஷ்டிக்கப்பட்டது என்று வியாசர் கூறுகின்றார். பரமானந்தரூபமான உன் அழகுருவம் பிரகாசிக்கிறதாய், எளிதில் அடையக்கூடியதாய் , காதிற்கும், மனத்திற்கும் இனியதாய் இருக்கிறது. புண்யசாலிகள் அந்த ரூபத்தைக் கண்டு களிக்கிறார்கள்.

निष्कम्पे नित्यपूर्णे निरवधिपरमानन्दपीयूषरूपे
निर्लीनानेकमुक्तावलिसुभगतमे निर्मलब्रह्मसिन्धौ ।
कल्लोलोल्लासतुल्यं खलु विमलतरं सत्त्वमाहुस्तदात्मा
कस्मान्नो निष्कलस्त्वं सकल इति वचस्त्वत्कलास्वेव भूमन् ॥ ४ ॥

நிஷ்கம்பே நித்யபூர்ணே நிரவதி₄பரமாநந்த₃பீயூஷரூபே
நிர்லீநாநேகமுக்தாவலிஸுப₄க₃தமே நிர்மலப்₃ரஹ்மஸிந்தௌ₄ |  
கல்லோலோல்லாஸதுல்யம் க₂லு விமலதரம் ஸத்த்வமாஹுஸ்ததா₃த்மா
கஸ்மாந்நோ நிஷ்கலஸ்த்வம் ஸகல இதி வசஸ்த்வத்கலாஸ்வேவ பூ₄மந் ||4||

4. தாங்கள் என்றும் நிறைந்து இருப்பவர். பேரின்பமாகிற அம்ருதஸ்வரூபி. முக்தர்களின் கூட்டத்தால் அழகு நிறைந்து விளங்குபவர். அப்படிப்பட்ட ஸத்வ ரூபியான தாங்களே முழுமுதற்கடவுள். பரிபூரணர்.

निर्व्यापारोऽपि निष्कारणमज भजसे यत्क्रियामीक्षणाख्यां
तेनैवोदेति लीना प्रकृतिरसतिकल्पाऽपि कल्पादिकाले।
तस्या: संशुद्धमंशं कमपि तमतिरोधायकं सत्त्वरूपं
स त्वं धृत्वा दधासि स्वमहिमविभवाकुण्ठ वैकुण्ठ रूपं॥५॥

நிர்வ்யாபாரோ(அ)பி நிஷ்காரணமஜ ப₄ஜஸே யத்க்ரியாமீக்ஷணாக்₂யாம்
தேநைவோதே₃தி லீநா ப்ரக்ருதிரஸதிகல்பா(அ)பி கல்பாதி₃காலே|  
தஸ்யா: ஸம்ஶுத்₃த₄மம்ஶம் கமபி தமதிரோதா₄யகம் ஸத்த்வரூபம்
ஸ த்வம் த்₄ருத்வா த₃தா₄ஸி ஸ்வமஹிமவிப₄வாகுண்ட₂ வைகுண்ட₂ ரூபம் ||5||

5. ஓ குருவாயூரப்பா! பிறப்பற்றவரே! நீர் எவ்விதச் செயலுமற்றவர். ஆயினும், கடைக்கண் பார்வையால் மாயையை ஏவும் செயலைச் செய்து வருகிறீர். அந்த  மாயை, தங்களிடத்தில் அடங்காதது போன்ற தோற்றம் அளிக்கின்றது. விவரிக்கமுடியாத அந்த தூய்மையான மாயையின் ஒரு அம்சமே உம்முடைய திருவுருவம்.
                                                                                                                                                     
तत्ते प्रत्यग्रधाराधरललितकलायावलीकेलिकारं
लावण्यस्यैकसारं सुकृतिजनदृशां पूर्णपुण्यावतारम्।
लक्ष्मीनिश्शङ्कलीलानिलयनममृतस्यन्दसन्दोहमन्त:
सिञ्चत् सञ्चिन्तकानां वपुरनुकलये मारुतागारनाथ ॥६॥

தத்தே ப்ரத்யக்₃ரதா₄ராத₄ரலலிதகலாயாவலீகேலிகாரம்
லாவண்யஸ்யைகஸாரம் ஸுக்ருதிஜநத்₃ருஶாம் பூர்ணபுண்யாவதாரம்|  
லக்ஷ்மீநிஶ்ஶங்கலீலாநிலயநமம்ருதஸ்யந்த₃ஸந்தோ₃ஹமந்த:
ஸிஞ்சத் ஸஞ்சிந்தகாநாம் வபுரநுகலயே மாருதாகா₃ரநாத₂ ||6||

6. தங்கள் சரீரமானது, கார்மேகம் போலும், காயாம்பூங்கோத்தைப் போலும் அழகாய் இருக்கிறது. புண்ணியசாலிகளின் கண்களுக்கு முன்ஜன்ம புண்ணியத்தின் பயனாக விளங்குகிறது. ஸ்ரீ மகாலக்ஷ்மி விளையாடுவதற்க்கு ஏற்ற இருப்பிடமாக இருக்கிறது. பக்தர்களின் மனத்தைப் பேரானந்த வெள்ளத்தில் மூழ்கச் செய்கிறது. அப்படிப்பட்ட தங்களை நான் என்றும் ஸ்மரிக்கிறேன்.

कष्टा ते सृष्टिचेष्टा बहुतरभवखेदावहा जीवभाजा-
मित्येवं पूर्वमालोचितमजित मया नैवमद्याभिजाने।
नोचेज्जीवा: कथं वा मधुरतरमिदं त्वद्वपुश्चिद्रसार्द्रं
नेत्रै: श्रोत्रैश्च पीत्वा परमरससुधाम्भोधिपूरे रमेरन्॥७॥

கஷ்டா தே ஸ்ருஷ்டிசேஷ்டா ப₃ஹுதரப₄வகே₂தா₃வஹா ஜீவபா₄ஜா-
மித்யேவம் பூர்வமாலோசிதமஜித மயா நைவமத்₃யாபி₄ஜாநே|  
நோசேஜ்ஜீவா: கத₂ம் வா மது₄ரதரமித₃ம் த்வத்₃வபுஶ்சித்₃ரஸார்த்₃ரம்
நேத்ரை: ஶ்ரோத்ரைஶ்ச பீத்வா பரமரஸஸுதா₄ம்போ₄தி₄பூரே ரமேரந்||7||

7. மாயையால் ஜயிக்கப்படாத குருவாயூரப்பா! இதுவரை, தங்கள் ஸ்ருஷ்டி பிறவித் துன்பத்தை அளிக்கின்றது என்று நினைத்தேன். இப்போது அந்த எண்ணம் எனக்கில்லை. ஏனெனில், இவ்வாறு படைக்காதிருந்தால், மிகவும் ஆனந்தமான உன் திருமேனியைக் கண்களாலும், காதுகளாலும் அனுபவித்து பேரின்பக் கடலில் மகிழ்ச்சி அடைந்திருக்க முடியுமா?

नम्राणां सन्निधत्ते सततमपि पुरस्तैरनभ्यर्थितान -
प्यर्थान् कामानजस्रं वितरति परमानन्दसान्द्रां गतिं च।
इत्थं निश्शेषलभ्यो निरवधिकफल: पारिजातो हरे त्वं
क्षुद्रं तं शक्रवाटीद्रुममभिलषति व्यर्थमर्थिव्रजोऽयम्॥८॥

நம்ராணாம் ஸந்நித₄த்தே ஸததமபி புரஸ்தைரநப்₄யர்தி₂தாந -
ப்யர்தா₂ந் காமாநஜஸ்ரம் விதரதி பரமாநந்த₃ஸாந்த்₃ராம் க₃திம் ச|  
இத்த₂ம் நிஶ்ஶேஷலப்₄யோ நிரவதி₄கப₂ல: பாரிஜாதோ ஹரே த்வம்
க்ஷுத்₃ரம் தம் ஶக்ரவாடீத்₃ருமமபி₄லஷதி வ்யர்த₂மர்தி₂வ்ரஜோ(அ)யம்||8||

8. குருவாயூரப்பனான பாரிஜாதமானது அளவற்ற பயன்களை அளிக்கும். சுலபமாக அடைய முடியும். மோக்ஷத்தையும் கொடுக்கும். அப்படியிருக்க, அழியக்கூடிய பொருட்களைக் கொடுக்கும் இந்திரலோகத்து பாரிஜாத மரத்தை யாசகர்கள் விரும்புவது ஏனோ?

कारुण्यात्काममन्यं ददति खलु परे स्वात्मदस्त्वं विशेषा-
दैश्वर्यादीशतेऽन्ये जगति परजने स्वात्मनोऽपीश्वरस्त्वम्।
त्वय्युच्चैरारमन्ति प्रतिपदमधुरे चेतना: स्फीतभाग्या-
स्त्वं चात्माराम एवेत्यतुलगुणगणाधार शौरे नमस्ते॥९॥

காருண்யாத்காமமந்யம் த₃த₃தி க₂லு பரே ஸ்வாத்மத₃ஸ்த்வம் விஶேஷா-
தை₃ஶ்வர்யாதீ₃ஶதே(அ)ந்யே ஜக₃தி பரஜநே ஸ்வாத்மநோ(அ)பீஶ்வரஸ்த்வம்|
த்வய்யுச்சைராரமந்தி ப்ரதிபத₃மது₄ரே சேதநா: ஸ்பீ₂தபா₄க்₃யா-
ஸ்த்வம் சாத்மாராம ஏவேத்யதுலகு₃ணக₃ணாதா₄ர ஶௌரே நமஸ்தே||9||

9. உலகில் மற்ற தெய்வங்கள் அபீஷ்டங்களைக் கொடுக்கின்றனர். நீயோ, உன்னையே, உன் ஸ்வரூபமான ஆத்மாவையே அளிக்கின்றாய். வாசுதேவ, உன்னைத் தொழுகின்றேன்.

ऐश्वर्यं शङ्करादीश्वरविनियमनं विश्वतेजोहराणां
तेजस्संहारि वीर्यं विमलमपि यशो निस्पृहैश्चोपगीतम्।
अङ्गासङ्गा सदा श्रीरखिलविदसि न क्वापि ते सङ्गवार्ता
तद्वातागारवासिन् मुरहर भगवच्छब्दमुख्याश्रयोऽसि॥१०॥

ஐஶ்வர்யம் ஶங்கராதீ₃ஶ்வரவிநியமநம் விஶ்வதேஜோஹராணாம்
தேஜஸ்ஸம்ஹாரி வீர்யம் விமலமபி யஶோ நிஸ்ப்ருஹைஶ்சோபகீ₃தம்|  
அங்கா₃ஸங்கா₃ ஸதா₃ ஶ்ரீரகி₂லவித₃ஸி ந க்வாபி தே ஸங்க₃வார்தா
தத்₃வாதாகா₃ரவாஸிந் முரஹர ப₄க₃வச்ச₂ப்₃த₃முக்₂யாஶ்ரயோ(அ)ஸி||10||

10. முரனைக் கொன்றவனே! சங்கரனையும், மற்ற தெய்வங்களையும், அவரவர்கள் வேலையைச் செய்ய ஏவுகின்றீர். முற்றும் துறந்த பெரியோர் உன்னைப் பாடும் புகழ் பெற்றிருக்கிறீர். தாங்கள் பற்றற்று இருப்பதால்,பகவான் என்ற சொல்லுக்குப் பொருளாக விளங்குகின்றீர்

Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 2




2  பகவத் ஸ்வரூபம் வர்ணனை
பகவான் திருமேனி வர்ணனை
सूर्यस्पर्धिकिरीटमूर्ध्वतिलकप्रोद्भासिफालान्तरं
कारुण्याकुलनेत्रमार्द्रहसितोल्लासं सुनासापुटम्।
गण्डोद्यन्मकराभकुण्डलयुगं कण्ठोज्वलत्कौस्तुभं
त्वद्रूपं वनमाल्यहारपटलश्रीवत्सदीप्रं भजे॥१॥

ஸூர்யஸ்பர்தி₄கிரீடமூர்த்₄வதிலகப்ரோத்₃பா₄ஸிபா₂லாந்தரம்
காருண்யாகுலநேத்ரமார்த்₃ரஹஸிதோல்லாஸம் ஸுநாஸாபுடம்|
க₃ண்டோ₃த்₃யந்மகராப₄குண்ட₃லயுக₃ம் கண்டோ₂ஜ்வலத்கௌஸ்துப₄ம்
த்வத்₃ரூபம் வநமால்யஹாரபடலஶ்ரீவத்ஸதீ₃ப்ரம் ப₄ஜே|| 1||

1.சூர்யனை விடப் பிரகாசமானதாய் உனது கிரீடம் விளங்குகிறது. மேல் நோக்கியுள்ள திலகத்தால் உனது நெற்றி மிக அழகாய் விளங்குகிறது. கருணை பொங்கும் கண்கள், புன்சிரிப்புடன் கூடிய செவ்வாய், மீனைப் போன்ற நாசி, கன்னங்களில் ஒளி வீசும் மகர குண்டலங்கள், மார்பை அலங்கரிக்கும் கௌஸ்துப மணி, வனமாலை, முத்துமாலை, ஸ்ரீவத்ஸம் இவற்றால் அழகியதாக விளங்கும் தங்கள் திருமேனியைத் தினமும் தொழுகிறேன்.

केयूराङ्गदकङ्कणोत्तममहारत्नाङ्गुलीयाङ्कित-
श्रीमद्बाहुचतुष्कसङ्गतगदाशङ्खारिपङ्केरुहाम् ।
काञ्चित् काञ्चनकाञ्चिलाञ्च्छितलसत्पीताम्बरालम्बिनी-
मालम्बे विमलाम्बुजद्युतिपदां मूर्तिं तवार्तिच्छिदम् ॥२॥

மனக்கவலையைப் போக்கும் ஸ்லோகம்:

கேயூராங்க₃த₃கங்கணோத்தமமஹாரத்நாங்கு₃லீயாங்கித-
ஶ்ரீமத்₃பா₃ஹுசதுஷ்கஸங்க₃தக₃தா₃ஶங்கா₂ரிபங்கேருஹாம் |
காஞ்சித் காஞ்சநகாஞ்சிலாஞ்ச்சி₂தலஸத்பீதாம்ப₃ராலம்பி₃நீ-
மாலம்பே₃ விமலாம்பு₃ஜத்₃யுதிபதா₃ம் மூர்திம் தவார்திச்சி₂த₃ம் || 2||

2. தங்கள் நான்கு கரங்களில் தோள்வளைகள், கங்கணம், சிறந்த ரத்னங்களால் இழைத்த மோதிரம் முதலியவை பிரகாசிக்கின்றது. மேலும், அவை சங்கம், சக்ரம், கதை, தாமரை இவற்றால் விளங்குகிறது. இடுப்பில் பொன் அரைஞாணும், பீதாம்பரமும் அலங்கரிக்கின்றன. திருவடிகள் தாமரை மலரை ஒத்ததாய் இருக்கின்றது. தங்கள் அழகிய திருமேனி பக்தர்களின் துன்பங்களையும், பீடைகளையும் போக்கக்கூடியது. இப்படிப்பட்ட தங்கள் திருமேனியை சரணடைகிறேன்.

यत्त्त्रैलोक्यमहीयसोऽपि महितं सम्मोहनं मोहनात्
कान्तं कान्तिनिधानतोऽपि मधुरं माधुर्यधुर्यादपि ।
सौन्दर्योत्तरतोऽपि सुन्दरतरं त्वद्रूपमाश्चर्यतोऽ-
प्याश्चर्यं भुवने न कस्य कुतुकं पुष्णाति विष्णो विभो ॥३॥

அழகு முதலிய லாபங்கள் கிட்டும்:

யத்த்த்ரைலோக்யமஹீயஸோ(அ)பி மஹிதம் ஸம்மோஹநம் மோஹநாத்
காந்தம் காந்திநிதா₄நதோ(அ)பி மது₄ரம் மாது₄ர்யது₄ர்யாத₃பி |
ஸௌந்த₃ர்யோத்தரதோ(அ)பி ஸுந்த₃ரதரம் த்வத்₃ரூபமாஶ்சர்யதோ(அ)-
ப்யாஶ்சர்யம் பு₄வநே ந கஸ்ய குதுகம் புஷ்ணாதி விஷ்ணோ விபோ₄ || 3||

3. பிரபுவே! மூவுலகத்திலும் சிறந்த பொருட்கள் யாவற்றையும் விட சிறந்ததாய் தங்கள் ரூபம் விளங்குகிறது. மனங்கவர்ந்த பொருட்கள் அனைத்தையும் விட மனம் கவர்ந்தது. இனியவையான அனைத்தையும் விட இனியவன். அழகுமிக்க பொருட்கள் எல்லாவற்றையும் விட அழகு வாய்ந்தவன். ஆச்சர்யம் மிக்க பொருட்கள் அனைத்தையும் விட ஆச்சர்யம் மிக்கவன். தங்கள் திவ்ய ரூபம் யாருக்குத்தான் மகிழ்ச்சியை உண்டு பண்ணாது?!!

तत्तादृङ्मधुरात्मकं तव वपु: सम्प्राप्य सम्पन्मयी
सा देवी परमोत्सुका चिरतरं नास्ते स्वभक्तेष्वपि ।
तेनास्या बत कष्टमच्युत विभो त्वद्रूपमानोज्ञक -
प्रेमस्थैर्यमयादचापलबलाच्चापल्यवार्तोदभूत् ॥४॥

தத்தாத்₃ருங்மது₄ராத்மகம் தவ வபு: ஸம்ப்ராப்ய ஸம்பந்மயீ
ஸா தே₃வீ பரமோத்ஸுகா சிரதரம் நாஸ்தே ஸ்வப₄க்தேஷ்வபி |
தேநாஸ்யா ப₃த கஷ்டமச்யுத விபோ₄ த்வத்₃ரூபமாநோஜ்ஞக -
ப்ரேமஸ்தை₂ர்யமயாத₃சாபலப₃லாச்சாபல்யவார்தோத₃பூ₄த் || 4||

4. ஓ குருவாயூரப்பா! ஸகல செல்வத்திற்கும் இருப்பிடமான மகாலக்ஷ்மி தங்கள் திருமேனியில் பற்று கொண்டு தங்களிடத்திலேயே நிலைத்து விட்டாள். அதனால் அவள் தனது பக்தர்களிடத்தில் தங்குவதில்லை. தங்கள் திருமேனியில் கொண்ட பற்றினால் அவளுக்கு “நிலையற்றவள்” என்ற அவப்பெயர் ஏற்பட்டது. (திருமகள் தனது தலைவனான திருமாலிடம் அதிகப்பற்று வைத்திருக்கிறாள் எனக் கொள்ள வேண்டும்).

लक्ष्मीस्तावकरामणीयकहृतैवेयं परेष्वस्थिरे-
त्यस्मिन्नन्यदपि प्रमाणमधुना वक्ष्यामि लक्ष्मीपते ।
ये त्वद्ध्यानगुणानुकीर्तनरसासक्ता हि भक्ता जना-
स्तेष्वेषा वसति स्थिरैव दयितप्रस्तावदत्तादरा ॥५॥

லக்ஷ்மீஸ்தாவகராமணீயகஹ்ருதைவேயம் பரேஷ்வஸ்தி₂ரே-
த்யஸ்மிந்நந்யத₃பி ப்ரமாணமது₄நா வக்ஷ்யாமி லக்ஷ்மீபதே |
யே த்வத்₃த்₄யாநகு₃ணாநுகீர்தநரஸாஸக்தா ஹி ப₄க்தா ஜநா-
ஸ்தேஷ்வேஷா வஸதி ஸ்தி₂ரைவ த₃யிதப்ரஸ்தாவத₃த்தாத₃ரா || 5||

5. உன் அழகில் ஈடுபட்டு மகாலக்ஷ்மியானவள் மற்றவரிடம் நிலைத்து நிற்பதில்லை. தங்களைப் பற்றிய சிந்தையிலும், நாம சங்கீர்த்தனத்தாலும்,
தங்கள் புகழ் பாடும் பக்தர்களிடத்தில் நித்யவாஸம் செய்கிறாள் அல்லவா? அதாவது, பகவானிடத்திலும், பகவத் விஷயங்களைப் பாடும் பக்தர்களிடத்திலும் நிலைத்து இருக்கிறாள், மற்றவர்களிடத்தில் நிலைத்திருப்பதில்லை எனக் கருத்து.

एवंभूतमनोज्ञतानवसुधानिष्यन्दसन्दोहनं
त्वद्रूपं परचिद्रसायनमयं चेतोहरं शृण्वताम् ।
सद्य: प्रेरयते मतिं मदयते रोमाञ्चयत्यङ्गकं
व्यासिञ्चत्यपि शीतवाष्पविसरैरानन्दमूर्छोद्भवै: ॥६॥

ஏவம் பூ₄தமநோஜ்ஞதாநவஸுதா₄நிஷ்யந்த₃ஸந்தோ₃ஹநம்
த்வத்₃ரூபம் பரசித்₃ரஸாயநமயம் சேதோஹரம் ஶ்ருண்வதாம் |
ஸத்₃ய: ப்ரேரயதே மதிம் மத₃யதே ரோமாஞ்சயத்யங்க₃கம்
வ்யாஸிஞ்சத்யபி ஶீதவாஷ்பவிஸரைராநந்த₃மூர்சோ₂த்₃ப₄வை: || 6||

6. உன் உருவம், ஸௌந்தர்யமான அமுதத்தைச் சொரிகிறது. ஆனந்தமாகவும், மனம் கவர்வதாகவும் உள்ளது. கேட்கும்போது, மறுபடி மறுபடி கேட்க வேண்டும் என்ற ஆசையை உண்டாக்குகிறது. ஆனந்தப் பரவசத்தில் உடல் புல்லரிக்கிறது. கண்களில் நீர் பெருகி உடலையே நனைத்து விடுகிறது.

एवंभूततया हि भक्त्यभिहितो योगस्स योगद्वयात्
कर्मज्ञानमयात् भृशोत्तमतरो योगीश्वरैर्गीयते ।
सौन्दर्यैकरसात्मके त्वयि खलु प्रेमप्रकर्षात्मिका
भक्तिर्निश्रममेव विश्वपुरुषैर्लभ्या रमावल्लभ ॥७॥

ஏவம் பூ₄ததயா ஹி ப₄க்த்யபி₄ஹிதோ யோக₃ஸ்ஸ யோக₃த்₃வயாத்
கர்மஜ்ஞாநமயாத் ப்₄ருஶோத்தமதரோ யோகீ₃ஶ்வரைர்கீ₃யதே |
ஸௌந்த₃ர்யைகரஸாத்மகே த்வயி க₂லு ப்ரேமப்ரகர்ஷாத்மிகா
ப₄க்திர்நிஶ்ரமமேவ விஶ்வபுருஷைர்லப்₄யா ரமாவல்லப₄ || 7||

7. யோகங்களில் சிறந்தது பக்தி யோகம். கர்ம-ஞான யோகங்களை விட பக்தி யோகமே சிறந்தது என யோகிகள் கூறுகின்றனர். அத்தகைய பக்தி யோகம், அழகுருவான உம்மிடத்தில் எளிதாக அடையக்கூடியதாய் இருக்கின்றது.

निष्कामं नियतस्वधर्मचरणं यत् कर्मयोगाभिधं
तद्दूरेत्यफलं यदौपनिषदज्ञानोपलभ्यं पुन: ।
तत्त्वव्यक्ततया सुदुर्गमतरं चित्तस्य तस्माद्विभो
त्वत्प्रेमात्मकभक्तिरेव सततं स्वादीयसी श्रेयसी ॥८॥

நிஷ்காமம் நியதஸ்வத₄ர்மசரணம் யத் கர்மயோகா₃பி₄த₄ம்
தத்₃தூ₃ரேத்யப₂லம் யதௌ₃பநிஷத₃ஜ்ஞாநோபலப்₄யம் புந: |
தத்த்வவ்யக்ததயா ஸுது₃ர்க₃மதரம் சித்தஸ்ய தஸ்மாத்₃விபோ₄
த்வத்ப்ரேமாத்மகப₄க்திரேவ ஸததம் ஸ்வாதீ₃யஸீ ஶ்ரேயஸீ || 8||

8. செய்யவேண்டிய கர்மாக்களை பற்றற்று செய்வதும், அதனால் உண்டாகும் ஞானமும் கர்ம-ஞான யோகமாகும். இது காலம் கடந்தே பலனளிக்கும். ஞானத்தால் உண்டாகும் பலனோவெனில் இந்திரியங்களுக்குப் புலப்படாதது. சுலபத்தில் மனதிற்கு எட்டாதது. உன்னிடத்தில் செலுத்தும் பக்தியே நிரந்தரமான இன்பத்தை அளிப்பதாக இருக்கிறது.

अत्यायासकराणि कर्मपटलान्याचर्य निर्यन्मला
बोधे भक्तिपथेऽथवाऽप्युचिततामायान्ति किं तावता ।
क्लिष्ट्वा तर्कपथे परं तव वपुर्ब्रह्माख्यमन्ये पुन-
श्चित्तार्द्रत्वमृते विचिन्त्य बहुभिस्सिद्ध्यन्ति जन्मान्तरै: ॥९॥

அத்யாயாஸகராணி கர்மபடலாந்யாசர்ய நிர்யந்மலா
போ₃தே₄ ப₄க்திபதே₂(அ)த₂வா(அ)ப்யுசிததாமாயாந்தி கிம் தாவதா |
க்லிஷ்ட்வா தர்கபதே₂ பரம் தவ வபுர்ப்₃ரஹ்மாக்₂யமந்யே புந-
ஶ்சித்தார்த்₃ரத்வம்ருதே விசிந்த்ய ப₃ஹுபி₄ஸ்ஸித்₃த்₄யந்தி ஜந்மாந்தரை: || 9||

9. மிகவும் சிரமப்பட்டு கர்மாக்களைச் செய்து அதனால் வைராக்கியம் பெற்றால் ஞானயோகத்திலும், இல்லையேல் பக்தி யோகத்திலும் மக்கள் செல்கிறார்கள். அதனால் என்ன பயன்? மற்ற சிலரோ வேதாந்தமார்க்கத்தில் மிகவும் சிரமப்பட்டு, “பிரம்மம்” என்ற உன்னைத் தியானித்து, பல ஜன்மங்களுக்குப்பின் முக்தி அடைகிறார்கள்.

त्वद्भक्तिस्तु कथारसामृतझरीनिर्मज्जनेन स्वयं
सिद्ध्यन्ती विमलप्रबोधपदवीमक्लेशतस्तन्वती ।
सद्यस्सिद्धिकरी जयत्ययि विभो सैवास्तु मे त्वत्पद-
प्रेमप्रौढिरसार्द्रता द्रुततरं वातालयाधीश्वर ॥१०॥

த்வத்₃ப₄க்திஸ்து கதா₂ரஸாம்ருதஜ₂ரீநிர்மஜ்ஜநேந ஸ்வயம்
ஸித்₃த்₄யந்தீ விமலப்ரபோ₃த₄பத₃வீமக்லேஶதஸ்தந்வதீ |
ஸத்₃யஸ்ஸித்₃தி₄கரீ ஜயத்யயி விபோ₄ ஸைவாஸ்து மே த்வத்பத₃-
ப்ரேமப்ரௌடி₄ரஸார்த்₃ரதா த்₃ருததரம் வாதாலயாதீ₄ஶ்வர || 10||

10. பிரபுவே! உன்னிடம் கொண்ட பக்தியோவேனில், உன் கதைகளில் பெருகும் அம்ருத வெள்ளத்தில் மூழ்குவதால் தானாகவே மோக்ஷத்தை அளிக்கவல்லது. உடனேயே பலனைத் தருகிறது. சிரமமின்றி பிரம்ம ஞானத்தை அளிக்கிறது. உன் திருப்பாதங்களில் ஏற்பட்ட அன்பினால், இடைவிடாமல் உன்னிடம் பக்தி செய்ய எனக்கு அருள வேண்டும்.

Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 3

 Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 3


 

 


 

 

 

3 பக்தி ப்ரார்த்தனை
पठन्तो नामानि प्रमदभरसिन्धौ निपतिता:
स्मरन्तो रूपं ते वरद कथयन्तो गुणकथा: ।
चरन्तो ये भक्तास्त्वयि खलु रमन्ते परममू-
नहं धन्यान् मन्ये समधिगतसर्वाभिलषितान् ॥१॥

பட₂ந்தோ நாமாநி ப்ரமத₃ப₄ரஸிந்தௌ₄ நிபதிதா:
ஸ்மரந்தோ ரூபம் தே வரத₃ கத₂யந்தோ கு₃ணகதா₂: |
சரந்தோ யே ப₄க்தாஸ்த்வயி க₂லு ரமந்தே பரமமூ-
நஹம் த₄ந்யாந் மந்யே ஸமதி₄க₃தஸர்வாபி₄லஷிதாந் || 1||

1. வரதா! பக்தர்கள், உன் நாமாக்களைப் படித்தும், உன்  ரூபத்தை த்யானித்தும், அதனால் ஆனந்தக் கடலில் மூழ்கி,  உன் கதைகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்த பக்தர்களே பாக்யசாலிகள் என்று கருதுகிறேன்.

गदक्लिष्टं कष्टं तव चरणसेवारसभरेऽ-
प्यनासक्तं चित्तं भवति बत विष्णो कुरु दयाम् ।
भवत्पादाम्भोजस्मरणरसिको नामनिवहा-
नहं गायं गायं कुहचन विवत्स्यामि विजने ॥२॥

க₃த₃க்லிஷ்டம் கஷ்டம் தவ சரணஸேவாரஸப₄ரே(அ)-
ப்யநாஸக்தம் சித்தம் ப₄வதி ப₃த விஷ்ணோ குரு த₃யாம் |
ப₄வத்பாதா₃ம்போ₄ஜஸ்மரணரஸிகோ நாமநிவஹா-
நஹம் கா₃யம் கா₃யம் குஹசந விவத்ஸ்யாமி விஜநே || 2||

2. உள்ளும் புறமும் ரோகங்களால் கஷ்டப்படும் என் மனம் தங்களை ஸேவிப்பதில் ஈடுபடுவதில்லை. ப்ரபோ, உன்  திருவடிகளை சரணடைந்து அவற்றை த்யானம் செய்து, உன் நாமாக்களை உச்சரித்துக்கொண்டு ஏகாந்தத்தில் இருக்க விரும்புகிறேன்.

कृपा ते जाता चेत्किमिव न हि लभ्यं तनुभृतां
मदीयक्लेशौघप्रशमनदशा नाम कियती ।
न के के लोकेऽस्मिन्ननिशमयि शोकाभिरहिता
भवद्भक्ता मुक्ता: सुखगतिमसक्ता विदधते ॥३॥

க்ருபா தே ஜாதா சேத்கிமிவ ந ஹி லப்₄யம் தநுப்₄ருதாம்
மதீ₃யக்லேஶௌக₄ப்ரஶமநத₃ஶா நாம கியதீ |
ந கே கே லோகே(அ)ஸ்மிந்நநிஶமயி ஶோகாபி₄ரஹிதா
ப₄வத்₃ப₄க்தா முக்தா: ஸுக₂க₃திமஸக்தா வித₃த₄தே || 3||

3. தங்கள்  க்ருபை இருந்தால் ஜீவன்களுக்கு அடைய முடியாதது என்று  ஒன்றும் இல்லை. அப்படியிருக்க, என் கஷ்டங்களை அழிப்பது உனக்கு எம்மாத்திரம்? உன் பக்தர்கள் எப்பொழுதும் துக்கமற்றவர்களாக, பற்றற்றவர்களாக, ஜீவன் முக்தர்களாக மோக்ஷத்தை அடைகின்றனர்.

मुनिप्रौढा रूढा जगति खलु गूढात्मगतयो
भवत्पादाम्भोजस्मरणविरुजो नारदमुखा: ।
चरन्तीश स्वैरं सततपरिनिर्भातपरचि -
त्सदानन्दाद्वैतप्रसरपरिमग्ना: किमपरम् ॥४॥

முநிப்ரௌடா₄ ரூடா₄ ஜக₃தி க₂லு கூ₃டா₄த்மக₃தயோ
ப₄வத்பாதா₃ம்போ₄ஜஸ்மரணவிருஜோ நாரத₃முகா₂: |
சரந்தீஶ ஸ்வைரம் ஸததபரிநிர்பா₄தபரசி -
த்ஸதா₃நந்தா₃த்₃வைதப்ரஸரபரிமக்₃நா: கிமபரம் || 4||.

4. நாரதர்  முதலிய முனிவர்கள்,  ஞானத்தைப் பெற்று, தங்களுடைய பாதஸேவையினால் துன்பத்திலிருந்து விடுபட்டவர்கள்.  எப்போதும் பிரகாசிக்கும் பரமானந்த வெள்ளத்தில் மூழ்கியுள்ளனர்.  அவர்கள் விரும்பியவாறு ஸஞ்சரிக்கிறார்கள். அவர்களுக்கு இதைவிட அடையவேண்டியது என்ன இருக்கிறது?

भवद्भक्ति: स्फीता भवतु मम सैव प्रशमये-
दशेषक्लेशौघं न खलु हृदि सन्देहकणिका ।
न चेद्व्यासस्योक्तिस्तव च वचनं नैगमवचो
भवेन्मिथ्या रथ्यापुरुषवचनप्रायमखिलम् ॥५॥

ப₄வத்₃ப₄க்தி: ஸ்பீ₂தா ப₄வது மம ஸைவ ப்ரஶமயே-
த₃ஶேஷக்லேஶௌக₄ம் ந க₂லு ஹ்ருதி₃ ஸந்தே₃ஹகணிகா |
ந சேத்₃வ்யாஸஸ்யோக்திஸ்தவ ச வசநம் நைக₃மவசோ
ப₄வேந்மித்₂யா ரத்₂யாபுருஷவசநப்ராயமகி₂லம் || 5||

5. ஓ குருவாயூரப்பா! எனக்குத் தங்களிடத்தில் அளவற்ற பக்தி உண்டாகவேண்டும். அது, என்  துன்பங்கள் யாவற்றையும் போக்கும் என்பதில் எனக்கு சிறிதும்  ஐயமில்லை. அப்படியில்லையெனில், வியாசருடைய வாக்கும், வேதவாக்கும், நாடோடியின் பேச்சைப் போல பொய்யாக அமைந்துவிடும்.

भवद्भक्तिस्तावत् प्रमुखमधुरा त्वत् गुणरसात्
किमप्यारूढा चेदखिलपरितापप्रशमनी ।
पुनश्चान्ते स्वान्ते विमलपरिबोधोदयमिल-
न्महानन्दाद्वैतं दिशति किमत: प्रार्थ्यमपरम् ॥६॥

ப₄வத்₃ப₄க்திஸ்தாவத் ப்ரமுக₂மது₄ரா த்வத் கு₃ணரஸாத்
கிமப்யாரூடா₄ சேத₃கி₂லபரிதாபப்ரஶமநீ |
புநஶ்சாந்தே ஸ்வாந்தே விமலபரிபோ₃தோ₄த₃யமில-
ந்மஹாநந்தா₃த்₃வைதம் தி₃ஶதி கிமத: ப்ரார்த்₂யமபரம் || 6||.

6. உன் கதைகளைக் கேட்பதால் உண்டாகும் பக்தி இனிமையாக இருக்கிறது. இந்த பக்தி வளர வளர, தாபங்கள், துன்பங்கள் அடியோடு  ஒழிகின்றன.  முடிவில், அது சுத்தமான ப்ரம்மஞானத்துடன் கூடிய பேரானந்தத்தை அளிக்கிறது. இதற்குமேல் வேண்டக்கூடியது வேறு என்ன இருக்கிறது?

विधूय क्लेशान्मे कुरु चरणयुग्मं धृतरसं
भवत्क्षेत्रप्राप्तौ करमपि च ते पूजनविधौ ।
भवन्मूर्त्यालोके नयनमथ ते पादतुलसी-
परिघ्राणे घ्राणं श्रवणमपि ते चारुचरिते ॥७॥

விதூ₄ய க்லேஶாந்மே குரு சரணயுக்₃மம் த்₄ருதரஸம்
ப₄வத்க்ஷேத்ரப்ராப்தௌ கரமபி ச தே பூஜநவிதௌ₄ |
ப₄வந்மூர்த்யாலோகே நயநமத₂ தே பாத₃துலஸீ-
பரிக்₄ராணே க்₄ராணம் ஶ்ரவணமபி தே சாருசரிதே || 7||

7. ஓ குருவாயூரப்பா, என் துன்பங்களைப் போக்கி அருள வேண்டும். என் கால்கள் உன் கோயிலைப் பிரதக்ஷிணம் செய்யவும், கைகள் உன்னைப் பூஜிக்கவும், கண்கள் உன் வடிவழகைக் காணவும், மூக்கு சரண துளசியை  நுகரவும், காது உன் கதைகளை ஸ்ரவணம் செய்வதிலும் ஈடுபடும்வண்ணம் அருள் புரிய வேண்டும்.

प्रभूताधिव्याधिप्रसभचलिते मामकहृदि
त्वदीयं तद्रूपं परमसुखचिद्रूपमुदियात् ।
उदञ्चद्रोमाञ्चो गलितबहुहर्षाश्रुनिवहो
यथा विस्मर्यासं दुरुपशमपीडापरिभवान् ॥८॥

ப்ரபூ₄தாதி₄வ்யாதி₄ப்ரஸப₄சலிதே மாமகஹ்ருதி₃
த்வதீ₃யம் தத்₃ரூபம் பரமஸுக₂சித்₃ரூபமுதி₃யாத் |
உத₃ஞ்சத்₃ரோமாஞ்சோ க₃லிதப₃ஹுஹர்ஷாஶ்ருநிவஹோ
யதா₂ விஸ்மர்யாஸம் து₃ருபஶமபீடா₃பரிப₄வாந் || 8||

8.  கவலைகளாலும், ரோகங்களாலும் கலக்கமடைந்ததாக என் மனம் இருக்கிறது.  அவற்றை மறந்து, மயிர்க்கூச்செறிய, ஆனந்தக் கண்ணீர் பெருக்கி, உன் சிதானந்த வடிவழகு என் மனதில் தோன்ற அருள்வாய். உலகக் கஷ்டங்களில் இருந்து தப்ப பகவத்யானம் தான் வழி என்று கொள்ள வேண்டும்.

मरुद्गेहाधीश त्वयि खलु पराञ्चोऽपि सुखिनो
भवत्स्नेही सोऽहं सुबहु परितप्ये च किमिदम् ।
अकीर्तिस्ते मा भूद्वरद गदभारं प्रशमयन्
भवत् भक्तोत्तंसं झटिति कुरु मां कंसदमन ॥९॥

மருத்₃கே₃ஹாதீ₄ஶ த்வயி க₂லு பராஞ்சோ(அ)பி ஸுகி₂நோ
ப₄வத்ஸ்நேஹீ ஸோ(அ)ஹம் ஸுப₃ஹு பரிதப்யே ச கிமித₃ம் |
அகீர்திஸ்தே மா பூ₄த்₃வரத₃ க₃த₃பா₄ரம் ப்ரஶமயந்
ப₄வத் ப₄க்தோத்தம்ஸம் ஜ₂டிதி குரு மாம் கம்ஸத₃மந || 9||

9. உன்னிடம் பக்தியில்லாதவர்கள் சௌக்யமாய் இருக்கிறார்கள். உன்னிடம் பக்தியாய் இருக்கும் நானோ கஷ்டப்படுகிறேன். ஆச்சர்யம்! உன்னை நாடியவர்களைக் கஷ்டத்திற்கு உள்ளாக்கிய பழி உனக்கு வரக்கூடாது. ப்ரபோ! கம்ஸனை வதம் செய்தவனே, என் வ்யாதியைப் போக்கி என்னை ஆட்கொள்ளவேண்டும்.

किमुक्तैर्भूयोभिस्तव हि करुणा यावदुदिया-
दहं तावद्देव प्रहितविविधार्तप्रलपितः ।.
पुरः क्लृप्ते पादे वरद तव नेष्यामि दिवसा-
न्यथाशक्ति व्यक्तं नतिनुतिनिषेवा विरचयन् ॥१०॥

கிமுக்தைர்பூ₄யோபி₄ஸ்தவ ஹி கருணா யாவது₃தி₃யா-
த₃ஹம் தாவத்₃தே₃வ ப்ரஹிதவிவிதா₄ர்தப்ரலபித​: |
புர​: க்ல்ருப்தே பாதே₃ வரத₃ தவ நேஷ்யாமி தி₃வஸா-
ந்யதா₂ஶக்தி வ்யக்தம் நதிநுதிநிஷேவா விரசயந் || 10||

10.  தேவா! அதிகமான சொற்கள் கூறி என்ன பயன்? உனக்கு எப்போது என் மேல் கருணை உண்டாகுமோ உண்டாகட்டும். அதுவரை, அழுது புலம்பாமல், என்னால் முடிந்தவரைக்கும் உன்னை ஸ்தோத்திரம், நமஸ்காரம் செய்து உன் பாதங்களில் பணிவேன். இதுவே என் முடிவு.

Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 12

Sriman Narayaneeyam | ஸ்ரீமந் நாராயணீயம் - தசகம் 12 12.   பூமியும்  பூவராஹனும் स्वायम्भुवो मनुरथो जनसर्गशीलो दृष्ट्वा महीमसमये सलिले निमग्ना...